அரிசி

அரிசியின் பாக்டீரியா கருகல் நோய்

Xanthomonas oryzae pv. oryzae

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சாம்பல் கலந்த பச்சை நிற கோடுகள்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் வாடிப்போகுதல்.
  • இலைகளிலிருந்து பால் போன்ற கசிவுகள் சொட்டும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நாற்றுகளில், பாதிக்கப்பட்ட இலைகள் முதலில் வைக்கோல் அல்லது மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் வாடி, இறந்துவிடும். முதிர்ந்த தாவரங்களில், இந்த நிகழ்வு பெரும்பாலும் பக்கக்கன்று வளருவதில் இருந்து கதிர்கள் உருவாகும் வரை ஏற்படும். இலைகளில் வெளிர் பச்சை முதல் சாம்பல் கலந்த பச்சை நிறம் வரை நீர் தேங்கிய கோடுகள் முதலில் தோன்றும். பின்னர் இந்த சிதைவுகள் ஒன்றுசேர்ந்து, ஒழுங்கற்ற ஓரங்கள் கொண்ட பெரிய, மஞ்சள் – வெள்ளை நிற சிதைவுகளாக மாறும். இலைகள் வெளிறிய நிறமாகி, படிப்படியாக வாடி, இறந்துவிடும். நோயின் இறுதி நிலையில்,பால் போன்ற பாக்டீரியா கசிவுகள் இலைகளில் இருந்து சொட்டுவதை காணலாம். இந்த சொட்டுகள் பின்னர் உலர்ந்து, வெள்ளை தகடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறியானது சில தண்டு துளைப்பானால் ஏற்படும் சேதங்களில் இருந்து இந்த நோயை வேறுபடுத்தி காட்டும். பாக்டீரியா இலை கருகல் நோய் அரிசியை தாக்கும் மிகவும் கடுமையான நோய்களில் ஒன்றாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இதுநாள் வரை, பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் உயிரியல் ரீதியான தயாரிப்புகள் வணிக ரீதியாக எதுவும் கிடைக்கவில்லை. தாமிரத்தின் அடிப்படையிலான தயாரிப்புகளின் பயன்பாடு அறிகுறிகளை ஒழிக்க அல்லது குறைக்க உதவும் ஆனால் அவற்றால் நோயை கட்டுப்படுத்த முடியாது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பாக்டீரியா இலை கருகல் நோயை எதிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது காப்பர் சல்பேட் மூலம் விதைகளுக்கு சிகிச்சல் அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. சில நாடுகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே உங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாட்டு வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது சாந்தோமோனாஸ் ஓரிகே பிவி. ஓரிகே என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது புல் களைகளிலோ அல்லது பாதிக்கப்பட்ட பயிர்களின் அடித்தாள்களிலோ வாழும். காற்று மற்றும் மழைத் தூறல்கள் அல்லது நீர்ப்பாசன தண்ணீரின் மூலம் இந்த பாக்டீரியாக்கள் பரவுகின்றன. மோசமான வானிலை (அடிக்கடி மழை, காற்று), அதிக ஈரப்பதம் (70% க்கு மேலே) மற்றும் சூடான வெப்பநிலை (25 ° C முதல் 34 ° செல்சியஸ் வரை) போன்ற காலநிலைகளில் நோயின் தாக்கம் மற்றும் அவற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும். அதிக நைட்ரோஜன் கொண்ட உரங்களை பயன்படுத்துதல் அல்லது நெருக்கமாக நடவு செய்தல் குறிப்பாக நோய் பாதிப்புக்குள்ளாகும் வகைகளில் நோய்க்கு சாதகமாக அமையும். நோய் எவ்வளவு சீக்கிரமாக ஏற்படுகிறதோ அவ்வளவுக்கு விளைச்சல் இழப்பு அதிகமாக இருக்கும். கதிர்கள் வளரும் போது தாவரங்கள் பாதிக்கப்பட்டால், மகசூல் பாதிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அதிக அளவிலான தானியங்கள் உடையக்கூடும். வெப்பமண்டல மற்றும் மிதமான வெப்பநிலை கொண்ட சூழ்நிலைகளில், குறிப்பாக நீர்ப்பாசனம் மற்றும் மழை பொழியும் தாழ்நில பகுதிகளில்,இந்த நோய் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான விதைகளை மட்டும் பயன்படுத்தவும், சாத்தியமானால் சான்றளிக்கப்பட்ட ஆதரங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளை பயன்படுத்தவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட அரிசி வகைகளை பயன்படுத்துவதே நோய்கிருமியை கட்டுப்படுத்த மிகவும் திறன்மிக்க (மிகவும் மலிவான!) வழியாகும்.
  • நாற்றுகள் நடும்போது அவற்றை கவனமாக கையாளவும்.
  • நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வயல்கள் மற்றும் நாற்றுப்பண்ணையில் நல்ல வடிகாலினை உறுதி செய்யவும்.
  • அதிகப்படியான உரப்பயன்பாட்டை தவிர்க்க தழைச்சத்துக்களின் உர பயன்பாட்டை சரி செய்யவும், மற்றும் பருவகாலம் முழுவதும் அவற்றை பிரித்து பயன்படுத்தவும்.
  • வானிலை சாதகமாக இருக்கும்போது தழைச்சத்தின் கடைசி பயன்பாட்டுடன் கூடுதல் அளவாக பொட்டாஷ் என்பதையும் பயன்படுத்தவும்.
  • யூரியா வடிவத்தில் தழைசத்துக்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • வயல்கள் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகள் மற்றும் மாற்று புரவலன்களை அகற்றி அழித்து விடவும்.
  • பாக்டீரியாவுக்கு புரவலனாக செயல்படும் அரிசி பயிர்தாள், வைக்கோல், மறுதாம்புகள் மற்றும் தானே வளரும் நாற்றுகளுக்கு அடியில் உழுதல் வேண்டும்.
  • மண் மற்றும் தாவர கழிவுகளில் உள்ள நோய் காரணிகளை அடக்குவதற்காக வயல்களை பருவங்களுக்கு இடையே உலர விடவும் (தரிசாக விடவும்).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க