கரும்பு

கரும்பின் இலை சிலந்திப்பேன்

Schizotetranychus andropogoni

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை வலைகள்.
  • பூச்சிகளின் உண்ணும் செயல்பாட்டினால் வெள்ளை திட்டுகளின் தோற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

மையநரம்புக்கு இணையாக இலையின் அடிப்பகுதி முழுவதும் வலைகள் உருவாகின்றன. வலைகளின் எண்ணிக்கை நுனிப்பகுதியை நோக்கி அதிகமாக இருக்கும். புதிதாக உருவாக்கப்பட்ட வலைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும், ஆனால் பின்னர் இவை பழுப்பு நிறமாக மாறி இறுதியில் இலையின் மேற்பரப்பில் இருந்து பரந்து சென்று, வெள்ளை திட்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். சிலந்திப்பேன்கள் மேல்புறத் தோலை சுரண்டி, சாற்றை உறிஞ்சுவதன் மூலம் உண்ணுகின்றன. பெரிதும் பாதிக்கப்பட்ட இலைகள் நோய்வாய்ப்பட்ட தோற்றத்தைத் தருகின்றன, பின்னர் இவை முழுமையாக உலர்ந்து போகின்றன. இலையின் அடிப்பகுதியில் வலை பின்னல், நிறமாற்றமடைந்த தோல்கள் மற்றும் வலையில் சிக்கிய மண் துகள்கள் காரணமாக காலனிகள் சாம்பல் நிறத்தில் தோன்றும். இலைகளின் அடிப்பகுதியில் மெல்லிய வலைகளால் மூடப்பட்ட சிறிய ஓவல் காலனிகளை உருவாக்கி அதனுள் சிலந்திப்பேன்கள் இருப்பதைக் காணலாம், மேலும் இவை மைய நரம்பின் இருபுறமும் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும். பாதகமான கால நிலைமைகளின் கீழ் தாவரங்களில் வலைப்பின்னல் காலனிகளின் உயிர்வாழ்வு அவற்றின் அடுத்தடுத்த விரைவான எண்ணிக்கை அதிகரிப்புக்கு பங்களிக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஸ்கோலோத்ரிப்ஸ் இன்டிகஸ் ப்ரிஸ்னர் என அழைக்கப்படும் தைசனோப்டெரஸ் இரைப்பிடித்துண்ணிகள் வலைகளுக்குள் இருக்கும் சிலந்திப்பேன்-முட்டைகளை அழிக்கும் திறன் கொண்ட ஒரு இயற்கை எதிரி. சுண்ணாம்பு-கந்தகம் அல்லது மீன் எண்ணெய் ரோசின் சோப் ஆகியவற்றை பயிர் மீது தெளிக்கவும். கெல்தேன் கொண்டு தெளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். கலக்கும் இயல்புடைய திரவ தெளிப்புடன் பாரத்தியான் அல்லது குளோர்பென்சைடு ஆகியவற்றை பயிர் மீது தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சிலந்திப்பேன்களால் சேதம் ஏற்படுகிறது. கடைசி தோலுரிவு நிறைவடைந்த உடனேயே புணர்ச்சி நடைபெறுகிறது. வலைகளுக்குள் முட்டைகள் தனித்தனியாக இடப்படுகின்றன, இவை இலைகளுடன் ஒட்டிக்கொள்கின்றன. இனச்சேர்க்கை நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு முட்டை இடுவது தொடங்குகிறது. ஒரு பெண் பூச்சியால் சுமார் 40-60 முட்டைகள் இடப்படுகின்றன. இளம் பூச்சிகளின் காலம் 10-12 நாட்களுக்கு இடையில் மாறுபடும். முழு முதிர்ச்சியை அடைவதற்கு முன் மூன்று இளம் பருவ நிலைகள் உள்ளன. குளிர்காலங்களில் சிலந்திப்பேன்களின் செயல்பாடு கணிசமாகக் குறைந்து கோடையின் ஆரம்பம் வரை அவ்வாறே இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் பாதிக்கப்பட்ட கரும்பு இலைகளை கிள்ளி அகற்றிவிடுங்கள்.
  • கரும்பு வயலில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள களைகளை குறிப்பாக சோர்கம் ஹால்பென்ஸ் (பாரு புல்) போன்றவற்றை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க