ஆலிவ்

ஆலிவ் முடிச்சு நோய்

Pseudomonas savastanoi pv. savastanoi

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • சிறுகிளைகள், தண்டுகள் மற்றும் கிளைகளில் முடிச்சுகள் வழக்கமாக தென்படும், எப்போதாவது இலை கணுவிடைப்பகுதிகளில் ஏற்படும்.
  • பட்டையின் இந்த சிதைவுகள் பல சென்டிமீட்டர்களை எட்டும்.
  • மரங்கள் குறைந்த வீரியத்துடன் இருக்கும், வளர்ச்சி குன்றி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

இந்த நோயின் முக்கிய அறிகுறி, வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் கிளைகள், சிறுகிளைகள், அடிமரங்கள் மற்றும் வேர்களில் முடிச்சுகள் தோன்றுவதாகும். கிளைகளில் இவை வழக்கமாக ஏற்படும் ஆனால் இலை கணுவிடைப்பகுதிகள் அல்லது பழத்தின் தண்டுகளில் எப்பொதுவாது தோன்றும். பட்டையின் இந்த சிதைவுகள் பல சென்டிமீட்டர் விட்டம் வரையில் பரவும், எப்போதாவது இலைகள் அல்லது மொட்டுகளிலும் வளரும். தண்டு நுனியில் இருந்து இறந்து போவது பொதுவானது, ஏனெனில் இந்தக் கல் போன்ற அமைப்புகள் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர் போக்குவரத்தை நிறுத்திவிடும். பொதுவாக, பாதிக்கப்பட்ட மரங்கள் வீரியம் குறைந்து, வளர்ச்சி குறைந்து காணப்படும். முடிச்சுகள் வளரும் போது, இவை பாதிக்கப்பட்ட சிறுகிளைகளை குடைந்து கொன்றுவிடும், இதன் விளைவாக பழத்தின் அளவு மற்றும் தரம் குறைந்துவிடும் அல்லது புதிதாக நடப்பட்ட பழத்தோட்டங்களில் மரம் பட்டுப்போகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரிம, தாமிர அடிப்படையிலான பொருட்களைக் கொண்டு ஆண்டுக்கு இரண்டு தடுப்பு நுண்ணுயிர்க்கொல்லி பயன்பாடுகள் (இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில்) மரங்களில் முடிச்சுகள் உருவாவதை வெகுவாகக் குறைத்தன. சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏற்படும் காயங்களில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க, பாக்டீரியாகொல்லிகளைக் கொண்ட தாமிரத்தைக் கொண்டு (உதாரணமாக போர்டாக்ஸ் கலவை) சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பர் சல்பேட் கொண்ட சில பொருட்கள் சான்றளிக்கப்பட்ட கரிம வேளாண்மையில் அனுமதிக்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தாமிரம் அடிப்படையிலான தயாரிப்புகள் மூலம் (மான்கோசெப் உடன்) ஆண்டுக்கு இரண்டு தடுப்பு பாக்டீரியாக் கொல்லி பயன்பாடுகள் (இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில்) பழத்தோட்டங்களில் நோய் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது. சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏற்படும் காயங்களில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க, பாக்டீரியாக் கொல்லிகளைக் கொண்ட தாமிரத்தைக் கொண்டு (உதாரணமாக போர்டாக்ஸ் கலவை) சிகிச்சை அளிக்க வேண்டும். இயந்திர முறையில் அறுவடை செய்யப்பட்ட மரங்களை அறுவடை செய்த உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

சூடோமோனாஸ் சவாஸ்தானோய் இனத்தின் ஒரு வகை பாக்டீரியத்தால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த நோய்க்கிருமி ஆலிவ் மரங்களின் இலைகளை விட பட்டைகளில்தான் வளரும். நோய்த்தொற்றின் தீவிரம் வகைகளைப் பொறுத்து வேறுபடும், ஆனால் பொதுவாக இளம் ஆலிவ் மரங்கள் முதிர்ந்தவற்றை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பாக்டீரியா முடிச்சுகளில் உயிர்வாழ்கிறது, மழை பெய்யும் போது தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா கசிவின் ஒரு பகுதியாக வெளியேறுகிறது. இது ஆரோக்கியமான தாவரங்களுக்கு மழை சாரல்கள் அல்லது இயந்திரம் ஊடாக ஆண்டு முழுவதும் பரவுகிறது. இலைத் தடிப்புகள், பட்டை விரிசல், சீர்திருத்தம் அல்லது அறுவடை செய்யும்போதான காயங்கள் அதன் பரவலுக்கு சாதகமாக இருக்கும். குளிர்காலத்தில் உறைபனி சேதம் குறிப்பாக சிக்கலாக உள்ளது, ஏனெனில் இது பொதுவாக மழை பெய்யும் அதே நாட்களின்போது ஏற்பட்டு, தொற்றுநோய்க்கான சரியான சூழல்களை உருவாக்குகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட 10 நாட்களில் இருந்து பல மாதங்கள் வரை கட்டி போன்ற அமைப்புகள் தனித்தனியாகவோ அல்லது தொடர் வரிசையாகவோ தோன்றும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் கிடைத்தால் அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வறட்சியான காலங்களில், கல் போன்ற அமைப்புகள் உடைய பாதிக்கப்பட்ட கிளைகளை சீர்திருத்தம் செய்யவும்.
  • இலைகள் ஈரமாக இருக்கும் போது, முக்கியமாக அறுவடையின் போது தோட்டங்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
  • சாத்தியமானால், மழை எதிர்பார்க்கப்படும் போது அறுவடை செய்வதைத் தவிர்க்கவும்.
  • சுத்திகரிக்கப்பட்ட கத்தரிக்கோல் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி வேலை செய்யுங்கள், வயலில் வேலை செய்யும் போது அவற்றைத் தவறாமல் கிருமி நீக்கம் செய்யுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க