மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் பாக்டீரியா இலைக் கோடு நோய்

Xanthomonas vasicola pv. vasculorum

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மீது பழுப்பு, தோல் நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் பல்வேறு நீளங்களில் இலைக் கோடுகள் காணப்படும்.
  • கோடுகளின் ஓரங்கள் அலை போன்றதாகவும், துண்டிக்கப்பட்டும், மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • பெரும்பாலும் அறிகுறிகளின் வளர்ச்சியானது கீழ்ப்புற இலைகளில் இருந்து மேல்நோக்கி இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

அறிகுறிகளானது பொதுவாக கீழ்ப்புற கவிகைகளில் முதலில் உருவாகும், பின்னர் சாதகமான சூழ்நிலைகளில் அவை மேல்நோக்கி பரவும். இலைகளின் மீது குறுகிய, ஆரஞ்சு-பழுப்பு அல்லது தோல் நிறத்தில் கோடுகள் பல்வேறு நீளங்களில் காணப்படும். இவை ஒளிபுகக்கூடியதாகவும், அலை போன்ற ஓரங்களையும், மஞ்சள் நிறத்தினையும் கொண்டிருக்கும், குறிப்பாக இலைகளுக்குப் பின்னால் ஒளியைக் காண்பிக்கும்போது, கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். சில சமயங்களில், கவிகைகளின் நடுப்பகுதியில் அல்லது மேல்பகுதியில் காயங்கள் முதலில் தோன்றும். கலப்பினங்களுக்கு இடையே அறிகுறிகள் பெரிதும் மாறுபடும், இவை சிறு காயங்களில் இருந்து, 50% வரையிலும் அல்லது அதற்கும் அதிமான இலைப் பரப்புகள் மூடப்படக்கூடியதாக இருக்கும். இவை தானியங்கள் நிரப்பப்படுவதிலும், விளைச்சலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பிரிக்கப்பட்ட இலைப் பகுதிகளில் இருந்து பிசுபிசுப்பான பொருட்களை உடைய கசிவுகள் இந்த நோயின் இன்னொரு அறிகுறியாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள் வரை, இந்த நோய்க்கு எதிரான உயிரியல் சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை. நோயைக் கட்டுப்படுத்தவும், நோய் ஏற்படுவதைத் தவிர்க்கவும் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோயைக் கட்டுப்படுத்தவும், நோய் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இரசாயணக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள் எதுவும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது சாந்தோமோனாஸ் வசிகோலா பிவி. வாஸ்குலோரம் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்டப் பயிர்க் கழிவுகளில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில் இது மழை மற்றும் காற்று மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவுகிறது. வயல் உபகரணங்கள், அறுவடை செய்பவர்கள் அல்லது பயிர்த் தண்டுகளை உண்ணுபவைகள் மூலம் வயல்களுக்கு இடையே பாதிக்கப்பட்டப் பயிர்க் குப்பைகளும் பரவுகிறது. எந்த வித முந்தைய காயமும் இல்லாமல், இது தாவரத் திசுக்களினுள் நேரடியாக நுழையும். பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள் பயிர் செய்யப்பட்டு, எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படாவிட்டால், தொற்றுநோயானது பல ஆண்டுகளுக்கு மேலாக அதே வயல்களில் உருவாகக்கூடும். நோய் வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் நிலைகள் அதிக ஈரப்பதம், அதிகமான மழைப்பொழிவு மற்றும் நீடித்த இலை ஈரப்பதம் ஆகியவை ஆகும். கோடைப் பருவத்தில் மேல்நிலை நீர்ப்பாசனம் மற்றும் நீர்ப்பாசனமும் நோயின் தாக்கத்தை அதிகரிக்கும்.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால், எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் தன்மை உடைய தாவரங்களைத் தேர்வு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைக் கண்காணிக்கவும்.
  • களைகளையும் தானே வளரும் தாவரங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
  • பல்வேறு வயல்களுக்கு இடையே வேலை செய்யும்போது, உபகரணங்களில் இருந்து பயிர்க் குப்பைகளை அகற்றவும்.
  • அறுவடைக்குப் பின் வயலில் இருந்து தாவரக் குப்பைகளை நீக்கவும்.
  • மாற்றாக, மண்ணை உழுது அவற்றைப் புதைத்து விடவும்.
  • பிற வயல்களுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்ட வயல்களைக் கடைசியாக அறுவடை செய்யவும்.
  • சோயா மொச்சை அல்லது கோதுமை போன்ற பாதிக்கப்படாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க