கரும்பு

ஊதா நிறத் தண்டு துளைப்பான்

Sesamia inferens

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மலர்களின் அடிப்பகுதியில் அல்லது தண்டுகளில் கம்பளிப்பூச்சிகள் துளையிடும்.
  • இந்தப் பயிர்களின் பகுதிகளில் வெளியேறிய துளைகள் கொண்ட அடையாளங்கள் காணப்படும்.
  • நீர் பற்றாக்குறை மற்றும் ஊட்டச் சத்துக்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட திசுக்கள் வாடிப்போகும்.
  • நீளவாக்கில் திறந்து பார்த்தால் தண்டுகளில் 'இறந்த இதயங்கள்' அறிகுறிகள் தென்படும், இவற்றிற்குள் இளம் உயிரிகள் மற்றும் பூச்சிகளின் கழிவுகள் உள்ளே இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

7 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

கம்பளிப்பூச்சிகள் ஊட்டம் பெறுவது, பயிர்களுக்கு ஏற்படும் முதன்மை பாதிப்பாகும். அவைத் தண்டுகள் மற்றும் கதிர்களின் அடிப்பகுதியில் துளையிட்டு மற்றும் உள்ளே சென்று உட்புறப் பொருட்களில் ஊட்டம் பெறுகின்றன, இதன் மூலம் பயிருக்குள் செல்லும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைபடும். தண்டுகள் மற்றும் கதிர்களில் பூச்சிகள் வெளியேறிய துளைகள் தென்படும். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள் தடைபடுவதால் பயிரின் பாகங்கள் வாடிப்போகும். நீளவாக்கில் திறந்து பார்த்தால் தண்டுகளில் 'இறந்த இதயங்கள்' அறிகுறிகள் தென்படும், இவற்றிற்குள் இளம் உயிரிகள் மற்றும் பூச்சிகளின் கழிவுகள் உள்ளே இருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டெலெனோமெயஸ் மற்றும் டிரைகோக்ரம்மா வகையினைச் சேர்ந்த எண்ணற்ற ஒட்டுண்ணி குளவிகள், பாதிப்பினை ஏற்படுத்தும் பூச்சிகளின் முட்டைகளினுள் முட்டையிடுகின்றன, மற்றும் இதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். உதாரணமாக, முளைத்த 12 மற்றும் 22 ஆம் நாட்களில் டிரைகோக்ராமா கிலோனிஸ் (ஒரு ஹெக்டருக்கு 8 அட்டைகள்) என்னும் முட்டை ஒட்டுண்ணிகளை வெளியிடுதல். அபேண்டிலிஸ் பிளாவிப்ஸ் குளவிகள், பிராகான் கினென்சிஸ் மற்றும் ஸ்டர்மியாப்சிஸ் இன்பெரென்ஸ் போன்றவை இந்த நோய்ப்பூச்சியின் முட்டைப்புழுக்கள் மீது ஒட்டுண்ணி போல் படர்ந்து அவற்றை அழிக்கும். ஃக்ஸாந்தோபின்ப்லா மற்றும் டெட்ராஸ்டிசஸ் போன்றவற்றின் உயிரிகள், பாதிப்பினை ஏற்படுத்தும் உயிரிகளின் கூட்டுப்புழுக்களைத் தாக்குகின்றன. பெவேரியா பாஸியானா மற்றும் பாக்டீரியா பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் பொருளை அடிப்படையாகக் கொண்ட உயிரி-பூச்சிக்கொல்லிகளை ஊதா நிறத் தண்டு துளைப்பானுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குறுமணிகள் அல்லது தெளிக்கும் வடிவில் (குளோரன்டிரினிலிபிரோல் உடன், உதாரணமாக) பூச்சிக்கொல்லிகளுடன் பிராப்பிலிட்டிக் சிகிச்சைகளை இலைத்திரள்களில் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

செசெமியா இன்ஃபெரன்ஸ் என்னும் ஊதா தண்டு துளைப்பானால் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகிறது. தண்டுகள் அல்லது மண்ணிலுள்ள, பயிரின் எஞ்சிய பாகங்களில் இந்த இளம் உயிரிகள் குளிர்காலம் முழுவதும் உயிர்வாழும், மற்றும் வசந்த காலத்தில் வானிலை சரியாக அமையும்பட்சத்தில் முதிர்ந்த பூச்சிகளாக வெளிவரும். பூச்சிகள் சிறிய, தடித்த மற்றும் இலேசான பழுப்பு நிறத்துடன், தலையில் மற்றும் உடம்பில் ரோமங்களுடன் காணப்படும். முன் இறக்கைகள் தங்கநிற ஓரங்களுடன் வைக்கோல் வண்ணத்தில் இருக்கும். பின்புற இறக்கைகள் மஞ்சள் நிற நரம்புகளுடன் கூடிய பிரகாசமான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். பெண் பூச்சிகள் கொத்துக் கொத்தாக, வட்டமான, வெளிறிய மற்றும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலான முட்டைகளை பல வரிசைகளாக இலை உறைகளுக்குப் பின்புறம் இடுகின்றன, இதன் மூலம் அந்த முட்டைகள் பூச்சிகளின் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும். கம்பளிப்பூச்சிகள் 20-25 மிமீ நீளம், சிவப்பு-பழுப்பு நிறத்திலான தலை மற்றும் கோடுகள் ஏதும் உடலில் இல்லாமல், இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். தண்டுகளில் துளையிட்டு உள்ளே செல்லும் மற்றும் அவை உட்புறத் திசுக்களில் ஊட்டம் பெறும்.


தடுப்பு முறைகள்

  • அதிகமான அளவில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்கள் கிடைத்தால் அவற்றைப் பயிரிடவும்.
  • மற்ற விவசாயிகள் பயிரிடும்போதே நீங்களும் பயிரிட்டு பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுவதைத் தவிர்க்கவும்.
  • ஒரே விதமான முதிரும் தன்மை கொண்ட பயிர் வகைகளைப் பயிரிடவும்.
  • குறித்த காலத்திற்கு முன்னதாகவே பயிரிடுவது , அதிகளவில் பூச்சிகளின் எண்ணிக்கை அமைவதைக் குறைக்கும்.
  • இலைகளை பூச்சிகள் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்க அடர்த்தியாகப் பயிர்களை பயிரிடவும்.
  • பருப்பு வகைகளை ஊடுபயிரிடவும்.
  • பூச்சிகளைக் கவர, சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை அனைத்து பக்கங்களிலும் 2-3 வரிசைகளாக நடவு செய்யவும்.
  • களத்தினைத் தொடர்ச்சியாக கண்காணித்து மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்ப் பாகங்களை நீக்கவும்.
  • போதுமான அளவிலான நைட்ரஜனை அளிப்பது மற்றும் சரியான நேரத்தில் அளிப்பதை உறுதி செய்யவும்.
  • நிலத்திற்குள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் இருப்பின் அவற்றினை நீக்கவும்.
  • சிறந்த நீர் மேலாண்மையினை மேற்கொள்வதை உறுதி செய்யவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பகுதிகளை அகற்றி மற்றும் அழிக்கவும்.
  • நீண்ட காலத்திற்கான பயிர் சுழற்சியினைப் புரவலன் அல்லாத பயிர்களுடன் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க