தினைவகைத் தானியம்

தண்டு துளைப்பான்

Acigona ignefusalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இந்த நோய் வளரும் நுனிகள் மற்றும் இலைகளைத் தாக்குகிறது, தண்டுகளை செதுக்குகிறது.
  • சிவப்பு-பழுப்பு தலை மற்றும் வெள்ளை உடலுடன் 20 மிமீ நீளத்தில் முட்டைப் புழுக்கள் காணப்படும்.
  • முட்டைகளை குவியல்களாக இடும் மற்றும் அவை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


தினைவகைத் தானியம்

அறிகுறிகள்

தண்டு துளைப்பானின் முட்டைப்புழுக்கள் திணைகளின் இலைகள் மற்றும் இலை நுனிகளை தாக்குகிறது. முட்டைப்புழுக்கள் தண்டுகளில் துளையிட்டு, அவற்றை செதுக்குகிறது. இது இறுதியில் கன்று இறப்பதற்கு வழிவகுக்கிறது. முழுமையாக வளர்ந்த முட்டைப்புழுக்கள் சுமார் 20 மிமீ நீளத்தையும், சிவப்பு-பழுப்பு நிற தலை மற்றும் வெள்ளை நிற உடலையும், கருப்பு புள்ளிகளையும் கொண்டிருக்கும். முதிர்ச்சியடைந்த பூச்சிகள் வெள்ளை நிற இறக்கைகளுடன் 8 முதல் 15 மிமீ வரை நீளம் உடையதாக இருக்கும். தண்டு துளைப்பானின் முட்டைகள் கொத்துகளாக இலைகளின் மீது இடப்படும் மற்றும் அவை மஞ்சள் நிறத்தினைக் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நீங்கள் பெரோமோன் தூண்டில் பொறிகளின் உதவியுடன் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பொறிகளை வேலி பக்கம் (குறிப்பாக அவை திணைகளின் தண்டுகள் மற்றும் பிற புல்களால் செய்யப்பட்டிருந்தால்) மற்றும் களஞ்சியங்களின் பக்கம் வைக்க வேண்டும். பருவ காலத்தின் ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது வேப்ப எண்ணெய் பயன்படுத்துவது தண்டு துளைப்பானுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். 'தள்ளு-விலகு' முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: டெஸ்மோடியம் போன்ற பயிர்களை திணைகளோடு ஊடுபயிர் செய்யலாம். டெஸ்மோடியம், ஒரு துரத்தித் தள்ளுகிற பொருளாக செயல்பட்டு அந்துப்பூச்சிகளை திணைகளிலுருந்து 'தள்ளிவிடுகிறது'. உங்கள் தோட்டத்தின் எல்லைப்புறத்தில் நேப்பியர் அல்லது சூடான் புல் போன்ற பொறி பயிர்களை நீங்கள் வளர்க்கலாம். இந்த பயிர்கள் அந்துப்பூச்சிகளை ஈர்த்து, அதனால் அவை திணைகளிலிருந்து 'விலக்கப்பட்டுவிடும்'.

இரசாயன கட்டுப்பாடு

பூச்சிக்கொல்லிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதற்கு கடினமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றது. டைமீத்தோயேட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினால், அரிதாக செலவுகள் சமாளிக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

ஈரமான பகுதிகளில், ஆண்டுக்கு மூன்று தலைமுறை முட்டைப்புழுக்கள் தோன்றுகின்றன, வறண்ட பகுதிகளில் இரண்டு சுழற்சிகள் ஏற்படுகின்றன. தண்டு துளைப்பான் தண்டுகளை செதுக்குவதனால் , வேரிலிருந்து தாவரங்களின் பிற பாகங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படுகிறது. தண்டு துளைப்பானின் முட்டைப்புழுக்கள் பயிர்களின் கழிவுகளில் உயிர் வாழுகின்றன.


தடுப்பு முறைகள்

  • உள்ளூரில் கிடைக்கப்பெற்றால், நோய் எதிர்ப்பு திறன் கொண்ட வகைகளை பயன்படுத்தவும்.
  • தொற்றுநோயைத் தவிர்க்க சீக்கிரம் பயிர்களை நடவு செய்யுங்கள்.
  • புரவலன் தாவரங்களுக்கு மத்தியில் தட்டைப்பயிறு போன்ற புரவலன் அல்லாத தாவரங்களை நடவு செய்யவும்.
  • வயல்களை சுற்றிலும் பூக்கும் பட்டைகளை நட்டு, பூச்சிகளின் இயற்கை எதிரிகளின் (ஒட்டுண்ணி குளவிகள்) எண்ணிக்கையைத் தூண்டுங்கள்.
  • தண்டுகள் கட்டிட கட்டமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அவற்றை பகுதி முறையில் எரித்துவிடவும்.
  • அனைத்து அறுவடை கழிவுகளையும் சுத்தம் செய்து, அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க