பருத்தி

பருத்திக் காய் அந்துப்பூச்சி

Anthonomus grandis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பூவின் மொட்டுகளில் சிறிய துளைகள் ஏற்பட்டு, அவை பழுப்பு நிறமாகி விழுந்துவிடும்.
  • மலர்கள் மஞ்சள் நிறமாகி, முன் கூட்டியே விழுந்துவிடும்.
  • காய்களில் பழுதடைந்த வளர்ச்சியோ அழுகலோ ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

முதிர்ச்சியடைந்த பருத்திக் காய் அந்துப்பூச்சிகள், மொட்டுகளோ காய்களோ போன்ற பூக்கும் அல்லது பழம்தரும் அமைப்புகளையும், எப்போதாவது இலைக் காம்புகளையும், நுனிகளையும் உணவாகக் கொள்கின்றன. மொட்டுக்களின் பக்கங்களில் இருக்கும் சிறிய உணவுத் துளைகளைக் கொண்டோ, முட்டையிட்ட இடங்களில் இருக்கும் மறு போன்ற வளர்ச்சியைக் கொண்டோ, தொடக்க நிலைத் தாக்குதலை அறிந்து கொள்ளலாம். பூ மொட்டுகளில் ஏற்படும் சேதங்கள், நிறத்தை இழக்கச் செய்து பூக்களும், சிறு காய்களும் (லார்வாக்களை உள்ளே கொண்டு) வீணாகிவிடுவதையோ, முன் கூட்டியே உதிர்வதையோ ஏற்படுத்துகின்றன. பெரிய, துளையிடப்பட்ட காய்கள் பொதுவாக பயிரிலேயே, திறக்காமலேயே கூட இருக்கும். இல்லையென்றால், அவற்றை அழுகச் செய்யும் சந்தர்ப்பவாத நோய்க் கிருமிகள் தாக்கக்கூடும். தாவரத்தின் இனப்பெருக்க வளர்ச்சியின் போது, வளர்ந்த பூச்சிகள் இலைக் காம்புகளை உண்டால், இலைகளைச் சுருண்டு வாடச் செய்து, ஆனாலும் தண்டுகளோடு இணைந்தே இருக்கச் செய்யும், இந்தப் பண்பு பொதுவாக "கருப்புக் கொடிகள்" என்று வழங்கப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காடொலக்கஸ் கிரேன்டிஸ் போன்ற ஒட்டுண்ணி குளவிகளை உட்புகுத்தியோ, ஊக்குவித்தோ அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பூஞ்சை பியூவேரியா பாசியனா, பாக்டீரியம் பாசிலஸ் துரிங்க்ஜியென்ஸிஸ் அல்லது சிலோ இரிடிசென்ட் வைரஸ் (சிஐவி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயிர்-பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். செயற்கை பைரெத்ராய்ட் பூச்சிக்கொல்லிகளையும் மற்றும் டெல்டாமெத்ரின் போன்ற பொருட்களையும் பருத்திக் காய் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். ஈரப்பதம் நிறைந்த சுழ்நிலைகள் சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கின்றன. பெரோமோன் பொறிகளை (பூச்சிக்கொல்லி அல்லது உயிரின-அடிப்படியிலான முகவர்களை சேர்த்து) அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உபயோகிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வளர்ந்த மற்றும் சின்னஞ்சிறிய அந்தோனோமஸ் கிரேன்டிஸ் என்னும் பருத்தி காய் அந்துப்பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன, முதிர்ந்த பூச்சிகள் 6 மிமீ நீளம் கொண்ட நீண்ட மெல்லிய மூக்கைக் கொண்டவை. மேலும் அவை கருப்பு, பழுப்பு சார்ந்த சிவப்பு நிறத்தில் இருந்து பழுப்பு அல்லது கிட்டத்தட்ட கருப்பு வரையான நிறத்திலும் காணப்படும். இவை பருத்தி தோட்டங்களிலோ அவற்றின் அருகிலோ உள்ள, நன்கு வறண்டப் பகுதிகளில் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. வளர்ச்சியற்ற இந்த காலப்பகுதிக்குப் பிறகு, அவை, வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்து கோடையின் இடைக்காலம் வரை வெளிப்பட்டு, வசந்த காலத்தின் பிற்பகுதியில் அதிகமாக வெளிவந்து , பருத்தி காய்கள் வளரும் காலத்தில், பருத்தி தோட்டங்களுக்குள் நுழைகின்றன. பெண் பூச்சிகள், வளர்ந்து வரும் பருத்தி காய்களில் முட்டைகளை இடுகின்றன, பொதுவாக ஒரு மொட்டுக்கு ஒரு முட்டையை இடுகின்றன. க்ரீம் -வெள்ளை நிறத்தில், கால்களற்ற, C-வடிவ லார்வாக்கள் மொட்டிற்கு உள்ளே அல்லது காய்களுக்கு உள்ளே, 10 நாட்கள் வரை உண்டு கழித்து, பின்னர் அங்கு கூட்டுப் புழுவாக வளர்கின்றன. இதன் வாழ்க்கைச் சுழற்சி முட்டையில் இருந்து முதிர்ந்த பூச்சிவரை வளர கோடைக் காலத்தில் மூன்று வாரங்கள் பிடிக்கும். இந்த பருத்திக் காய் அந்துப்பூச்சிகள் ஒரு வருடத்திற்கு 8-இல் இருந்து 10 தலைமுறைகள் வரை எட்டக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் இருக்கும் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும்.
  • செடிகளைப் பருவ காலத்தில் தாமதமாக நடுவதன் மூலம் பூச்சிகளின் அதிகமான எண்ணிக்கையைத் தவிர்க்கலாம்.
  • கிடைத்தால் எதிர்ப்பு சக்தி வாய்ந்த அல்லது சமாளிக்கும் திறன் வாய்ந்த வகைகளைத் தேர்வுசெய்யவும் (பல கடைகளில் இவை கிடைக்கின்றன).
  • பூச்சிகளின் அறிகுறிகளுக்குத் தொடர்ந்து பருத்தித் தோட்டத்தைக் கண்காணிக்கவும்.
  • அதிகப்படியான உரமிடுதலையும், அதிக நீர்ப்பாசனத்தையும் தவிர்க்கவும்.
  • முதிர்ச்சி அடையாத பருத்தி அந்துப்பூச்சியின் நிலைகள் வெப்பத்தாலும் வறட்சியாலும் பாதிப்படைய கூடியவை.
  • ஆகையால், மீதமுள்ள லார்வாக்களை அல்லது கூட்டுப்புழுக்களை பாதகமான வானிலைக்கு வெளிப்படுத்த, தாவரக் குப்பைகளை வயல்களிலிருந்து நீக்கிவிடவும்.
  • அறுவடைக்குப் பின் தாவர மிச்சங்களை உழ வேண்டாம், வயலிலிருந்து குப்பைகளை மட்டும் அகற்றவும்.
  • தோட்டங்களுக்கோ, வயல்களுக்கோ இடையே பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய தாவர பொருட்களின் போக்குவரத்தை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க