மாதுளை

மாதுளையின் பாக்டீரியா கருகல் நோய்

Xanthomonas axonopodis pv. punicae

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், கிளைகள் மற்றும் பழங்கள் பாதிக்கப்படுகின்றன.
  • மஞ்சள் நிற நீர் தோய்த்த வட்ட வடிவிலான புள்ளிகள் தோன்றும்.
  • முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலைகள் உதிரும்.
  • பழங்களில் விரிசல் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாதுளை

அறிகுறிகள்

நோய்த்தோற்று ஏற்பட்ட 2-3 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் முதலில் தோன்றும். மஞ்சள் நிறத்தில் நீர் தோய்த்த வட்ட வடிவிலான புள்ளிகள் தாவர பாகங்களில் காணப்படுகின்றன. கடுமையான நோய்த்தொற்றின்போது, முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலை உதிர்வு ஏற்படுகிறது. வட்ட வடிவிலான புள்ளிகள் நோயின் பிந்தைய கட்டங்களில் ஒழுங்கற்ற புண்களாகத் தோன்றும். படிப்படியாக, புள்ளிகளின் மையப்பகுதி சிதைந்து, கரும் பழுப்பு நிறமாக மாறும். நோய்க்கிருமி தண்டுகள் மற்றும் கிளைகளை குடைந்து, விரிசல்களை ஏற்படுத்தும். நோய்த்தொற்று அதிகமாகிய கட்டங்களில், இலைகள் மற்றும் சிறு கிளைகளில் திசு அழுகல் ஏற்படும். இந்த நோய் முழு பழத்தையும் வெடிக்கச்செய்து, இறுதியாக முழு பழத்தையும் அடர் நிறமாக்கி, உலரச் செய்துவிடும். அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாவரங்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசில்லஸ் சப்டிலிஸ், சூடோமோனாஸ் ஃப்ளோரெஸென்ஸ் மற்றும் ட்ரைக்கோடெர்மா ஹார்சியானம் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தவும். பூச்சி மற்றும் தாவர நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேப்ப இலைகளை மாட்டு சிறுநீரில் ஊறவைத்து தெளிக்கவும். 40% துளசி இலை சாறினை பயன்படுத்தியதை தொடர்ந்து வேப்ப விதை எண்ணெய்யை பயன்படுத்தவும். மேலும், பூண்டு குமிழ்த்தண்டு, மெஸ்வாக் தண்டு மற்றும் பட்சோலி இலைகளின் சாற்றை 30% செறிவில் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய்க்கான பயனுள்ள இரசாயன கட்டுப்பாடு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரசாயனங்கள் மற்றும் பிற வேளாண் சிகிச்சைகள் உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு வழிமுறைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் இரசாயன சிகிச்சைகள் குறைவான பலன்களை தருவதாகவே இருக்கின்றன. போர்டியாக்ஸ் கலவை, கேப்டன், காப்பர் ஹைட்ராக்சைடு, புரோமோபோல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஸ்ட்ரெப்டோசைக்ளின் போன்ற வேதிப்பொருட்களை தனியாகவோ அல்லது கலவையாகவோ பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது சாந்தோமோனாஸ் ஆக்சோனோபோடிஸ் பி.வி. புனிசியே என்னும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. நோய்க்கிருமிகள் அவற்றின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகை சாகுபடி வகைகளை பாதிக்கின்றன. பாக்டீரியா இயற்கையான துளைகள் மற்றும் காயங்கள் வழியாக நுழைகிறது. பாதிக்கப்பட்ட தாவர இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களில் பாக்டீரியா குளிர்காலத்தை கழிக்கிறது. மழை சாரல், பூச்சிகள் மற்றும் அசுத்தமான சீர்திருத்தம் செய்யும் கருவிகள் உட்புறமாக நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. அதிகப்படியான பகல் வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் நோய்க்கிருமிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கின்றன. பாக்டீரியத்தின் வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும். மழை மற்றும் தெளிப்பு சாரல்கள், நீர்ப்பாசன நீர், சீர்திருத்தம் செய்ய பயன்படும் கருவிகள், மனிதர்கள் மற்றும் பூச்சி காரணிகள் பாக்டீரியாவின் இரண்டாம் நிலை பரவலுக்கு காரணமாகின்றன. இந்த நோய் பழங்களின் விற்பனை தரத்தை குறைக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்ய நோய் இல்லாத நாற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • சரியான நேரத்திலும் போதுமான இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
  • வயல்கள் முழுவதும் கிருமி நீக்கம் செய்யவும்.
  • மாற்று புரவலன் தாவரங்களை அழிக்கவும்.
  • மண் பரிசோதனையின் போது பரிந்துரைக்கப்பட்டபடி எருக்கள் மற்றும் உரங்களைப் பயன்படுத்தவும்.
  • பயிரின் முக்கியமான கட்டங்களில் (பூக்கும் கட்டங்களில்) நீர்ப்பாசனம் செய்யவும்.
  • வயலில் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
  • தாவர குப்பைகளை சேகரித்து, அழித்துவிடவும்.
  • பாதிக்கப்பட்ட கிளைகளையும் பழங்களையும் தவறாமல் சீர்திருத்தம் செய்து, எரித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க