தினைவகைத் தானியம்

தலை துளைப்பான்

Heliocheilus albipunctella

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • திணைகளின் தலைப்பகுதியில் உள்ள வளரும் தானியங்களை கம்பளிப்புழு உண்ணும்.
  • கதிர்களின் மேற்பரப்பில் கூம்பிய சூழல் தடங்கல் போன்று விதை கருக்கலைப்பு வகைப்படுத்தப்படுகிறது.

இதிலும் கூடக் காணப்படும்


தினைவகைத் தானியம்

அறிகுறிகள்

தலை துளைப்பான் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி திணை செடிகளின் வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு, கம்பளிப்புழுக்கள் கதிர்களை உண்டு, கதிருக்குள்ளேயே அதன் முட்டைப்புழு வளர்ச்சியை நிறைவு செய்கிறது. விதையின் தலை உருவாகும்போது, இளம் முட்டைப்புழுக்கள் செதில்களை துளையிட்டு, பூக்களை உண்ணுகிறது, முதிர்ச்சியடைந்த முட்டைப்புழுக்கள் பூவின் மஞ்சரிக்காம்புகளை கத்தரித்து, கதிர்கள் உருவாவதை தடுக்கிறது அல்லது முதிர்ந்த கதிர்களை விழச்செய்கிறது. முட்டைப்புழுக்கள் இடைக்காம்புகள் மற்றும் மலர்களுக்கிடையே உண்ணுவதால், அவை அழிந்த பூக்கள் அல்லது வளரும் தானியங்களை உயர்த்தி, திணைகளின் தலைப்பகுதியில் சுருள் அமைப்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஹப்ரோப்ராகன் ஹெபீட்டர் என்பது தலை துளைப்பான் பூச்சியின் இயற்கையான ஒட்டுண்ணியாகும் மற்றும் சில ஆப்ரிக்கா நாடுகளில் பாதிக்கப்பட்ட திணை வயல்களில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது, சில சந்தர்ப்பங்களில் 97% வரை பூச்சிகளின் இறப்பு விகிதம் தந்து, தானிய விளைச்சலில் கணிசமான லாபத்திற்கு வழிவகுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்சமயம் எச். அல்பிபன்க்டெல்லா மீது திறன்மிக்க கட்டுப்பாட்டை வழங்கும் இரசாயன கட்டுப்பாடு எதுவும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயின் அறிகுறிகள், ஹெலியோசீலஸ் அல்பிபன்க்டெல்லா என்னும் திணை தலை துளைப்பான் பூச்சியால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சியின் பறக்கும் காலமும் திணை கதிர்களின் தோற்றம் மற்றும் பூக்கும் உச்சகாலகட்டத்தும் ஒன்றாக ஒத்துப்போகிறது. பெண் பூச்சிகள் தனியாகவோ அல்லது சிறிய கொத்துக்களாகவோ முட்டையிட்டு, அவை சிறுபூவின் நடுக்காம்புகளில் அல்லது அடிப்பகுதியில், பூத்தலையின் ஆரம்ப தோற்றத்தில் அதன் மஞ்சரிக்காம்புகளில் தளர்வாக ஒட்டிக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சு வெளியான பிறகு, இளம் முட்டைப்புழுக்கள் கதிர்களை உண்ணுகிறது மற்றும் முதிர்ந்த பூச்சிகள் சுருண்ட குடைவுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்துகிறது. முழு வளர்ச்சி பெற்ற முட்டைப்புழுக்கள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறி, நிலத்தில் விழுந்து, கூட்டுப்புழுவாக மாற மண்ணில் நுழைகிறது. வறட்சியான காலம் முழுவதும் அது அதே நிலையில் செயலற்றதாக இருந்து, அதனைத் தொடர்ந்த மழை காலத்தில் மட்டுமே முதிர்ச்சியடைந்த பூச்சியாக வெளியாகும். இந்த பூச்சி மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சஹெலியன் பகுதியில் முத்து திணை கதிர்களில் மிகவும் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சியாக கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா என்று கதிர்கள் மற்றும் நிலத்தை கண்காணிக்கவும்.
  • கதிர்களை அகற்றி, வயலுக்கு அப்பால் புதைத்து அல்லது எரித்து அழித்து விடவும்.
  • குறுகிய சுழற்சி திணை வகைகளை நடவு செய்வதில் இரண்டு வார கால தாமதம் (முதிர்ச்சிக்கு 75 நாட்கள்) செய்தல் பயிர் பாதிக்கப்படக்கூடிய உச்ச கட்ட காலத்தை தவிர்க்க உதவும்.
  • முட்டைப்புழு மற்றும் கூட்டுப்புழுக்களை சூரிய வெளிச்சத்திற்கு வெளிப்படுத்த அறுவடைக்குப்பின் நிலத்தை நன்கு உழுதல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க