மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் குட்டை நோய்

Spiroplasma kunkelii

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் வாடிப்போகுதல் மற்றும் அதன் ஓரங்கள் மஞ்சள் நிறமாகுதல்; அதனைத் தொடர்ந்து நுனிகள் சிவந்த நிறமாகுதல்.
  • இளம் இலைகளின் அடிப்பகுதியில் சிறிய வெளிறிய புள்ளிகள் பின்னர் கோடுகளாக மாறும்.
  • மிகவும் குட்டையான கணுவிடைப்பகுதி, பல காதுகளையுடைய தளிர்கள் மற்றும் பதர் போன்ற தோற்றத்துடன் தாவரங்களின் வளர்ச்சி கடுமையாக குன்றிப்போகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

பொதுவாக எஸ்.குன்கெலீ நோய்த் தொற்றுக்கான முதல் குறிப்பிடத்தக்க அடையாளம் இலைகள் வாடிப்போகுதல் மற்றும் அவற்றின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகுதல் ஆகும். இதனைத் தொடர்ந்து நுனிப்பகுதியில் தொடங்கி, எஞ்சிய திசுக்கள் வரையிலும் முதிர்ந்த இலைகள் சிவப்பு நிறமாகும். இந்த அறிகுறிகள் தென்பட்ட சில 2-4 நாட்களுக்குப் பிறகு, வளரும் இளம் இலைகளின் அடிப்பகுதியில் சிறிய வெளிறிய திட்டுக்கள் காணப்படும். இவை வளருகையில், இந்த புள்ளிகள் இணைந்து கோடுகளாக மாறும், இது நரம்புகள் நெடுகிலும், பெரும்பாலும் நுனி வரை காணப்படும். ஆரம்பக் கட்டங்களில் பாதிக்கப்பட்டத் தாவரங்கள், முறுக்கப்பட்ட, சிதைந்த இலைகள் மற்றும் மிகக் குறுகிய கணுவிடைப்பகுதிகளுடன் கடுமையாக வளர்ச்சிக் குன்றி காணப்படும். பல காதுகளை உடைய தளிர்கள் மற்றும் புதிய பக்கக் கன்றுகள் உருவாகக் கூடும்; சில நேரங்களில் ஒரே தாவரத்தில் 6-7 வரை வளர்ந்து, புதர்த் தோற்றத்தை அளிக்கிறது. வழக்கத்தை விட சோளக்காதுகள் சிறியதாக காணப்படும் மற்றும் அவை முறையாக நிரப்பப்படாது மற்றும் பெரும்பாலும் தளர்வான தானியங்களால் நிரப்பப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எஸ். குன்கெலீயைக் கட்டுப்படுத்த நேரடியான உயிரியல் சிகிச்சை எதுவும் இல்லை. மெட்டார்ஹீலியம் அனிசோப்லியே, பௌவேரியா பாசியானா, பேசிலோமைசஸ் ஃப்யூமோசோரோசியஸ் மற்றும் வெர்டிசிலியம் லெகாணி போன்ற ஒட்டுண்ணிப் பூஞ்சை இனங்களை உடைய சில உயிரியல் பூச்சிக் கொல்லிகளை இலைத் தத்துப் பூச்சிகளின் கடுமையான தொற்று நோயை கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கருத்தில் கொள்ளவும். இந்த நோயைக் கட்டுப்படுத்த எந்த இரசாயன சிகிச்சையும் இல்லை. இலைத் தத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பூச்சிக்கொல்லிச் சிகிச்சைகள் பொதுவாக பரிந்துரைக்கப் படவில்லை. எனவே, இலைத் தத்துப் பூச்சிகள் ஏற்படுவதையும், மக்காச்சோளத்தின் குன்றிய வளர்ச்சியையும் தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது மக்காச்சோளத்தின் இரகம் மற்றும் அதன் உயரத்தைச் சார்ந்து இருக்கும். இவை மக்காச்சோளத்தை மட்டும் பாதிக்கும் ஸ்பிரோபிளாஸ்மா குன்கெலீ என்னும் பாக்டீரியா போன்ற உயிரினத்தால் ஏற்படுகிறது. பல இலைத் தத்துப் பூச்சிகள் எ.கா. தல்புலஸ் மைடிஸ், டி. எலிமினாட்டஸ், எக்சிட்டியானஸ் எக்சிடியோசஸ், கிராமிநெல்லா நைக்ரிபோன்ஸ் மற்றும் ஸ்டிரெல்லஸ் பைக்கலர் ஆகியவை குளிர்காலத்தின் போது செயலற்று இருக்கும் காலத்தில் இந்த நோய்ப் பூச்சியைப் பரப்புகிறது. இவை வசந்த காலத்தின் ஆரம்பத்தில் வெளிவரும் போது, தாவரங்களை உண்ணத் தொடங்கி, நோய்ப் பூச்சியைப் பரப்புகிறது. மக்காச்சோளத் தாவரங்கள் பாதிக்கப்பட்ட 3 வாரத்திற்குப் பிறகு வழக்கமாக நோயின் அறிகுறிகள் தென்படும். வியப்பூட்டும் வகையில், கோடை காலத்தில் இலைத் தத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் போது, இந்த நோய் மிகவும் கடுமையாக இருக்கிறது. இருப்பினும், இது வசந்த காலத்தில் நடப்பட்ட மக்காச்சோளத்திலும் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • இலைத் தத்துப் பூச்சிகளின் உச்சகட்ட எண்ணிக்கையைக் குறைக்கச் சீக்கிரம் நடவு செய்யவும்.
  • பருவம் அல்லாத காலத்தின் போது, தானே வளரும் தாவரங்களை அகற்றவும்.
  • முதிர்ந்த இலைத் தத்துப் பூச்சிகளை எதிர்க்க பிரதிபலிக்கக் கூடிய பிளாஸ்டிக் தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கும் என்பதால் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும்.
  • குளிர்காலங்களில் சோளத்தைப் பயிர் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • எளிதில் பாதிக்காதப் பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும் (இது நோய்ப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை உடைக்கும்).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க