Acidovorax avenae
நுண்ணுயிரி
இந்நோய் பெரும்பாலும் இளம் மற்றும் நடுத்தர வயதான இலைகளில் ஏற்படும். நீளமான, குறுகிய, ஒரே மாதிரியான நீர் தேங்கிய பச்சை வண்ணக் கோடுகள் மைய நரம்பிற்கு அருகே மற்றும் இலையின் அடிப்பாகத்தில் முதலில் உருவாகும். நோய்த்தொற்றின் பிந்தைய நிலையில், இலை முழுவதும் இக்கோடுகள் பரவும், இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து முதலில் வெளிரிய நிறத்திலும், பின்னர் அடர் சிவப்பு நிறத்திலும் சிதைவினை ஏற்படுத்தும். இலைகள் தளர்வுற்று, அழுகிப்போகும், அத்துடன் பலமான துர்நாற்றத்தினையும் ஏற்படுத்தும். தண்டுகளுக்கு இந்த அழுகுதல் பரவும்போது, பெரிய துவாரங்களை கணுவிடைப்பகுதிகளுக்குள் உருவாக்கும். நோய்த்தொற்றின் பிந்தைய நிலையில், பயிரின் உச்சி மற்றும் மஞ்சரி அமைப்பு அடிக்கடி உடைந்து நிலத்தில் விழும். இதனை உச்சி அழுகுதல் என்பர்.
தற்போது அசிடோவொராக்ஸ் அவெனேவுக்கு எதிராக அறியப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முதல்நிலை நோய் தொற்றினைத் தவிர்க்க பொருத்தமான பூஞ்சைக்கொல்லிகளை கொண்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு விதைச் சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
அதிகப்படியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினை இந்த பாக்டீரியா விரும்பும். மண் மற்றும் நோய்பாதித்த கரணைக் குச்சிகள் மூலமாக முதல்நிலை நோய்த்தொற்று பரவும். காற்று, மழைச் சாரல் மற்றும் மண் ஆகியவற்றின் மூலமாக இரண்டாம் நிலை நோய்த்தொற்று பரவும்.

This page is powered by millions of live Plantix diagnoses. See where கரும்பின் பாக்டீரியா இலைக்கருகல் நோய் is spreading — district by district — with Crop Insights, part of Plantix Intelligence.