திராட்சை

திராட்சை துரு சிலந்திப்பேன்

Calepitrimerus vitis

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய அளவில் அதிகப்படியான ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும் (புள்ளிமுறைப் பொறிப்பு).
  • அதிகப்படியான வெள்ளை முடிகள் மற்றும் இலைகளில் கரும் பச்சை-ஊதா நிறமாற்றம் ஏற்படும்.
  • அதிகப்படியான நோய் தொற்றின் போது, குன்றிய வளர்ச்சி மற்றும் குறைந்த பழ உற்பத்தி ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இந்த நோய் பூச்சி இருப்பதற்கான முதல் அறிகுறி இலைகளில் காணப்படும் புள்ளிமுறை அமைப்பாகும். இந்த இலைகளை சூரிய வெளிச்சத்தில் காட்டும்போது, தெளிவாக காண முடியும். ஒரு இலைகளில் காணப்படும் சிறிய ஒளிஊடுருவக்கூடிய சிதைந்த புள்ளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, தாவரங்களில் எந்தளவு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கணிக்கலாம். அதிகப்படியான வெள்ளை முடிகளும் நோய்த்தொற்றின் அறிகுறியாகும். காயங்களின் விளைவாக இலைகள் பின்னர் கரும் பச்சை -ஊதா நிறத்துடன், சிதைந்து காணப்படும். பருவ காலத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கடுமையான தொற்றுகள் தளிர்கள் மற்றும் இலைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அதனைத் தொடர்ந்து இலை உதிர்தல் மற்றும் குன்றிய வளர்ச்சி ஏற்படும். மலர்கள் காயமடைவதால் அல்லது வளர்ச்சி தாமதிக்கப்படுவதால் பழ உற்பத்தி குறையும். பருவத்தின் பிந்தைய காலத்தில் திராட்சையின் வெளிப்புறவளர்ச்சி குன்றுவதனால், பொதுவாக துரு நோய் சிலந்திப்பேன்கள் ஒரு சிறிய பிரச்சினையாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலந்திப்பேன் எண்ணிக்கையின் விரைவான வளர்ச்சிக்கான அனைத்து நிலைகளும் ஏற்பட்டால், இது விளைச்சல் மற்றும் தர இழப்புக்களை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

துரு நோய் சிலந்திப்பேன் பல இயற்கை எதிரிகளுக்கு, குறிப்பாக கொள்ளை பூச்சிகளுக்கு எளிதான இரையாகும். செயலற்ற நிலை மற்றும் மொட்டு வெடிக்கும்போது சரியான நேரத்தில் ஈரப்பதமான கந்தகப் பயன்பாடுகளும் சிலந்திப்பேன்களை கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், இந்த தெளிப்பான்களை நிறுத்திவிட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேப்ப எண்ணெய் அல்லது சில பூச்சிக்கொல்லி சோப்புகளையும் இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நோய்ப்பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் கொள்ளை பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க சிறுபூச்சிக்கொல்லிகள் தவிர்க்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் திராட்சை துரு நோய் சிலந்திப்பேனால் (கலேபிடிரிமெரஸ் விட்டிஸ்) ஏற்படுகிறது. இது விட்டிஸ் வினிஃபெராவின் நோய் பூச்சியால் ஏற்படுகிறது. முதிர்ச்சியடைந்த பெண் சிலந்திகள் குளிர் காலத்தை செயலற்ற நிலையில், திராட்சைக் கொடிகளின் மரப்பட்டை அல்லது வெடிப்புகள் அடியில் கழிக்கும். மேலும் அவை வசந்த காலத்தின் ஆரம்பத்தில், அங்கிருந்து வளரும் தளிர்களுக்கு இடம்பெயரும். அவற்றின் நுண்ணிய அளவு மற்றும் ஒளிஊடுருவக்கூடிய நிறம் ஆகியவை அவற்றை அடையாளம் காணுவதை கடினமாக்குகிறது. இலைகளில், அவை பெரும்பாலும் வெள்ளை தாவர முடிகளால் சூழப்பட்டு இருக்கும். வசந்த காலத்தின் ஆரம்பத்தில், அவை இளம் இலைகள் மற்றும் தளிர்களை கூட்டாக, தன் கூர்மையான அலகுகளை (வாய் பாகங்கள்) மேல் தோலுக்குரிய திசுக்களினுள் செலுத்தி, அதன் உள்ளடக்கங்களை உறிஞ்சும். அவை உண்ணும்போது திசுக்களினுள் செலுத்தும் சில பொருள்கள் ஹார்மோன் பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் திசு சிதைவு ஏற்படுகிறது. கோடைகால நடு முதல் இறுதிப்பகுதியில், இவ்வகை சிலந்திப்பேன்கள் குளிர்காலத்திற்கான பாதுகாப்பு இடங்களைத் தேடும். ஏராளமான இறைபிடித்துண்ணும் சிலந்திப்பேன் மற்றும் பூச்சிகள் இவ்வகை துரு நோய் சிலந்திப்பேன்களை உண்ணுவதால், இவை பொதுவாக ஒரு பிரச்சினை இல்லை.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதால், நன்மை பயக்கும் பேன்கள் மற்றும் பூச்சிகள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க