உளுந்து & பச்சை பயிறு

சோயாபீன் கம்பளிப்புழு

Chrysodeixis includens

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் "ஜன்னல் சாளரப்பிரிவு" காணப்படும்.
  • ஓரங்களிலிருந்து காணப்படும் உண்ணும் சேதங்கள், ஒழுங்கற்ற துளைகள் மற்றும் கந்தலான ஓரத்திற்கு வழிவகுக்கும்.
  • முதிர்ந்த அந்துப்பூச்சிகள் அடர் பழுப்பு நிறமாகவும், முன் இறக்கைகள் வெண்கலத்திலிருந்து பொன்னிற மினுமினுப்புடன் பழுப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

கம்பளிப்புழுக்கள் தாவர பாகங்களை உண்ணுவதால் சேதங்கள் ஏற்படுகிறது. இளம் முட்டைப்புழுக்கள் இலைகளின் அடிப்பாகத்தை உண்டு, மேற்பகுதியை உறிஞ்சி,சில நேரங்களில் 'உண்ணும் ஜன்னல்' என்றழைக்கப்படும் தெளிவான, சாளரம் போன்ற உண்ணும் அமைப்புகளை ஏற்படுத்துகிறது. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் இலை விளிம்பில் தொடங்கி, நடு நரம்பை தவிர்த்து முழு இலையையும் உண்ணுகிறது. உண்டு, ஒழுங்கற்ற துளைகள் மற்றும் கரடு முரடான ஓரங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறான இலை உதிர்வு, தாவரத்தின் கீழ்ப்புற பாகங்களை உண்ணுதல், கவிகைக்குள் உண்ணுதல், மற்றும் மேல்புறம் வெளிப்புறமாக உண்ணுதல் போன்றவையும் காணப்படும். இது அரிதாக பூக்கள் அல்லது காய்களையும் தாக்குகிறது. இருப்பினும், தாவரங்களில் இலை உதிர்வு ஏற்படும்போது, முட்டைப்புழுக்கள் பெரும்பாலும் சோயாமொச்சை காய்களையே தொடர்ந்து உண்ணும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாராசாய்ட் வாஸ்ப்ஸ் போன்ற சோயாபீன் கம்பளிப்புழுக்களின் இளம்பூச்சிகளை உண்ணும் இயற்கை எதிரிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள் கோபிடொசோமா டிரங்கடெல்லம், காம்பொலெடிஸ் சோனோரென்சிஸ், கசினரியா ப்லசியே, மேசோகோரஸ் டிஸ்சிடெர்கஸ் மற்றும் மைக்ரோகரோப்ஸ் பைமகுலடா, கோடெசிய க்ரேனடென்சிஸ் மற்றும் ஒட்டுண்ணி ஈக்களான வோரியா ருராலிஸ், படெல்லௌ சிமிலிஸ் அத்துடன் யூபோரோசெரா மற்றும் லெஸ்பெஸியா குழுவின் சில பூச்சிகளும் அடங்கும். கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த பகுலோவைரஸ் அல்லது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் அடிப்படையிலான தயாரிப்புகளை சோயாபீன் கம்பளிப் புழுக்களின் மீது பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சோயாபீன் கம்பளிப்புழு சோயாபீன் பயிர்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுத்துபவையாக இருப்பதில்லை. மேலாண்மை குறித்த முடிவுகள் எடுக்கும்போது இலையில் பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளைக் கணக்கில் கொள்ளவும். இலை உதிர்தல் பூக்கள் உருவாகும் முன் 40% இருந்தால், காய்கள் உருவாகும்போது மற்றும் சதைகள் உருவாகும்போது 20% இருந்தால் அல்லது காய்கள் உருவாகுதல் முதல் அறுவடை வரை 35% இருந்தால் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
மீதாக்ஷிபெனோசைடு அல்லது ஸ்பிநெடோராம் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். பைரித்ராய்ட்ஸ் குடும்ப பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்த தயாரிப்புகளுக்கான எதிர்ப்பு திறன் உருவாக்குவதாக விவரிக்கப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது சோயாமொச்சை கம்பளிப்புழு சூடோப்ளூசியா இன்குழுடென்ஸ் என்பவற்றின் முட்டைப்புழுவால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும், அவற்றின் முன் இறக்கைகள் வெண்கலத்திலிருந்து பொன்னிற மினுமினுப்புடன் பழுப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும்.அவற்றின் மையப்பகுதியில் இரண்டு வெளிப்படையாக தெரியும் வெள்ளி கோடுகள் காணப்படும். பெண் அந்துப்பூச்சி இலைகளுக்கு அடியில், தாவரத்தின் கீழ்ப்பகுதியில், கவிகைகளுக்குள் முட்டைகளை இடும். முட்டைப்புழுக்கள் பச்சை நிறத்தில் இருக்கும், அவற்றின் பக்கவாட்டிலும் முதுகுப்புறத்திலும் வெள்ளை கோடுகள் காணப்படும். உடல் முழுவதும் ஆங்காங்கே முறையற்று இருக்கும் மூன்று ஜோடி கால்களால் இந்த பூச்சிகள் அடையாளம் காணப்படுகின்றன (உடலின் மையப் பகுதியில் 2, வால் பகுதியில் ஒன்று). இந்த அமைப்புகளால் முட்டைப்புழுக்கள் நகரும்போது அதன் முதுகு பகுதியை திமில்த்து நகருகிறது, எனவேதான் இது "வளையப்புழு" என்ற பொதுவான பெயரை பெற்றுள்ளது. இலைகளின் அடிப்பகுதியில் தளர்வான கூட்டை கூட்டுப்புழுக்கள் கட்டுகிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை அல்லது நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • சீக்கிரம் நடவு செய்ய வேண்டும் மற்றும் மோசமான சேதங்களைத் தவிர்க்க சீக்கிரம் முதிர்ச்சி அடையும் தாவர வகைகளை பயன்படுத்தவும்.
  • பூச்சியின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை, குறிப்பாக கீழ்ப்புற விதானத்தை கண்காணிக்கவும்.
  • முட்டைப்புழுக்கள் அல்லது பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி, அழித்துவிடவும்.
  • பருவக்காலத்தில் தாவரங்களை ஆரோக்கியமாகவும் வீரியமாகவும் வைத்திருக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளின் மக்களை பாதிக்காதபடி பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்.
  • முட்டைப்புழுக்களை உண்ணும் பறவைகளுக்காக திறந்த வெளிகள் மற்றும் உட்காரும் இடங்களை அமைக்கவும்.
  • அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க