குடைமிளகாய் & மிளகாய்

பாக்டீரியா இலைப்புள்ளி நோய்

Xanthomonas sp.

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய, மஞ்சள்-பச்சை நிற சிதைவுகள் இளம் இலைகளில் காணப்படும்.
  • அடர் நிறத்தில், நீர் ஊறியது போன்ற சிதைவுகள் முதிர்ந்த இலைத்திரள்களில் மஞ்சள் நிற வட்டங்களுடன் காணப்படும்.
  • இலைகள் உருக்குலைந்து, முறுக்கிய நிலையில் இருக்கும்.
  • பழத்தில் காணப்படும் நீர் தோய்த்த பகுதிகள் கரடு முரடாகி, பழுப்பு நிறத்தில் தேமல் போன்று மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்


குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

இளம் இலைகள் உருக்குலைந்தும், முறுக்கப்பட்டும் காணப்படுதல், சிறிய, மஞ்சள்-பச்சை நிற சிதைவுகள் போன்று இளம் இலைகளில் தோன்றுதல் போன்றவை முதல்நிலை அறிகுறிகள் ஆகும். முதிர்ந்த இலைகளில் சிதைவுகள் கோணலாகவும், அடர் பச்சை நிறத்துடன் சிறிது பிசு பிசுப்புடனும் காணப்படும், இதனைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்களும் சூழப்பட்டிருக்கும். இலை ஓரங்கள் அல்லது நுனிகளில் இவை அதிகம் தென்படத் தொடங்கும். இலைகளின் மையப் பகுதி உலர்ந்த நிலையாக மாறி சிதைந்து போவதால், இந்த புள்ளிகள் துளைகள் போன்று காட்சியளிக்கும். காய் பகுதிகளில் (0.5 செமீ வரை) வெளிர் பச்சை நிறத்தில் மாறத் தொடங்கும், பின்னர் நீர் சேர்ந்த பகுதிகள் போலவும், இறுதியாக முரட்டு தோற்றமுடையதாக மாறி, பழுப்பு நிறத்துடன் தேமல் போன்று காட்சியளிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாக்டீரியா இலைப்புள்ளி நோய் மிகவும் கடினமானது, சிகிச்சை அளிக்கும் செலவும் மிகவும் அதிகம். எனவே இந்த நோய் பருவ காலத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டால், மொத்த பயிர்களையும் அழிப்பது பற்றி யோசிக்கவும். காப்பர் கலந்துள்ள பாக்டீரியா கொல்லிகளை பயிர்களில் பயன்படுத்தி இலைதிரள்கள் மற்றும் பழங்களுக்கு பாதுகாப்பினை வழங்கலாம். பாதிப்பினை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை மட்டும் குறிப்பிட்டுக் கொல்லக் கூடியே பாக்டீரியா வைரஸ்கள் (பாக்டீரியாக் கொல்லிகள்) சந்தைப் பகுதிகளில் கிடைக்கின்றன. விதைகளை 1.3% சோடியம் ஹைபோகுளோரைட்டில் சுமார் ஒரு நிமிடம் வரை அல்லது வெப்பமான தண்ணீரில் (50 டிகிரி செல்சியஸ்) சுமார் 25 நிமிடங்கள் வரை மூழ்க வைக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். காப்பர்-கொண்ட பாக்டீரியா கொல்லிகளை பாதுகாப்பானாக பயன்படுத்தி, ஓரளவு நோயைக் கட்டுப்படுத்தலாம். நோய் அறிகுறி தென்பட்டதும், வெதுவெதுப்பான ஈரமான நிலைமைகள் நிலவும்போது, 10 முதல் 14 நாட்கள் இடைவெளியில் இதனை பயன்படுத்தவும். செயல்படும் மூலப்பொருள் செப்பு மற்றும் மான்கோசெப் சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

பாக்டீரியா இலைப்புள்ளி நோய் உலகம் முழுவதும் உள்ள பயிர்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்று, அத்துடன் வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் வளரும் மிளகு மற்றும் தக்காளி பயிர்களில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவல்லது. இந்த நுண்ணுயிரிகள் விதையின் உள்பகுதி அல்லது வெளிப்பகுதியில் உயிர்வாழ்கின்றன, அதே நேரத்தில் சில குறிப்பிட்ட களைகளில் உயிர்வாழ்ந்து பின்னர் மேல்நிலை நீர்ப்பாசனம் அல்லது மழை மூலம் பரவுகின்றன. இலைகளில் உள்ள சிதைவுகள் மற்றும் துளைகளின் வழியே இவை தாவரங்களினுள் நுழைகின்றன. 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்நோய் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாகும். ஒரு முறை பயிர் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், இதனால் மொத்த பயிர்களையும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற, நோய் பாதிக்காத விதைகளைப் பயிரிடவும்.
  • நோயை தடுக்கக்கூடிய தன்மை உடைய பயிர் வகைகளைப் பயிரிடவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • இந்த இலைப்புள்ளியால் பாதிக்கப்பட்டு காணப்படும் நாற்றுகளை கண்டறிந்து, அவற்றை நீக்கி எரித்துவிடவும்.
  • நிலத்தில் மற்றும் நிலத்தினைச் சுற்றி வளரும் தேவையற்ற களைகளை அழித்துவிடவும்.
  • மண்ணில் மாசுக்கள் நிறைவதைத் தவிர்க்க ஈரத்தினை உறிஞ்சும் தழைக்கூளங்களை தாவரங்களை சுற்றி பயன்படுத்தவும்.
  • சுத்தமான கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனம் செய்வதையும், இலைகள் ஈரப்பதமாக இருக்கும்போது அங்கு வேலை செய்வதையும் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப்பிறகு நிலத்தை உழுது தாவரக்குப்பைகளை புதைக்கவும்.
  • மாற்றாக அதனை அகற்றி, அழித்து விடவும்.
  • பயிர் சுழற்சியினை 2-3 ஆண்டுகளுக்கு மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க