நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

சிட்ரஸ் மஞ்சள் தேமல் வைரஸ்

CiYMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் நிற வடிவமைப்புகள்.
  • பழங்களில் அசாதாரண மேற்பரப்பு மற்றும் நிறம்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

அறிகுறிகள் புதிய இலைகளில் சிறிய மஞ்சள் நிற புள்ளிகளாகத் தோன்ற ஆரம்பிக்கும், இவை பின்னர் பெரிதாகி, நரம்புகள் நெடுகிலும் பிரகாசமான மஞ்சள் நிற வடிவங்களை உருவாக்கும். முதிர்ந்த இலைகள் தோல் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் இளம் இலைகள் சிறியதாகவே இருக்கும். பழங்களில் மஞ்சள் நிற திட்டுகள் காணப்படும், உப்பிய பச்சை பகுதிகள் தென்படும். மரங்களின் வளர்ச்சியும் பழ உற்பத்தியும் பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பிரச்சனைக்கு கரிம கட்டுப்பாடு சாத்தியமில்லை.

இரசாயன கட்டுப்பாடு

வைரஸைக் கட்டுப்படுத்த நோய்க் காரணிக்கான இரசாயனக் கட்டுப்பாடு போதாது. வைரஸ் இல்லாத மொட்டுடைய இளம் கிளைகளை பயன்படுத்துவதை எப்போதும் உறுதி செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சிட்ரஸ் மஞ்சள் தேமல் வைரஸ் (CYMV) இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இப்போது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக உள்ளது, இங்கு சிட்ரஸ் பெரிய அளவில் வளர்க்கப்படுகிறது. இந்த நோய் அசுத்தமான மொட்டுடைய இளம் கிளைகள் மூலம் பரவுகிறது மற்றும் பல வணிக நாற்றங்கால்களிலும் இந்த நோய் இருப்பது பதிவாகியுள்ளன. சிட்ரஸ் மாவுப்பூச்சி மற்றும் அசுத்தமான கருவிகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு ஒட்டுண்ணி தாவரம் மூலம் பரவும், ஒட்டுண்ணி தாவரம் என்பது பொதுவாக களையாக அறியப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • நடவுக்கு வைரஸ் இல்லாத, சான்றளிக்கப்பட்ட மொட்டுடைய சிறுகிளைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • சிட்ரஸ் மாவுப்பூச்சி (பிளானோகாக்கஸ் சிட்ரி) வைரஸின் நோய்க்காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, எனவே இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்துவதும் உதவியாக இருக்கும்.
  • களைகள் மற்றும் குறிப்பாக ஒட்டுண்ணி தாவரங்கள் இல்லாமல் வயலை சுத்தம் செய்யவும்.
  • வெவ்வேறு மரங்களில் பயன்படுத்தும்போது உங்கள் உபகரணங்களை எப்போதும் சுத்தம் செய்யுங்கள்.
  • நோய் எதிர்ப்பிற்கான தயாரிப்பு இன்னும் கிடைக்கவில்லை, முன்கூட்டியே நோயைக் கண்டறிவதற்கான உணர்திறன் கொண்ட கண்டறியும் கருவியை இன்னும் உருவாக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க