நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை சிவப்பு சிலந்திப்பேன்

Panonychus citri

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய சாம்பல் அல்லது வெள்ளி நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • தாக்கப்பட்ட திசுக்கள் பொதுவாக ஒரு வெள்ளி அல்லது வெண்கலத் தோற்றத்துடன் காணப்படும்.
  • கடுமையான நோய் தொற்றானது, முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இலைகள் உதிர்தல், கிளைகள் கருகுதல், பழங்களின் தரம் குறைதல் மற்றும் மரங்களின் வீரியம் குறைதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
  • நல்ல நீர் பாசனம் நோய்கள் ஏற்படுவதையும் மற்றும் நோய்பூச்சியால் ஏற்படும் சேதங்களையும் குறைக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

மரங்களின் புறப்பகுதியில் உள்ள இளம் இலைகளில் புள்ளிமுறை அமைப்பு என்றழைக்கப்படும் சிறிய சாம்பல் அல்லது வெள்ளி நிறப் புள்ளிகள் தோன்றுவதன் மூலம் இந்த பூச்சியால் ஏற்படும் சேதங்களானது வகைப்படுத்தப்படுகிறது எப்போதாவது, பழங்கள் மற்றும் கிளைகளும் பாதிக்கப்படலாம். அதிக அளவிலான நோய்த் தொற்றுகளில், இந்தப் புள்ளிகள் திட்டுக்களாக உருவாகி, இலைகள் அல்லது பச்சைக் காய்களுக்கு வெள்ளி நிற அல்லது வெண்கல நிறத் தோற்றத்தை ஏற்படுத்தும். இலை திசுக்களில் ஏற்படும் சேதம் ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும் பகுதியைக் குறைக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்கள் படிப்படியாக சிதைகிறது. முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இலைகள் உதிர்தல், கிளைகள் கருகுதல், பழங்களின் தரம் குறைதல் மற்றும் மரங்களின் வீரியம் குறைதல் போன்றவை ஏற்படலாம். இது குறிப்பாக பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளின்போது வழக்கமாக உள்ளது, எடுத்துக்காட்டாக உலர், காற்றடிக்கும் வானிலைகளில். மாறாக, நல்ல நீர் பாசனம் நோய்கள் ஏற்படுவதையும் மற்றும் நோய்ப் பூச்சியால் ஏற்படும் சேதங்களையும் குறைக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பானோனிக்கஸ் சிட்ரிக்கு பெரும் எண்ணிக்கையிலான இரைப்பிடித்துண்ணிகளும், பிற இயற்கை எதிரிகளும் உள்ளன, இது அடிக்கடி பரவும் நோய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்த போதுமானது. நோய்ப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதும், பல நாடுகளில் நாரத்தை சிவப்பு சிலந்திப்பேன்களின் சிறப்பான கட்டுப்பாட்டிற்கு பல பைட்டோஸிடிட் பேன்கள் (உதாரணமாக யூசீயஸ் ஸ்டிபுலேடஸ்) பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டீதோரஸ் இனத்தின் சில வகையான தம்பல பூச்சி, இந்த நாரத்தை சிவப்பு சிலந்திப்பேனை விருப்பமாக உண்ணுகின்றன. பூஞ்சை மற்றும் குறிப்பாக வைரஸ்கள், வயலில் உள்ள பானோனிக்கஸ் சிட்ரி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன,எனினும் இவை வெப்பநிலையால் பாதிக்கப்படக்கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகள் நிலைமையை மோசமாக்கலாம் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, செயற்கை பைரித்ராயிட்ஸ் இந்த சிலந்திப்பேன்கள் ஏற்படுவதை ஊக்குவிக்கிறது. பல வகை அகாரிசைடுகளின் பயன்பாடு நோய் எதிர்ப்புத் திறன் வளர்ச்சியைத் தவிர்க்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது பானோனிக்கஸ் சிட்ரி என்னும் நாரத்தை சிவப்பு நிற முதிர்ந்த மற்றும் இளம் சிலந்திப்பேன்களின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இவை பேரிக்காய் வடிவ செங்கல்-சிவப்பு உடல் மற்றும் முத்துக்கள் போன்ற புள்ளிகளுடன் அதன் முதுகுப்பகுதியில் இருந்து நீட்டிக்கொண்டு இருக்கும் வலுவான வெள்ளை முடிகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இவை நாரத்தை மரங்களைப் பாதிக்கின்றன, மேலும் எப்போதாவது பப்பாளி, மரவள்ளி அல்லது திராட்சை போன்ற பிற பயிர்களையும் பாதிக்கின்றன. இலைகளின் இருபுறங்களிலும் இது காணப்படுகிறது, ஆனால் மேற்புறங்களை உண்ணுவதற்கு இது பெரும்பாலும் இலைகளின் மேல்புறத்திலேயே காணப்படுகிறது. இவை உற்பத்தி செய்யும் பட்டுநூலானது, காற்று மூலம் பிற மரங்களுக்கு எளிதாக பரவுகிறது. பூச்சிகள் மற்றும் பறவைகள் பரவுவதற்கான வேறு வழிமுறைகள் ஆகும். பாதிக்கப்பட்ட கருவிகள் மற்றும் மோசமான வயல் பயிற்சிகள் பூச்சியை மற்ற வயல்களுக்கு பரப்புகின்றன. உகந்த நீர்ப்பாசனத்துடன் கூடிய நல்ல நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மரங்களில் இந்தப் பூச்சிகளால் ஏற்படும் கடுமையான சேதங்களையும் மற்றும் நோய் ஏற்படுவதையும் குறைக்கலாம். மாறாக, குறைந்த அல்லது அதிக ஈரப்பதம், அதிகப்படியான காற்று, வறட்சி அல்லது மோசமாக வளர்ச்சியடைந்த வேர் அமைப்பு இந்த நிலைமையை மோசமாக்கலாம். நாரத்தை சிவப்பு சிலந்திப்பேன்களுக்கு உகந்த காலநிலைகள் 25° செல்சியஸ் மற்றும் 50-70% ஈரப்பதம் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை அளவிட, பழத்தோட்டத்தை பூதக்கண்ணாடி கொண்டு தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளை எதிர்மறையாக பாதிக்கும்.
  • மரத்திற்கு முறையாக நீர் பாசனம் செய்து மற்றும் வறட்சி அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
  • மரத்தின் கிளைகள் தரையில் இருக்கும் புல் மற்றும் களைகளில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • கழிவுகள் மற்றும் எஞ்சியவற்றை நீக்கிவிட்டு நிலத்தினை சுத்தமாக வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க