வெள்ளரிக்காய்

இலைக்கோணப் புள்ளி நோய்

Pseudomonas syringae

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய, வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர் அவை பெரிதாகி, கோண வடிவம் முதல் ஒழுங்கற்ற, நீர்த் தோய்த்த பகுதிகளாக மாறும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் சாம்பல் நிறமாகி, கீழே விழுந்து, ஒழுங்கற்றத் துளைகளை ஏற்படுத்தும்.
  • பழங்களின் மீதான வட்டப் புள்ளிகள், பின்னர் வெள்ளை நிறமாகி, பிளந்த விரிசல்களாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
மேலும்

வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

சிறிய, வட்ட வடிவிலான புள்ளிகள் ஆரம்பத்தில் இலைகளில் தோன்றும். பின்னர் இந்தப் புள்ளிகள் பெரிதாகி, கோண வடிவில் அல்லது ஒழுங்கற்ற, நீர்த் தோய்த்த திட்டுக்களாக மாறும். ஈரமான காலநிலைகளில், பாக்டீரியாவின் கசியும் நீர்த்துளிகள் இலைகளின் கீழ்ப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் இருந்து வெளியேறும். இந்தத் துளிகள் ஈரப்பதத்தை இழந்து, வறண்ட காலநிலையில் வெள்ளை நிற மேலோடுகளாக உருவாகும். பின்னர், இந்த பாதிக்கப்பட்டப் பகுதிகள் சிதைந்து, சாம்பல் நிறமாகி, சுருங்கி, பெரும்பாலும் ஆரோக்கியமான இலைத் திசுக்களில் இருந்து கிழிந்து, கீழே விழுந்து விடும். இந்தக் காயங்கள் பெரும்பாலும் மஞ்சள் ஓரங்களைக் கொண்டிருக்கும். பெரிய, ஒழுங்கற்றத் துளைகள் இலைகளுக்குக் கந்தையானத் தோற்றத்தை அளிக்கும். சில எதிர்ப்புத்திறன் கொண்ட தாவர வகைகளில், இந்த காயங்கள் சிறியதாகவும், மஞ்சள் நிற ஓரங்கள் இன்றியும் காணப்படும். பாதிக்கப்பட்ட பழங்கள் பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது, சிறிய, கிட்டத்தட்ட வட்ட வடிவிலான புள்ளிகளைக் கொண்டிருக்கும். பாதிக்கப்பட்டத் திசுக்கள் இறந்துவிட்டால், அவை வெண்மையாக மாறி, வெடிப்புகள் பிளந்து, சந்தர்ப்பவாத பூஞ்சை மற்றும் பாக்டீரியாவைக் குடியேறச் செய்து, முழு பழத்தையும் அழித்து விடும். இளம் பழங்களில் ஏற்படும் நோய்த் தொற்று அதிகப்படியான பழங்களை கீழே விழுந்து விடச் செய்யும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட விதைப்பொருட்களை, 30 நிமிடங்களுக்குப் பூண்டுக் கரைசல்கள் மற்றும் சூடான நீரில் (50 ° செல்சியஸில்) சிகிச்சை செய்யலாம். கண்ணாடிக் கூடிகளில், கோண இலைப்புள்ளி நோய் ஏற்படுவதை ஈரப்பத நீக்கிகளைக் கொண்டு இரவுநேர ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதன் (80-90% வரை) மூலம் குறைக்கலாம். உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணி பெண்டாபேஜ் திறம்பட பி.சிரிங்கேவைக் கட்டுப்படுத்துகிறது. கரிமச் செப்புப் பூஞ்சைக் கொல்லிகளும் நோய் பரவுவதைக் குறைக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செப்பு ஹைட்ராக்ஸைடு கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். வெப்பநிலை 24 டிகிரி செல்சியசிற்கும் மேலாக இருக்கும் போது மற்றும் இலைதிரள்கள் ஈரமாக இருக்கும் போது, இந்தச் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலைத் திரள்கள் உலர்ந்து இருக்கும் வெப்பமான நாட்களில் தெளிப்பது, தாவரங்களைக் காயப்படுத்தக்கூடும். நோய் கட்டுப்பாட்டை அடைய வாரம் ஒரு முறை தெளிக்க நேரிடலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் சூடோமோனஸ் சிரிங்கே என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது அனைத்துச் சுரைக்காய் இனப் பயிர்களையும் பாதிக்கக் கூடியது. பாதிக்கப்பட்ட விதைகள் அல்லது மண்ணில் உள்ள தாவரக் கழிவுகளில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழக்கூடியது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, பாதிக்கப்பட்ட இடங்களில் தெளிவான, வெள்ளை நிறத்தில், பிசுபிசுப்பான பாக்டீரியாவின் கசியும் நீர்த்துளிகள் உற்பத்தியாகும். இந்த பாக்டீரியாக்கள் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்குப் பணியாளர்களின் கைகள் மற்றும் கருவிகள், பூச்சிகள், தெளிக்கப்படும் தண்ணீர் அல்லது காற்று மூலம் பரவக்கூடியது. இறுதியில், பாக்டீரியா இலை மேற்பரப்பில் (இலைத் துளைகள்) காணப்படும் துளைகள் வழியாக தாவரத்திற்குள் நுழையும். பழங்கள் பாதிக்கப்படும் போது, பாக்டீரியா சதையினுள் ஆழமாகச் சென்று, விதைகளைப் பாதிக்கிறது. சிறிது ஆச்சரியமாக இருந்தாலும், புகையிலைத் திசு அழுகல் வைரஸால் பாதிக்கப்பட்ட இலைகள், இந்த இலைக் கோணப்புள்ளி நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கான எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமானத் தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து கிடைக்கப்பெறும் விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப் பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • தெளிப்பான் நீர்ப் பாசனத்திற்குப் பதிலாக உழுசால் நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தவும்.
  • அதிகமாக நீர் பாய்ச்சக் கூடாது.
  • தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளைத் தேர்வு செய்யவும்.
  • குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு சுரைக்காய் இனங்கள் பயிரிடாத வயல்களில் விதை மற்றும் பழ உற்பத்திக்காக பயிர்களை நடவு செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குச் சுரைக்காய் இனங்களைப் பயிர் செய்ய வேண்டாம்.
  • பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான தாவரப் பொருட்களை அகற்றி அழித்து விடவும் (எடுத்துக்காட்டாக எரித்தல்).
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயல் வேலைக்குப் பிறகு கருவிகளை முழுமையாக சுத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க