மற்றவை

ஐரோப்பிய சிவப்பு சிலந்திப்பேன்

Panonychus ulmi

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் லேசான வெண்கல புள்ளிகள் காணப்படுகின்றன, இவை வெண்கல அல்லது துரு-பழுப்பு நிறமாற்றத்தை பெரும்.
  • இலைகள் சிதைந்து, மேல்நோக்கி சுருண்டுகொள்ளலாம்.
  • மரத்தின் போதிய வளர்ச்சியின்மை, பழங்கள் மோசமாக பழுத்தல் அல்லது முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்தல் போன்றவை காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

8 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
சேலாப்பழம்/செர்ரி
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

இலேசான நோய்த்தொற்றின் கீழ், இலைகளில் லேசான வெண்கல நிற புள்ளிகள் முக்கிய நரம்பு நெடுகிலும் தோன்றும். சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பூச்சியின் உறிஞ்சும் செயல்பாட்டின் விளைவாக ஏற்படும் புள்ளிகள் முழு இலைக்கும் பரவும். இலைகள் மேல்நோக்கி சுருண்டு கொள்ளும், இலைத்திரள்கள் வெண்கல அல்லது துரு-பழுப்பு நிறமாற்றை அடையும். இலைகள் மற்றும் மொட்டுகளுக்கு ஏற்படும் சேதம் மரத்தின் ஒளிச்சேர்க்கை செயல்பாட்டைக் குறைக்கிறது மற்றும் இது தளிர்களின் மோசமான வளர்ச்சி, மரத்தின் போதிய வளர்ச்சியின்மை, பழங்கள் மோசமாக பழுத்தல் அல்லது முன்கூட்டியே உதிர்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது குளிர்கால உறைபனியால் தளிர்கள் பாதிக்கப்படுவதை அதிகரிக்கிறது மற்றும் அடுத்த பருவத்தில் பூக்கும் திறனை குறைக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கொள்ளையடிக்கும் சிலந்திப்பேன் மூலம் மேற்கொள்ளப்படும் உயிரியல் கட்டுப்பாடு பழத் தோட்டங்களில் நன்றாக வேலை செய்கிறது. மேலும் இயற்கை எதிரிகளில் மலர் வண்டுகள், பொன்வண்டுகள், சில வகையான கேப்சிட் வண்டுகள், அத்துடன் கண்ணாடி-சிறகுகள் கொண்ட மைரிட் வண்டுகள் (ஹைலியோட்ஸ் விட்ரிபென்னிஸ்) அல்லது ஸ்டெத்தோரஸ் பங்டம் ஆகியவை அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட குறுகிய வீச்சுகளை உடைய எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வரம்புகள் அதிகமாகி, குளிர்காலத்தில் தளிர்களின் நுனிகளில் சிவப்பு முட்டைகள் கொத்துக்களாக காணப்பட்டால் அகாரிசைடுகள் அல்லது சிலந்திப்பேன்கொல்லிகளை பயன்படுத்தலாம். பொதுவாக, இரசாயன சிகிச்சையின் பயன்பாட்டை குறைவான அளவில் வைத்திருக்க முயற்சிக்கவும். இவை நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை பாதிக்கலாம் மற்றும் சில சிலந்திப்பேனின் கூட்டத்தில் எதிர்ப்பைத் தூண்டும். தோட்டக்கலை கனிம எண்ணெயையும் அவற்றின் எண்ணிக்கையையும் குறைக்க பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது ஐரோப்பிய சிவப்பு சிலந்திப்பேன் (பனோனிச்சஸ் உல்மி) என்பவற்றின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகின்றன, இது ஏராளமான போம் மற்றும் கல் பழங்களையும், திராட்சைப்பழங்களையும் பாதிக்கக்கூடும். ஆண் பூச்சிகள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில், பின்புறத்தில் இரண்டு சிவப்பு புள்ளிகளுடன் 0.30 மி.மீ நீளம் கொண்டவை. பெண் பூச்சிகள் சற்று நீளமாகவும் (0.35 மி.மீ) ஆண் பூச்சிகளை விட சற்று அதிக நீள்வட்டவடிவிலும் இருக்கும். செங்கல் சிவப்பு நிற உடல், முதுகில் முத்து போன்ற புள்ளிகளிலிருந்து வளர்ந்திருக்கும் வலுவான வெள்ளை முடிகள் ஆகியவற்றின் மூலம் இந்த பூச்சிகள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை சிவப்பு நிற முட்டைகளை கோடை காலத்தில் பட்டை பிளவுகள், பழ புல்லி வட்டம் அல்லது செயலற்ற மொட்டுகள் ஆகியவற்றில் முக்கியமாக இடும், மேலும் வசந்த காலத்தில் இலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. வருடத்திற்கு இதன் தலைமுறையின் எண்ணிக்கை வெப்பநிலை மற்றும் உணவு விநியோகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் குளிர்ந்த காலநிலையில் 2-3 முதல் வெப்பமான காலநிலையில் 8 வரை இதன் தலைமுறைகள் இருக்கலாம். தழைச்சத்தின் அதிகப்படியான பயன்பாடு தாவர வார்ச்சியை தூண்டுகிறது, அதே சமயம் பூச்சிகளையும் அதிகரிக்கிறது. காற்று மற்றும் மழை, இதையொட்டி, பூச்சிகளின் இறப்பை அதிகரிக்கும்.


தடுப்பு முறைகள்

  • வேட்டையாடும் பூச்சிகளின் எண்ணிக்கையை தூண்டுவதற்கு பல்வேறு வகையான தாவரங்களை பராமரிக்கவும்.
  • கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட தாவர பாகங்கள் வெட்டப்பட வேண்டும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்.
  • தூசி நிறைந்த நிலையைத் தவிர்க்க மரங்களை நன்கு நீர்ப்பாசனம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க