நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நார்த்தை துரு சிலந்திப்பேன்

Phyllocoptruta oleivora

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இந்த பூச்சி ஆரஞ்சுகளில் துரு சிலந்திப்பேன் என்றும் எலுமிச்சையில் வெள்ளி சிலந்திப்பேன் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவை 1.3 செ.மீ அல்லது அதற்கு மேல் வெளியே தெரியும் பழங்களின் மேற்பரப்பை உண்ணுகின்றன.
  • பழத்தின் தோல் வெள்ளி, சிவப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும்.
  • வசந்த காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் பிற்பகுதி வரை சேதங்கள் ஏற்படுகிறது.
  • இதன் விளைவாக, சந்தையில் புதிய பழத்தின் தரம் மற்றும் சாறின் தரம் குறைகிறது.
  • கடுமையான நோய்த்தொற்றுகளில், விளைச்சலும் குறைகிறது.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

பயிர் வகை மற்றும் பழ முதிர்ச்சியை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். வழக்கமாக, நார்த்தை துரு சிலந்திப்பேன்கள் முதிர்ந்த ஆரஞ்சு பழங்கள், இலைகள் மற்றும் கிளைகளின் தோலில் வெண்கல நிறம் காணப்படுவதன் மூலமே முதலில் அறியப்படும். பச்சை நிற தண்டுகள், இலைகள் மற்றும் பழங்களில் உண்ணும் சேதத்தை காணலாம். சிலந்திப்பேன்கள் இலை பரப்பு மற்றும் பழ தோல் என இரண்டின் மீதும் உயிர் வாழ்ந்து, உமிழ்நீரை உட்செலுத்துகின்றன, இதனால் மேல்தோலின் அணுக்கள் சிதைந்துவிடும். புறத்தோல் அதன் பளபளப்பான தன்மையை இழந்து, மந்தமாகி, ஓரளவு பழுப்பு நிறமாக இருக்கும் பகுதிகளில் வெண்கலத்தை போன்று அல்லது மஞ்சள்நிற திட்டுக்கள் காணப்படும். ஆரம்பத்தில், கீழ்ப்புற இலை பரப்புகள் வெளிறிய திட்டுகளாகவும், பின்னர் சிதைந்த புள்ளிகளாகவும் தோன்றும். உண்ணுதலானது தாவரப்பட்டையின் அணுக்களை அழித்துவிடும், மேலும் மேற்பரப்பானது எலுமிச்சையின்மீது வெள்ளி நிறமாகவும், முதிர்ந்த ஆரஞ்சுகளில் துருபிடித்த பழுப்பு நிறமாகவும் மற்றும் பச்சை ஆரஞ்சுகளில் கருப்பாகவும் மாறும். பருவத்தின் ஆரம்பத்தில் துரு சிலந்திப்பேனால் காயம் ஏற்பட்டால், அது "பழுப்பு நிறமாகுதல்" என்றும், முதிர்ச்சி அடைந்த பழங்களில் காயங்கள் ஏற்படும்போது அது "வெண்கலமாகுதல்" என்றும் அழைக்கப்படுகிறது. காயமடைந்த மேற்பரப்பு மென்மையாகவும், அடர் பழுப்பு நிறமாகவும் இருக்கும், மேலும் அவை மரத்தில் நீண்ட நேரம் தொங்கினால் கறைகள் மேலும் கடுமையானதாகிவிடும். பழம் முதிர்ச்சியடையும் முன்பு காயமடைந்தால் பாதிக்கப்பட்ட பழம் சிறியதாக இருக்கும். கடும் நோய்த்தொற்று இளம் மரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். வசந்த காலத்தின் துவக்கத்தில் நார்த்தை துரு சிலந்திப்பேன் பழத்தை உண்ணும்போது, தோல் கோடைகாலத்தை விட வெளிர் நிறத்தில் அதன் அமைப்பு சொரசொரப்பாக மாறும். இது சுறாதோல் என்று குறிப்பிடப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

துரு சிலந்திப்பேன்களை தாக்க கொள்ளையடிக்கும் பூச்சிகளான இயூசியஸ் சிட்ரிஃபோலியஸ், ப்ரோன்மேட்டஸ் அன்பிகுய்டஸ், மற்றும் அம்ப்லிசியஸ் இனங்கள் மற்றும் ஒட்டுண்ணி பூஞ்சை மற்றும் ஹிர்சுடெல்லா தாம்சோனி போன்றவை நார்த்தை சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட இலைத்திரள் தெளிப்பான்கள் (4 லிட்டர் தண்ணீருடன் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி சலவை சோப்பு) அல்லது சோப்பு கரைசல் தெளிப்பான் (4 லிட்டர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சோப்பு / சலவை திரவம் ) சிலந்திப்பேனின் தொற்றுநோயைக் குறைக்கும். வெப்பநிலை 35 ° செல்சியஸை தாண்டும்போது எண்ணெய் தெளிப்பானை பயன்படுத்த வேண்டாம். இலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கவும், தேவைப்பட்டால் 3 முதல் 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். 30% க்கும் மேற்பட்ட மரங்கள் பாதிக்கப்படும்போது நடவடிக்கை எடுக்கவும்.உங்கள் இரசாயன சிகிச்சையை கவனமாக தேர்வு செய்யவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளையும் பாதிக்கும். எதிர்ப்புத்திறன் வளர்ச்சியைக் குறைக்க அனைத்து சிலந்திப்பேன் கொல்லிகளை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூச்சிக்கொல்லிகளான ஸ்பைரோடிக்ளோஃபென், டிஃப்ளூபென்சுரான், அபாமெக்டின், அசெகுயினோசில், ஸ்பைரோடெட்ராமட், மிகவும் நுண்ணிய அல்லது ஈரமாகக்கூடிய கந்தகம், ஃபென்பைராக்சிமேட் மற்றும் குளோர்பைரிஃபோஸ் போன்றவை சிலந்திப்பேன் சமூகத்தை அகற்ற பயன்படும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது முதிர்ச்சி அடைந்த துரு சிலந்திப்பேனின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இது இயற்கையில் நுண்ணியதாக வகைப்படுத்தப்படுகிறது மற்றும் சாதாரணக் கண்ணுக்கு அரிதாகவே தெரியும். பழம் அல்லது இலை மேற்பரப்பில் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது மட்டுமே இது தெரியக்கூடும். இது தூள் போன்ற தூசியின் தோற்றத்தைக்கொண்டிருக்கும். இலைகள் அல்லது பழங்களின் மேற்பரப்பில் வெள்ளை, கோள முட்டைகள் சிறிய குழுக்களாக இடப்படுகின்றன.முட்டையானது முதிர்ச்சியடைந்த பூச்சியாக மாறுவதற்கு முன் இரண்டு செயல்பாட்டு இளம் பூச்சி நிலைகளை கடக்க வேண்டும். சிலந்திப்பேன்களின் ஒரு தலைமுறையானது 30° செல்சியஸில் ஆறு நாட்களில் நிறைவடைந்துவிடக்கூடும். பெண் பூச்சிகள் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை வாழும், மேலும் தனது வாழ்நாளில் 30 முட்டைகள் இடும். பழத்தோட்டத்தில் தனித்த கறைபடிந்த பழம் அடிக்கடி காணப்படுவது துரு சிலந்திப்பேனின் நோய்த்தொற்றுடைய முதல் அறிகுறியாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இது கவனிக்கப்படும்போது, அடுத்த பருவத்திற்கான துரு சிலந்திப்பேனின் தீவிரமான எச்சரிக்கையாக இது கருதப்பட வேண்டும். இந்த பூச்சி ஈரப்பதமான நிலைமைகளை விரும்புகிறது, மேலும் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல காலநிலைகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. சிலந்திப்பேன்கள் காற்று மூலம் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை தேர்வு செய்யவும்.
  • நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டங்களை கை பூதக்கண்ணாடி கொண்டு தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பிற பூச்சிகள் மற்றும் பறவைகள் போன்ற கொள்ளையடிக்கும் உயிரினங்களுக்கு பொருத்தமான சூழ்நிலைகளை பராமரிக்கவும்.
  • மரங்களை சீர்திருத்தம் செய்து நல்ல காற்றோட்டத்தை பராமரிக்கவும்.
  • பழத்தோட்டத்திற்குள் இருக்கும் களைகளை வேரோடு பிடுங்குவதன் மூலம் அதனை கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க