முட்டைக்கோசு

சிறிய மற்றும் பெரிய வெள்ளை முட்டைக்கோஸ் நோய்

Pieris brassicae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மினுங்கும் வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சிகள் பயிர்களைச் சுற்றி காணப்படும் மற்றும் பச்சை-மஞ்சள் முட்டைகள் இலைகளின் அடிப்புறத்திலிருக்கும்.
  • வெளிப்புற இலைகள் மற்றும் தலைப்பகுதியில் பாதிப்புகள் காணப்படும், முட்டைக்கோஸின் மையப்பகுதியினை வெட்டும்போது இது தெரியும்.
  • கம்பளிப்பூச்சிகள் மற்றும் அவற்றின் கழிவுகளை பெரும்பாலும் பயிர்களில் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

முட்டைக்கோசு

அறிகுறிகள்

மினுங்கும் வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சிகள் பயிர்களைச் சுற்றி காணப்படும் மற்றும் முட்டையிடுவதற்கு சிறந்த இடத்தை கண்டுபிடிக்க இவை பயிர்களை சுற்றி பறந்து கொண்டிருக்கும். களத்தினை தெளிவாகக் கண்காணித்தால் பச்சை-மஞ்சள் முட்டைகள் இலைகளின் அடிப்புறத்திலிருப்பதை காண முடியும். வெளிப்புற இலைகளுக்கு ஏற்படும் சேதமும் இவை இருப்பதற்கான தெளிவான அறிகுறியாகும். வெளிப்புற இலைகளில் உள்ள துளைகளை தவிர, முட்டைக்கோஸ் தலைப்பகுதியிலும் சேதங்கள் ஏற்படும், மையப்பகுதியை வெட்டும்போது இவற்றை உட்புற இலைகளில் காணலாம். கம்பளிப்பூச்சிகள் மற்றும் அவற்றின் கழிவுகளை பெரும்பாலும் பயிர்களில் காணலாம். அனைத்து வகையிலான ப்ராசிக்கா வகை பயிர்களும் இதனால் பாதிக்கப்படும். முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கோசுக்கீரை வகைகள், ஸ்வீடே மற்றும் டர்னிப்ஸ் போன்றவை இவற்றுள் அடங்கும். இவை தவிர பிற களைகளும் இதனால் பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கையாகவே ஏற்படும் பாக்டீரியாக்கள், பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் அல்லது சாகரோபாலிஸ்போரா ஸ்பைனோசா (ஸ்பைனோசாட்) போன்றவற்றின் அடிப்படையிலான தயாரிப்புகளை இலைகளின் மேல் மற்றும் கீழ் புறங்களில் முழுமையாக தெளிக்கும்போது இரு வகை கம்பளிப்புழுக்களையும் அழித்துவிடும். இந்த பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழல்களில் தொடர்ந்திருப்பதில்லை. நெமடோட், ஸ்டெய்னெர்னேமா கார்போகேப்ஸே என்னும் நூற்புழுக்களும் கம்பளிப்பூச்சிகளுக்கு எதிரானவை மற்றும் இவற்றினை இலைகள் ஈரமாக இருக்கும்போது பயன்படுத்தவேண்டும், உதாரணமாக குளிர்ந்த மந்தமான வானிலையில் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பைரெத்ரம், லாம்டா-சைஹலோத்ரின் அல்லது டெல்டாமெத்ரின் போன்ற விரைவாக செயல்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை கம்பளிப்பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம். பைரெத்ரம் தயாரிப்புகளை பலமுறை பயன்படுத்தலாம் மற்றும் அவற்றை அறுவடைக்கு முந்தைய நாள் வரை பயன்படுத்தலாம். லாம்டா-சைஹலோத்ரின் மற்றும் டெல்டாமெத்ரின் தயாரிப்புகளை பொறுத்தவரை, அதிகபட்சமாக இரு பயன்பாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அறுவடைக்கு ஏழு நாட்கள் இடைவெளிக்கு முன்னர் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இரு வண்ணத்துப்பூச்சிகளான பியெரிஸ் ராபே மற்றும் பியெர்சி பராசிக்கே (சிறிய மற்றும் பெரிய வெள்ளை முட்டைக்கோஸ் நோய்) போன்றவற்றின் முட்டைப்புழுக்களால் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகிறது. அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் நீளம் சிறிது வேறுபடலாம் ஆனால் இவையிரண்டும் ஒத்தவை. வண்ணத்துப்பூச்சிகள் கருப்பு உடல் மற்றும் மினுங்கும் வெள்ளை இறக்கைகளுடன் கூடிய பகட்டான கருப்பு விளிம்புகளை முன் இறக்கையில் (மற்றும் இரு கருப்பு புள்ளிகள் பெண் பூச்சிகளுக்கு இருக்கும்) அமைந்திருக்கும். கூட்டுப்புழு நிலையிலிருந்து வெளிவந்த சில வாரங்களில் பெண் பூச்சிகள் மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்புறத்தில் இடுகின்றன. இவை பொரிந்து வெளிவரும் கம்பளிப்பூச்சிகள் பயிர்களின் திசுக்களை உண்ணும். சிறிய வெள்ளை வண்ணத்துப்பூச்சிகளின் கம்பளிப்புழுக்கள் முட்டைக்கோஸின் மையப்பகுதியை துளையிட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அவை வெளிறிய பச்சை நிறத்தில், சிறிய பட்டு போன்ற இழையினால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் பெரிய வகையறாக்கள் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்துடன் வெளியே தெரியக்கூடிய முடிகள் இல்லாமல் காணப்படும். அவை வெளிப்புற இலைகளில் தங்கி அவற்றிலிருந்து ஊட்டம் பெறும்.


தடுப்பு முறைகள்

  • நோய் அறிகுறிகள் குறித்து, தொடர்ச்சியாக களத்தினைக் கண்காணிக்கவும், முக்கியமாக இலைகளின் அடிப்புறத்தில் கவனிக்கவும்.
  • இலைகளில் கூட்டமாக முட்டைகள் இருந்தால் அவற்றினை நீக்கவும்.
  • இலைகளில் இருக்கும் கம்பளிப்பூச்சிகளை கைகளால் பிடித்து நீக்கவும்.
  • பூச்சிகள் நுழைய முடியாத வலைகளைப் பயன்படுத்தி பயிர்களில் பெண் பூச்சிகள் முட்டையிடுதலைத் தவிர்க்கவும்.
  • நமக்கு பயன்படும் வகையில் இருக்கும் பூச்சிகளை, பூச்சிக்கொல்லிகள் அழிக்காத வகையில் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • முட்டைக்கோசுக்கு அருகில் எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • மாற்றுப்புரவலனாக செயல்படும் களைகளை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க