கத்திரிக்காய்

கத்திரிக்காயின் சிற்றிலை நோய்

Phytoplasma

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் அளவு குறைதல்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • பழ உற்பத்தி தடைபடுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தாவரங்கள் சிறிய, மென்மையான, மெல்லிய மற்றும் உருக்குலைந்த இலைகளால் வெளிர் மஞ்சள் நிறத்தை கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. முட்களை உடைய தாவர வகைகள் பளபளப்பாகி, முட்களை இழக்கின்றன. தாவரங்களின் வளர்ச்சி பொதுவாக குன்றி, குட்டையான கணுவிடைப்பகுதிகளையும், இலைக்காம்புகளையும் கொண்டிருக்கும். ஆரோக்கியமான தாவரங்களை விட ஏராளமான கிளைகளும் வேர்களும் உருவாகும். இது அவற்றுக்கு புதர் தோற்றத்தை கொடுக்கும், எனவே தான் இது சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைக்கப்படுகிறது. மலர் பாகங்கள் (பைலோடி) சிதைந்து பெரும்பாலும் மலட்டுத்தன்மையடைகின்றன. வளரும் பழங்கள் கடினமாகவும், சொரசொரப்பாகவும் ஆகி, முதிர்ச்சியடையத் தவறிவிடுகின்றன. நோய் அதிகரிக்கையில், புதிதாக வளரும் இலைகள் அதன் அசல் அளவின் 1/3 - 1/4 அளவு மட்டுமே வளரும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கண்ணாடி இறக்கை பூச்சிகள், டேம்செல் வண்டு, சிறிய கொள்ளை வண்டு போன்ற நன்மை பயக்கும் பூச்சிகள் இந்த பூச்சிகளின் முட்டை மற்றும் முட்டைப்புழுக்கள் நிலை என இரண்டு நிலையில் இருக்கும் பூச்சிகளையும் தீவிரமாக வேட்டையாடக்கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தியாமெதோக்ஸம், அசிடமிப்ரிட், தியோசைக்ளம் மற்றும் மாலத்தியோன் ஆகியவற்றை நோய்ப்பூச்சிகளை அடக்க பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பைட்டோபிளாஸ்மா எனப்படும் பாக்டீரியா போன்ற ஒட்டுண்ணிகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு பரவுவது பெரும்பாலும் பூச்சி காரணிகள், பல்வேறு வகையான இலை தத்துப்பூச்சிகள், குறிப்பாக ஹிஷிமோனாஸ் பைசிடிஸ் மூலம் நிகழ்கிறது. இது அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாவரங்களை பாதிக்கும்.


தடுப்பு முறைகள்

  • படகோடா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி உடைய தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • மிளகாய் / மிளகு போன்ற மாற்று புரவலன் தாவரங்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.
  • நடவு செய்யும் போது போதுமான 90 * 75 செ.மீ.
  • இடைவெளி விடவும்.
  • பூச்சியின் உச்சக்கட்ட பருவத்தை தவிர்க்க விதைப்பு நேரத்தை அதற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
  • இலை தத்துப்பூச்சி நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணித்து, நோய்கள் இல்லாதிருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை உடனடியாக அகற்றி அழிக்கவும்.
  • எளிதில் பாதிக்கக்கூடிய புரவலன் தாவரங்களை (களைகளை) அகற்றவும்.
  • உங்கள் பயிரை நேரடியாக பூச்சிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில் உங்கள் வயலைச் சுற்றி தடை பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • இயற்கை எதிரிகள் மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க