பருத்தி

பருத்தியில் நாற்றப் பூச்சி

Euschistus servus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • காய்கள் மேலோட்டமாக, கறைபடிந்து, பின்னிப் பிணைந்த நார்களைப் போல் ஆகிவிடும்.
  • விதைகள் சுருங்கிவிடும், இளம் காய்கள் உதிர்ந்துவிடும்.
  • உள்புற கார்ப்பல் சுவர்களில் மரு போன்ற வளர்ச்சிகள் தோன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

நாற்றப் பூச்சிகள், பருத்தியின் மொட்டுக்களையும் காய்களையும் உணவாகக் கொள்கின்றன. அவை முக்கியமாகப் பழைய காய்களைத் தாக்குகின்றன. காய்கள் பின்னர், மேலோட்டமாக, கறை படிந்து, பின்னிப் பிணைந்த நார்களைப் போல் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட காய்களின் விதைகள் சுருங்கி, காய்கள் திறக்காமலே போய்விடும். இளம் காய்கள் சேதமடைந்திருந்தால், அவை உதிர்ந்துவிடக்கூடும். காய்களின் உட்புறத்தில், குறிப்பாக ஊடுருவல் நடந்த உள்புற கார்ப்பல் சுவரில் ஏற்படும் மரு போன்ற வளர்ச்சியோடு, வெளிப்புறச் சிதைவுகள் தொடர்புடையன. விதையை உண்ணுவதால், குறைந்த பருத்தி உற்பத்தியும், உண்ணப்பட்ட இடங்களில், பருத்தி கறை அடைவதால், தெளிவான தரநிலை இழப்பும் ஏற்படுகின்றன. காய்களை அழுக வைக்கும் சந்தர்ப்பவாத உயிரினங்களின் நோய்த் தொற்றை இந்த நாற்றப் பூச்சிகள் எளிதாக்குவதும் அறிந்த விஷயமே.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி டக்கினிட் ஈக்கள் மற்றும் குளவிகள் தம் முட்டைகளை நாற்றப் பூச்சியின் முட்டைகளோடு இடுகின்றன, பின்னர் அவற்றின் முட்டைப்புழுக்கள், பொரிந்து வரும் புழுக்களை உணவாக்கிக் கொள்கின்றன. பறவைகளும் சிலந்திகளும் கூட நோய்த் தொற்றைக் குறைக்க உதவுகின்றன. யூக்கலிப்டஸ் யூரோகிராண்டிஸ்-ன் எண்ணெய், பூச்சிகளுக்கும் அவற்றின் புழுக்களுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். பைரேத்ராயிட் வகையின் பூச்சிக்கொல்லிகளை விதைகளில் பயன்படுத்துவது, சிறிது கட்டுப்பாட்டை வழங்கி, நாற்றுக்களில் சேதத்தை தவிர்க்கக்கூடும். டைக்ரோட்டோஃபோஸ் மற்றும் பைஃபென்த்ரின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளின், இலைகளின் மீதான பயன்பாடு, எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

சாக்கடையின் கறைகள், வேலி வரிசைகள், பலகைகளுக்கு அடியில், பட்டுப் போன களைகள், மண்ணில் படரும் புதர்கள், கற்கள் மற்றும் மரப்பட்டைகளுக்கு கீழ், இது போன்ற பாதுகாப்பான பகுதிகளில், வளர்ந்த பூச்சிகள், குளிர் காலத்தைக் கழிக்கின்றன. வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்-க்கும் மேல் அதிகரிக்கும் வசந்த காலத்தின் முதல் கட்ட வெதுவெதுப்பான நாட்களில் அவை செயலில் இறங்கும். வழக்கமாக முதல் தலைமுறை காட்டுப் பயிர்களில் உருவாகிறது, அதே நேரத்தில் இரண்டாம் தலைமுறை பொதுவாக நடவு செய்த பயிர்களின் மீது உருவாகிறது. ஒவ்வொரு பெண் பூச்சியும் 18 முட்டைக் கூட்டங்களை இடும், இது 100 நாட்களில் சராசரியாக சுமார் 60 முட்டைகளாக ஆகிவிடும். வளர்ந்த பூச்சிகள் வலுவோடு பறக்க வல்லவை. அவை உடனடியாக களைகளுக்கும், பிற மாற்று மூலப் பயிர்களுக்கும் இடையே இடம் மாறும்.


தடுப்பு முறைகள்

  • உயர் எண்ணிக்கையைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே பயிரிடவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயலிலிருந்து களைகளை அப்புறப்படுத்தவும்.
  • வயல்களுக்கு இடையே உள்ள தடைகள் வண்டுகள் நகர்வதை குறைக்க உதவும்.
  • அறுவடைக்குப் பின், தாவர மிச்சங்களை வயல்களிலிருந்து அகற்றிவிடவும்.
  • உழவு செய்யாத பழக்கமோ, தழைக்கூளம் இருப்பதோ நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை ஊக்குவிக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க