கத்திரிக்காய்

கத்திரிக்காய் இலை சுருட்டுப்புழு

Eublemma olivacea

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் தனது ஊடச்சு வழியாக நீளவாக்கில் சுருண்டு காணப்படும்.
  • சுருண்டிருக்கும் இலைப்பரப்பினுள் உள்ள திசுக்களை முட்டைப்புழுக்கள் உண்ணும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறத்தில், வாடி, உலர்ந்து காணப்படும்.
  • கடுமையான நோய்தொற்றுகள் இலை உதிர்வுக்கு வழிவகுத்து, குறிப்பிடத்தக்க விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் மட்டுமே இலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பகால அறிகுறிகள் நீளவாட்டில் சுருண்ட இலைகள் முட்டைப்புழுக்கள் இருக்கும் இடத்தில் காணப்படும். அங்கிருந்து, அவை இலைகளின் உள்புற பச்சை திசுக்களை மெல்லும். சேதங்கள் பெரும்பாலும் தாவரங்களின் மேற்பாகங்களில் தோன்றும். சுருண்ட இலைகள் பழுப்பு நிறமாகி, வாடி, உலர்ந்து காணப்படும். சேதம் கடுமையானதாக இருக்கும்போது, முழு தாவர பகுதிகளும் பழுப்பு நிறமாகி, அதனைத் தொடர்ந்து இலை உதிர்வு ஏற்படுகிறது. பூச்சிகளின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தாவிட்டால், இது குறிப்பிடத்தக்க விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இந்தப் பூச்சி அரிதாகவே தாவர வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காடிசியா எஸ்பிபி.போன்ற ஒட்டுண்ணி குளவி இனங்களின் உயிரியல் கட்டுப்பாடு மூலம் தொற்றுநோயைக் குறைக்கலாம். புழுக்களை கட்டுப்படுத்த உதவும் மன்டிஸ் அல்லது நன்மை பயக்கும் தம்பலப் பூச்சி போன்ற இறைப்பிடித்துண்ணிகளின் மூலமும் கட்டுப்படுத்தலாம். ஸ்டீநர்நீமா எஸ்பிபி போன்ற நூற்புழுக்கள் கூட இந்தப் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் முதலில் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், கத்தரிக்காய் இலை சுருட்டுப்புழுவின் எண்ணிக்கையை குறைக்க மாலத்தியான் கொண்ட தெளிப்பான் தயாரிப்புகளை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த புழுக்கள் நடுத்தர அளவில், லேசான பழுப்பு அல்லது ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும் இவை தனது முன்இறக்கையின் வெளிப்புறத்தில் பெரிய மூன்று பக்க கருத்த திட்டுக்களை கொண்டிருக்கும். பின்இறக்கைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். பெண்புழுக்கள் கொத்தாக 8 -22 முட்டைகளை இலைகளின் மேற்புறத்தில் இடும், பெரும்பாலும் இளம் இலைகளில் இடும். சுமார் 3-5 நாட்களுக்கு பிறகு, அதிலிருந்து முட்டைப்புழுக்கள் வெளியேவரும். அவை ஊதா-பழுப்பு நிறத்தில், தடித்த உடலுடன், நீண்ட முடிகளை தனது முதுகுப்பகுதியில் கொண்டிருக்கும். முட்டைப்புழுக்களின் வளர்ச்சி காலம் சுமார் 4 வாரங்கள் ஆகும். பின்னர் அவை சுருட்டு இலையினுள் கூட்டுப்புழுவாக மாறுகிறது. சுமார் 7-10 நாட்களுக்கு பிறகு புதிய தலைமுறையான அந்துப்பூச்சிகள் வெளியே வரும். காலநிலை நிலைமைகளைப் பொறுத்து, வருடத்திற்கு 3-4 தலைமுறைகள் வரை இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • பருவகாலத்தின் இறுதியில் நடவு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • நல்ல உரங்களைக் கொண்டு ஆரோக்கியமான தாவரங்களை வளர்க்க திட்டமிடவும்.
  • நோய்க்கான ஏதேனும் அறிகுறிகள் அல்லது புழுக்கள் தென்படுகிறதா என உங்கள் தாவரங்களையும், வயல்களையும் தொடர்ந்து சோதிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கம்பளிப்புழுக்களை எடுத்து அகற்றிவிடவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள், புழுக்கள் மற்றும் உங்கள் கழிவுகளை அகற்றி, அவற்றை எரித்து அழித்துவிடவும்.
  • பூச்சியின் இயற்கையான எதிரிகளை அழிக்கும் வகையில் பூச்சிக்கொல்லிகளை கண்மூடித்தனமாக உபயோகிப்பதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க