மற்றவை

கீழ்த்திசை படைப்புழு

Mythimna separata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகள், இலைகள் மற்றும் பயிர்க்காதுகளில் உண்ணும் சேதங்கள்.
  • இலைகளில் ரம்பம் போன்ற தோற்றம்.
  • ஈரமான, பழுப்பு நிற கழிவுக்கு அருகே உண்ணும் சேதங்கள்.
  • முன்கூட்டிய இலை உதிர்தல்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

கம்பளிப்புழுக்கள் நாற்றங்கால்கள் அல்லது இலைகளை உண்ணும். பிந்தைய நிலைகளில் இவை இளம் சோளக்காதுகளையும் தாக்கக்கூடும். இவை விருப்பமாக இலை நுனிகளையும், விளிம்புகளையும் உண்டு, மைய நரம்புகளை நோக்கி உண்ணத் தொடங்கி, ரம்பம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஈரமான பழுப்பு நிறக் கழிவு கோடுகளை, அவை உண்டு ஏற்படுத்திய சேதங்களுக்கு அருகே காண முடியும். எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது இலை உதிர்வு ஏற்படும். பொதுவாக சோளக்காதுகள் மீதான நேரடியான சேதங்கள் மிகவும் குறைவானவையே, ஏனெனில் இந்தப் பூச்சிகள் பொதுவாக கீழ்ப் புற இலைகளை அதிக அளவில் உண்டு முடித்த பிறகே, தாவரங்களின் மேல் பாகங்களைத் தாக்கும். பயிர்களில் உள்ள இலைகள் உதிர்ந்த பிறகு, இவை கூட்டமாக பிற வயல்களின் மீது படையெடுக்கும், இதனால் தான் இந்த புழுக்கள் இப்பெயர் பெற்றது. புல் போன்ற மாற்றுப் புரவலன்களும் இவற்றின் பரவலுக்கு ஆதரவாக இருக்கக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பிராகொனிட் குளவி அபான்ட்டிலிஸ் ருபிக்ரஸ் மற்றும் டச்சினிட் ஈக்கள் எக்ஸோரிஸ்ட்டா சிவிஸ் முட்டைப்புழுக்களின் மீது ஒட்டுண்ணிகளைப் போன்று பற்றிப் படர்ந்து பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் நோய் ஏற்படுவதை வெற்றிகரமாகக் குறைக்கிறது. முதிர்ந்த பூச்சிகளை அழிக்க ஸ்பினோஸாட் என்பவை பொறிகளில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது நோய்க்கிருமி பூஞ்சை பௌவரியா பாசியானா மற்றும் இசாரியா ஃப்யூமோசோரோசி ஆகும். இவை முட்டைப்புழுக்களில் குடியேறி, அவற்றை கொன்று விடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தொற்றுநோய் கடுமையாக இருந்தால் மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். பகல் பொழுதின் இறுதியில், சைபெர்மெத்ரின் என்பவற்றை முட்டைப்புழுக்களுக்கு எதிராகத் தெளிக்கலாம். முளைத்த 25 - 30 நாட்களுக்குப் பிறகு சில பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, படைப்புழுக்களின் எண்ணிக்கையை பெரிதும் கட்டுப்படுத்தலாம். குளோர்பைரிபோஸ் கொண்ட விஷப் பொறிகளைக் கூடப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த பூச்சிகள் வெளிர் நிறம் முதல் சிவந்த பழுப்பு நிறத்தில், 4-5 செமீ இறக்கைகளுடன் மார்புப் பகுதியில் முடியினையும் கொண்டிருக்கும். அதன் முன் இறக்கைகள் சாம்பல் மஞ்சள் நிறத்தில் சிதறிய கருப்புப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். இவற்றின் நடுப்பகுதியில் தெளிவில்லாத விளிம்புகளுடன் இரண்டு சிறிய தெளிவான புள்ளிகளையும் கொண்டிருக்கும். இவற்றின் பின் இறக்கைகள் நீல சாம்பல் நிறத்தில், கருத்த நரம்புகள் மற்றும் கருத்த வெளிப்புற ஓரங்களையும் கொண்டிருக்கும். முதிர்ந்த பூச்சிகள் இரவில் செயல்படக்கூடியவை, மேலும் இவை ஒளியால் நன்கு ஈர்க்கப்படக்கூடியவை. பெண் பூச்சிகள் இலைகளுக்கு அடியில் வெளிர், பாலாடை நிற முட்டைகளை இடும். வெப்பநிலை 15° செல்சியசிற்கு அதிகமாக இருக்கும்போது, இவை அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்யும், மேலும் அந்த சூழலில் நன்கு வாழும். கம்பளிப்புழுக்கள் தடிமனாகவும் மற்றும் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிறத்தில் பொதுவாகக் காணப்படும். இவை அவற்றின் உடம்புப்பகுதி நெடுகிலும் நீளவாக்கான கோட்டையும், அதன் விலாப்புறத்தில் இந்தக் கோடு கருப்புப் புள்ளிகளாக சிதறிக் காணப்படும். இவையும் இரவில் இயங்கக் கூடியவை மற்றும் மிகவும் நன்றாக வளர்க்கப்பட்ட வயல்களில் இவை வாழும். அதிகமான மழைப்பொழிவினை தொடர்ந்த நீடித்த உலர் காலங்கள் இந்த நோய் ஏற்படுவதற்குச் சாதகமான சூழலாகும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளின் உச்சகட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க விதைக்கும் நேரங்களைச் சரி செய்யவும்.
  • நோய்ப் பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • தாவரங்களில் காணப்படும் முட்டைப்புழுக்களை அப்புறப்படுத்த வேண்டும்.
  • நோய்த் தொற்றுகளை கண்காணிக்க ஒளி அல்லது பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • வயல்களில் அல்லது அதனைச் சுற்றியுள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • முட்டைப்புழுக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றி அகழி தோண்டவும்.
  • முட்டைப்புழுக்களை மூழ்கடிப்பதற்கு விதைப்படுகைகளை தண்ணீரில் மூழ்கி எடுக்கவும்.
  • வயலில் இருந்து பயிர்க் கழிவுகளை அகற்றி மற்றும் அவற்றை எரித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க