நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை சொறி நோய்

Xanthomonas axonopodis pv. citri

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்ட துரு-பழுப்பு நிறத்தில் மரு-போன்ற பள்ளங்கள் இலைகளில் தோன்றும்.
  • பின்னர், சிதைவுகள் எண்ணெய் பசையான, நீரில் நனைத்த பழுப்பு நிற ஓரங்களுடன் வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிற மையப் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • பழங்கள் மற்றும் கிளைகளில் இதே போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

மரங்கள் தனது அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிக்கப்படலாம், மேலும் அறிகுறிகள் இலைகள், பழங்கள் அல்லது கிளைகளிலும் தோன்றலாம். புதிதாக பாதிக்கப்பட்ட இலைகளின் இருபுறத்திலும் சிறிய, சற்று உயர்ந்த, பஞ்சுபோன்ற புண்கள் உருவாகும். அவை முதிர்ச்சியடையும்போது, இந்தப் புண்களானது தனித்துவமான பிரகாசமான மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்ட துரு-பழுப்பு நிறத்தில் மரு-போன்ற பள்ளங்களாக உருவாகும். இவை இறுதியில் உடைந்து, தனது உள்ளடக்கத்தை வெளியிட்டு, வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் மையம் மற்றும் எண்ணெய் போன்ற, நீர் தோய்த்த பழுப்பு நிற விளிம்புகளுடன் ஒரு வித்தியாசமான காயங்களை உருவாக்கும். எப்போதாவது, முதிர்ந்த புண்களின் மையப்பகுதி கீழே விழுந்து, குண்டடிபட்ட துளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதேபோன்ற அறிகுறிகள், பழங்கள் மற்றும் கிளைகள் முதலியவற்றிலும் தோன்றும், அங்கு அவை போதுமான அளவு பரிமாணத்தை அடையும். புண்களின் மையப்பகுதி சற்று உயர்ந்து, சொறி அல்லது தக்கை போன்று காணப்படும். இலை உதிர்தல் மற்றும் முன்கூட்டியே பழங்கள் கீழே விழுதல் போன்றவை ஏற்படும், கடத்து திசுக்களில் ஏற்படும் குடைவுகள் மூலம் கிளைகள் அழிந்துபோகலாம். முதிர்ச்சி அடைந்த பழங்களை விற்பனை செய்ய முடியாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சாந்தோமோனாஸ் ஆக்சோனோபோடிஸ் பி.வி. சிட்ரிக்கு எதிரான மாற்று சிகிச்சைகள் எதுவும் அறியப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கபெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக, நாரத்தை சொறிநோய் கண்டறியப்பட்டவுடன் அதற்கு சிகிச்சையளிக்க எந்தவொரு பயனுள்ள கட்டுப்பாடுகளும் இல்லை. கீழே விழுந்து கிடக்கும் தாவரப் பொருட்களை அகற்றி மற்றும் அழித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தோட்டங்களில் நோயின் தாக்கத்தைக் குறைக்க மிகவும் உதவும். சேதங்களைக் குறைக்க நாரத்தை சில்லிட்ஸ்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஒரு வழியாகும். காப்பர் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் அல்லது பாக்டீரியாக் கொல்லிகள் தொற்றுக்கு எதிராக ஒரு தடுப்பை ஏற்படுத்தும், ஆனால் அவை ஏற்கனவே ஏற்பட்ட தொற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்காது.

இது எதனால் ஏற்படுகிறது

நாரத்தை சொறி நோய் என்பது வணிக வகை ரீதியான நாரத்தை மரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த இனங்களை தாக்கும் மிக மோசமான, தொற்றக்கூடிய நோயாகும். இது ஸ்சாந்தொமோனாஸ் சிட்ரி என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது, இது பழங்கள், இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள பழைய காயங்களில் 10 மாதங்களுக்கு மேல் வாழக் கூடியது. இது இலைப் பரப்பில் உள்ள காயங்கள் அல்லது இயற்கையான துளைகள் வாயிலாக தாவரத் திசுக்களினுள் நுழைந்து, அங்கு முறையாக வளரும். இலைகள் மற்றும் பிற திசுக்களில் உருவாகும் பள்ளங்களில் பாக்டீரியாக்கள் இருக்கும், இவை ஈரமான சூழலில் வெளியேறி, குறுகிய தூரத்திற்கு மழைப்பொழிவு அல்லது மேல்நிலை நீர்ப்பாசன முறைகளால் பரவும். பொதுவாக பலமான காற்றுடன் கூடிய அதிக ஈரப்பதம், வெப்பம் (20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் மழைக்கால வானிலை போன்றவை நோய் ஏற்படுவதற்கு சாதகமான சூழல் ஆகும். நாரத்தை சில்லிட்ஸ், இலை துளைப்பான், பறவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கருவிகள் மற்றும் உபகரணங்கள் போன்றவை மரங்கள் அல்லது தோப்புகள் இடையே பாக்டீரியாவை பரப்பும். இறுதியாக, பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது நாற்றுகள் அல்லது எடுத்துச் செல்லக்கூடிய தாவர பொருட்கள் போன்ற தாவர பாகங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் பிரச்சினையாகும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் உள்ள நோய்த் தொற்று தடுப்பு ஒழுங்குமுறைகளைச் சரிபார்க்கவும்.
  • நோய் தடுப்பு பண்புகள் கொண்ட நாரத்தை வகைகளைத் தேர்வு செய்யவும்.
  • முடிந்தவரை சான்றளிக்கப்பட்ட மூலங்களிடமிருந்து பயிர்களைப் பெறவும், ஆரோக்கியமான பயிர்ப் பொருட்களைப் பெறுவதை உறுதி செய்துகொள்ளவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என மரங்களைக் கண்காணிக்கவும்.
  • உலர் பருவத்தில் பாதிக்கப்பட்ட மரக்கிளையின் பாகங்களை அகற்றிவிடவும்.
  • நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்க பயன்பாட்டுக்கு இடையே உபகரணங்கள் மற்றும் கருவிகளைச் சுத்தப்படுத்தவும்.
  • இலை திரள்கள் ஈரமாக இருக்கும்போது, வயல்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
  • அருகில் இருக்கும் ஆரோக்கியமான மரங்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்களை அழித்துவிடவும்.
  • கீழே விழுந்த இலைகள், பழங்கள் மற்றும் கிளைகளை நிலத்திலிருந்து அகற்றி மற்றும் அழித்துவிடவும்.
  • நோய் பரவுவதைத் தவிர்க்க, வயல்களுக்கு இடையே காற்று இடர்த் தடுப்புகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க