மற்றவை

பாக்டீரியல் பழ கொப்புளம்

Acidovorax citrulli

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • விதை இலைகளின் அடிப்பகுதியில் நீர் தோய்த்தத் திட்டுக்கள் காணப்படும்.
  • கருத்த அல்லது சிவப்பு -பழுப்பு, கோண வடிவிலான காயங்கள் இலை நரம்புகளில் காணப்படும்.
  • ஆலிவ் நிறத்தில், பழங்களின் மீதான ஒழுங்கற்ற காயங்கள் இணைந்து கரும் பச்சை நிற கொப்புளங்களை ஏற்படுத்துகிறது.
  • அரக்குப் பிசின் நிறத் திரவம் திசுக்களிலிருந்து கசியும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

நடவு செய்த ஐந்து முதல் எட்டு நாட்களுக்குள் நாற்றுக்களில் அறிகுறிகள் காணப்படும். இந்த அறிகுறிகளானது விதை இலைகளின் கீழ்ப்புறத்தில் நீர்த் தோய்த்தப் புள்ளிகள், அவ்வப்போது, நாற்றழுகளும் ஏற்படும். முதிர்ந்த தாவரங்களில், கருத்த அல்லது சிவப்பு-பழுப்பு, கோணவடிவிலான காயங்கள், இலை நரம்புகள் நெடுகிலும் காணப்படும். பழங்களில் காணப்படும் அறிகுறிகள் முதிர்ச்சியடைவதற்கு சற்று முன்னதாகவே உருவாகின்றன, மேலும் அவை முதலில் சிறிய, ஆலிவ் நிற, வடிவமற்ற காயங்கள் அதன் மேற்பரப்பில் ஏற்படுத்தும். இந்த காயங்கள் விரைவாக படர்ந்து, ஒன்றாக வளர்ந்து, பெரிய கரும் பச்சை நிற கொப்புளங்களாக இணையும். நோய் அதிகரிக்கும் போது, அந்த காயங்கள் ஏற்பட்ட பகுதியில் வெடிப்பு உண்டாகி, அரக்குப் பிசின் போன்ற திரவம் திசுக்களில் இருந்து கசியும். சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகள் சேதமடைந்தத் திசுக்களில் குடியேறி, பழங்களை உள்ளிருந்து அழுக செய்கின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்க் கிருமிகளை சிறிது வெற்றிகரமாக நீக்குவதற்கு உலர்ந்த வெப்பச் சிகிச்சை மூலம் விதைகளை சுத்தம் செய்யலாம். நோய்த்தொற்றை அகற்றுவதற்கு 3-5 நாட்களுக்கு 85 ° சிகிச்சை பயனுள்ளதாக உள்ளது. தாமிரம் சார்ந்த பாக்டீரியா கொல்லிகளின் கரிம சூத்திரங்கள் நோய்ப் பரவுவதை மெதுவாக்கவும், தொற்றுநோயிலிருந்து பழங்களைப் பாதுகாக்கவும் கிடைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குப்ரிக் ஹைட்ராக்ஸைடு, செப்பு ஹைட்ராக்ஸோ சல்பேட், அல்லது செப்பு ஆக்ஸிகுளோரைடு போன்ற செப்பு-அடிப்படையிலான பாக்டீரியாகொல்லி பயன்பாடு, அதன் பரவுதலை மெதுவாக்கி, பழங்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் பாக்டீரியா அசிடோவோராக்ஸ் சிட்ருலி என்பவற்றால் ஏற்படுகிறது, இவை பாதிக்கப்பட்ட பழங்களின் விதைகளில் உள்ளே மற்றும் வெளியே, மண்ணில் உள்ள தாவர கழிவுகளில், வெள்ளரி இனங்களின் களைகள் அல்லது தன்னார்வ தாவரங்கள் போன்ற மாற்று புரவலன்களில் வாழ்கிறது. அனைத்து வெள்ளரி இனங்களும் குறிப்பிட்ட அளவுக்கு நோய்க்கு ஆளாகின்றன, ஆனால் அறிகுறிகளின் தீவிரத்தன்மையில் வேறுபாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட விதைகள் நோய்களை பரப்புவதில் மிகவும் முக்கியமான காரணியாக உள்ளது. தாவரங்களுக்கு இடையே பரவும் இரண்டாம் நிலை நோய்த்தொற்று நீர் துளி (மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம்), பணியாளர்களின் கை மற்றும் உடை, கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் ஏற்படுகிறது. அதிக வெப்பநிலை (32 ° செல்சியசிற்கு மேல்) மற்றும் உயர் ஈரப்பதம் (70% க்கு மேல்) ஆகியவை தொற்று மற்றும் நோய்க்குச் சாதகமானவை ஆகும். பூக்களின் மகரந்த சேர்க்கை மற்றும் பூப்பூத்த பிறகு 2-3 வாரங்கள் வரை பழங்கள் பாதிக்கப்படக்கூடும். ஆனால் பழங்கள் முதிர்ச்சியடையும் போது, அதன் மேற்பரப்பில் மெழுகு போன்ற அடுக்கு உருவாகி, மேலும் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் உள்ள சாத்தியமான நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து கிடைக்கப்பெறும் விதைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • வளரும் சுழற்சிக் காலம் முழுவதும் உயர் தரமான சுகாதாரம் பராமரிப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தொடர்ந்து வயல்களை கண்காணித்து, பாதிக்கப்பட்டத் தாவரங்களை அழிக்கவும்.
  • வெள்ளரி இனங்களின் களைகள் மற்றும் மாற்று புரவலன்களை தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின், தாவர கழிவுகளை மண்ணில் ஆழமாக உழுதல் வேண்டும்.
  • பாக்டீரியாவின் பரவலைத் தவிர்க்க 3 வருட பயிர் சுழற்சி முறையை திட்டமிடுக.
  • பாதிக்கப்பட்ட வயலில் பயன்படுத்திய எந்தவொரு உபகரணத்தையும் மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க