மற்றவை

கருப்பு அழுகல் நோய்

Xanthomonas campestris pv. campestris

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • மஞ்சள் நிற, ஆப்பு வடிவில் திட்டுக்கள் இலைகளின் ஓரங்களில் காணப்படும், பின்னர் இவை இலையின் உட்புறமாக படரும், இதுவே நோயின் முதன்மை அறிகுறியாகும்.
  • நோய் அதிகரிக்கையில், இலையின் மஞ்சள் நிறப்பகுதி பெரிதாகி, பழுப்பு நிறமாகும், திசுக்கள் இறக்கும்.
  • நோயின் இறுதிநிலையில், இலை நரம்புகள் கருப்பாக மாறும் இதனால் இதற்கு கருப்பு அழுகல் நோய் என்று பெயர்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
முட்டைக்கோசு
பூக்கோசு.

மற்றவை

அறிகுறிகள்

பெரும்பாலான நேரங்களில் முட்டைக்கோஸ் இலைகளின் பாதிப்புகள் கோடைக்காலத்தின் பிற்பகுதியில்தான் தென்படும். மஞ்சள் நிற, ஆப்பு வடிவில் திட்டுக்கள் இலைகளின் ஓரங்களில் காணப்படும், பின்னர் இவை இலையின் உட்புறமாகவும், தண்டுகளுக்கு அடிப்பகுதியிலும் படரும், இதுவே நோயின் முதன்மை அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் ஃபுசேரியம் வாடல் நோயிலிருந்து இவற்றை வேறுப்படுத்திக்காட்டுகிறது, அந்நோயில் அறிகுறிகள் நிலத்திலிருந்து மேல்நோக்கி தண்டுகளை நோக்கி படரும். நோய் அதிகரிக்கையில், இலையின் மஞ்சள் நிறப்பகுதி பெரிதாகி, பழுப்பு நிறமாகும், திசுக்கள் இறக்கும். நோயின் இறுதிநிலையில், இலை நரம்புகள் கருப்பாக மாறும் இதனால் இதற்கு கருப்பு அழுகல் நோய் என்று பெயர். இறுதியில் இலை சிதைவுறும். நோய்க்காரணிகள் தண்டுகளுக்குள் நுழைந்து வாஸ்குலர் அமைப்பு வழியே பரவும், மண் மேற்பரப்பிற்கு அருகே இருக்கும் பகுதியினை வெட்டும்போது, வளைய வடிவிலான கருப்பு நிறமாற்றத்தைக்கொண்டு இதனை அறியலாம்

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடான நீரில் 30 நிமிடங்கள் சிகிச்சை செய்து விதைப்பொருட்களை தூய்மைப்படுத்தலாம். இது 100 சதவீத பலன் தரும் முறையல்ல, ஆனால் இது நோயின் தாக்கத்தினை குறிப்பிட்ட அளவில் குறைக்கும் தன்மையுடையது. விதைகளின் முளைக்குத் திறனைக் குறைப்பது, இச்சிகிச்சையின் பாதகமாகும்..

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சூடான நீரின் மூலம் விதைச் சிகிச்சை செய்வது நோய்பாதிப்பினைக் குறைக்கும். இலைவழி சிகிச்சைகளை காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள் கொண்டு ஒவ்வொரு 7-10 நாட்களுக்குள்ளும் செய்ய வேண்டும். இதன் மூலம் நோய் பரவும் வேகத்தினைக் குறைக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்த சிகிச்சை முறைகள் முட்டைக்கோஸின் வெளிப்புற இலைகளில் நோயினை பரவச் செய்துவிடும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண்வழிப் பரவும் ஃஸாந்தோமோனாஸ் கேம்பெஸ்டிரிஸ் எனும் பாக்டீரியாக்களினால் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை பாதிக்கப்பட்ட பயிரின் எஞ்சிய பகுதிகள் அல்லது விதைகளில் இரண்டாண்டுகள் வரை வாழக்கூடியவை அல்லது ப்ராசிக்கா குடும்ப வகை பயிர்களில் வெகுகாலம் வாழக்கூடியவை. இவை முட்டைக்கோஸ் குடும்பத்தின், அதிகளவிலான காய்கறிகளை (ப்ரக்கோலி, காலிஃப்ளவர், டர்னிப், முள்ளங்கி, நூல்கோல் போன்றவையும் அடங்கும்) பாதிக்கும். பாக்டீரியாக்கள் மழைச்சாரல்களின் மூலம் ஆரோக்கியமான பயிர்களுக்குச் செல்கின்றன, அங்கு பல்வேறு வழிகள் மற்றும் காயங்களின் மூலம் உள்நுழைகின்றன. பயிர் ஒருமுறை பாதிக்கப்பட்டால் பிற முட்டைக்கோஸ் பயிர்களுக்கு இந்த நோய் விரைவில் பரவும். மண் அல்லது விதைகள் பாதிக்கப்பட்டிருந்தால், முதல் அறிகுறிகள் கள படுகைகளிலேயே தென்படும். அதிக ஈரப்பதம் மற்றும் 25-30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் நிலைகள் பாக்டீரியாக்களுக்கு ஏதுவானதாகும். அடர்த்தியாக பயிரிடப்பட்ட பயிர்களில் பாக்டீரியாக்கள் அருகே உள்ள தாவரங்களுக்கு விரைவில் பரவும். இந்த நிலைகளில், மகசூல் 75-90% குறைந்துவிடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களை பயிரிடவும் மற்றும் மழைக்காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் தன்மை கொண்ட பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • நாற்றுகளை வெட்ட வேண்டாம் ஏனெனில் அவை பெரிய அளவில் இருக்கும்.
  • களத்திற்கு சிறந்த வடிகால் முறையினை வழங்கவும் மற்றும் உயர்தள படுகைகளை அமைக்கவும்.
  • முந்தைய மூன்று ஆண்டுகளில் காலிஃப்ளவர், காலே, ப்ராகோலி அல்லது ஏதேனும் ப்ராசிக்கா குடும்ப வகை பயிர்கள் பயிரிட்ட நிலத்தில் முட்டைக்கோஸ் பயிரிட வேண்டாம்.
  • ப்ராசிக்கா குடும்ப வகை பயிர்கள் மற்றும் தேவையற்ற களைகளில் இருந்து நிலத்தினை பாதுகாத்து சுகாதாரமாக வைத்திருக்கவும்.
  • பகல்பொழுதில் மத்தியில் நீர்ப்பாசனம் செய்து, தெளித்தல் முறையில் நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்கவும்.
  • நிலம் ஈரமாக இருக்கும்போது வேலை செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்.
  • நோய் குறித்து தொடர்ச்சியாக நிலத்தினைக் கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட நிலத்தில் படும் முதிர்ந்த இலைகளை வெட்டவும்.
  • கருவிகளை பிளீச் மூலம் சுத்தம் செய்து சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ளவும்.
  • அறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பயிர்ப்பகுதிகளை, உழுது மண்ணில் புதைத்துவிடவும் அல்லது எரித்துவிடவும்.
  • பயிர்களுக்கு காயங்களை ஏற்படுத்தும் முட்டைக்கோஸ் புழுக்கள் மற்றும் பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க