மற்றவை

மக்காச்சோளத்தின் குறைந்த தண்டு துளைப்பான் நோய்

Elasmopalpus lignosellus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • கம்பளிப்பூச்சிகள் காம்புகள், கதிர்கள் மற்றும் தண்டுகளின் அடிப்பகுதியில் துளையிடுகின்றன.
  • தண்டுகளின் உட்புற திசுக்களை உட்கொள்ளும் இவை அந்த இடங்களில் அதிகளவிலான பூச்சிக்கழிவுகளை விட்டுச் செல்கின்றன.
  • இந்தக் கழிவுகள் நுழைவுப்பகுதிகளைச் சுற்றி காணப்படுகின்றன.
  • பயிர்கள் வழக்கமாக உருமாற்றம் அடைந்து, குறைந்த கதிர்களுடன் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
  • வாடிப்போன மற்றும் தளர்ந்த தோற்றம் கொண்டதாக இருப்பது இதன் பிற அறிகுறிகளாகும்.
  • சிலவேளைகளில் பயிர்கள் சாய்தலும் அல்லது அழிதலும் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

எலாஸ்மோபால்பஸ் லிக்னோசெல்லஸ் வகையினைச் சேர்ந்த கம்பளிப்பூச்சிகள் சோளத்தின் இலைகளை உண்ணுகின்றன, ஆனால் நாற்றுகளின் பிந்தைய நிலையில் இப்பூச்சிகள் தண்டுகள் மற்றும் கதிர்களின் அடிப்பகுதியில் துளையிடுவதன் மூலம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தண்டுகளின் உட்புற திசுக்களை உட்கொள்ளும் இவை அந்த இடங்களில் அதிகளவிலான பூச்சிக்கழிவுகளை விட்டுச் செல்கின்றன. இந்தக் கழிவுகள் நுழைவுப்பகுதிகளைச் சுற்றி காணப்படுகின்றன. இதனை பயிர்கள் இறந்ததற்கான அறிகுறிகள் என அழைப்பர். பயிர்கள் வழக்கமாக உருமாற்றம் அடைந்து, குறைந்த கதிர்களுடன் வளர்ச்சி குன்றி காணப்படும். நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்காததால், பயிர்கள் வாடி, தளர்ந்த தோற்றத்துடன் காணப்படும். சிலவேளைகளில் பயிர்கள் சாய்தலும் அல்லது அழிதலும் ஏற்படும். சூடான, உலர்ந்த சூழல்களுக்குத் தகுந்தாற்போல இவை மாறிக்கொள்ளும், வெப்பமான மற்றும் உலர் வானிலைகளில் இவை அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பூச்சிகளுக்கு பல எதிரிகள் உள்ளன, ஆனால் இவை பாதுகாப்பாக தண்டுகள் மற்றும் கதிர்களில் பதுங்கிக் கொள்கின்றன, எனவே இவற்றினைக் கட்டுப்படுத்துவது சிரமம். சிலவேளைகளில் ஓர்கிலஸ் எலஸ்மோபால்பி மற்றும் செலோனஸ் எலஸ்மோபால்பு போன்றவற்றைச் சேர்ந்த ஒட்டுண்ணி பிராக்கோனிட் குளவிகள் பாதிப்பினை ஏற்படுத்தும் பூச்சிகளை அழிக்கின்றன. அணுக்கரு பாலிஹெட்ரோசிஸ் வைரஸ், ஆஸ்பெர்கில்லஸ் ஃப்லாவஸ் பூஞ்சைகள் மற்றும் பெவேயிரியா பாசியானா அல்லது பாக்டீரியம் பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட உயிரி-பூச்சிக்கொல்லிகள் நோய் பாதிப்பினைக் கட்டுப்படுத்த உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

தானியம் போன்ற அல்லது திரவ கலவைகளை வரப்புகளில் பயன்படுத்தி இளம் உயிரிகளை அழிக்கலாம். டியோடிகார் மற்றும் ஃபுராடியோகார்ப் போன்றவை கலந்த பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள் சோளத்தில் சிறந்த பலனளிக்கும். குளோர்பைரிபோஸ் மற்றும் டியோடிகார்ப் போன்றவை கலந்த திரவங்களை தெளித்தல் முறையில் இலைகளில் பயன்படுத்துவதும் நோய் தொற்றினைக் குறைக்க உதவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பூச்சிகள் இருக்கும் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்து அவற்றின் நிறம் அமையும். ஆண் பூச்சிகளின் முன் இறக்கைகள் பழுப்பு-மஞ்சள் நிறத்தில், சிதறிய அடர் புள்ளிகளை ஓரங்களில் நெருக்கமாகக் கொண்டிருக்கும். இவற்றின் ஓரங்களில் அகலமான அடர் பழுப்பு நிற பட்டை காணப்படும். பெண் பூச்சிகளின் முன் இறக்கைகள் கரி போன்ற கருப்பு நிறத்தில், சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு செதில்களை கொண்டிருக்கும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் பின் இறக்கைகள் வெள்ளி போன்ற சாயங்களுடன் காணப்படும். தண்டுகளின் அடிப்பகுதியில் அல்லது உலர் மண்ணின் மேற்புறத்தில் பெண் பூச்சிகள் பச்சை நிற முட்டைகளை இடுகின்றன. இளம் உயிரிகள் மெல்லியதாக, ரோமங்களுடன், கோடுகள் கொண்ட ஊதா மற்றும் வெள்ளை நிற பட்டைகளை தனது உடலமைப்பில் கொண்டிருக்கும். அவற்றினை தொந்தரவு செய்யும்போது அதிவேகத்தில் இயங்கும். பட்டுபோன்ற வலையினால் ஆன குழாய்கள் அல்லது சுரங்க அமைப்புகளில் இவை தங்கும். இந்த அமைப்புகள் மேற்புற மண்ணிற்கு சிறிது அடியில் இருக்கும். வேர்கள் மற்றும் பயிர்களின் திசுக்களில் ஊட்டம் பெறும்போது இவை வெளியே வரும். முக்கியமாக பல ஆண்டுகளாக நன்கு உலர்ந்திருக்கும் உப்பு மண் இந்த பூச்சிகளுக்கு ஏதுவானதாகும். நிலத்தின் 80% அளவிற்கு நீர்ப்பாசனம் செய்வது பூச்சிகளின் எண்ணிக்கையினைக் கட்டுபடுத்த உதவும்.


தடுப்பு முறைகள்

  • குறித்த காலத்திற்கு முன்னதாகவே பயிரிட்டு பூச்சிகளின் உச்சக்கட்ட படையெடுப்பை தவிர்க்கவும்.
  • தொடர்ச்சியாக நீர்ப்பாசனம் செய்து மண்ணின் ஈரப்பதத்தினை நிலைப்பெறச் செய்யவும்.
  • ஒளி அல்லது பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கவும்.
  • நிலத்திற்குள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் மற்றும் பிற தேவையற்ற பயிர்கள் இருப்பின் நீக்கவும்.
  • மண்ணிலுள்ள இளம் உயிரிகளின் வாழ்க்கைச் சுழற்சியினைத் தடுக்க, விதைத்தலுக்கு முன்பு நன்கு ஆழமாக உழுதல் வேண்டும்.
  • கரிம பொருட்களின் எஞ்சிய பகுதிகளை நிலத்திலேயே விட்டுவிடவும், இதன் மூலம் பூச்சிகள் இவற்றிலிருந்து ஊட்டம் பெற்றுவிட்டு, நாற்றுக்களை பாதிக்காது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க