கரும்பு

கரும்பின் மஞ்சள் இலை வைரஸ்

Sugarcane Yellow Leaf Virus

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலையின் மையநரம்பு மஞ்சள் நிறமாகுதல்.
  • மிகவும் இளம் இலைகள் உலர்ந்து போகுதல்.
  • கரும்பின் குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

கரும்பின் மஞ்சள் இலை வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றானது குன்றிய கரும்பு வளர்ச்சி, இலைகளின் நிறமாற்றம் மாற்றம் தாவரத்தின் கொத்தான தோற்றம் உள்ளிட்ட தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தும். சூழல் போன்று விரிவடையும் உச்சி இலையிலிருந்து கீழே இருக்கும் 3 முதல் 6 இலைகளில் மையநரம்புகள் மஞ்சள் நிறமாகும். தூரத்திலிருந்து பார்க்கும்போது இலைகள் பொதுவாக மஞ்சள் நிறமாக காணப்படும் வரை, பருவகாலத்தை கடக்கையில், மஞ்சள் நிறமாகுதல் இலையின் மைய நரம்பிலிருந்து இலை பரப்பிற்கு விரிவடையும். முதிர்ந்த கரும்புகளில் இது அதிகம் கவனிக்கப்படுகிறது. கடுமையான நோய்த்தொற்றின் கீழ், சுழல் இலைகளுடன் சேர்ந்து காய்ந்து, உச்சிப்பகுதி கொத்து போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. சில நேரங்களில் சிவப்பு நிறமாற்றம் காணப்படுகிறது. முதிர்ந்த கரும்புகளில், இந்த நோய் பெரிதும் பரவுகிறது மற்றும் வெகு தூரத்திலிருந்து அடையாளம் காணப்படுகிறது. அறிகுறிகள் தாவர அழுத்தம், பூச்சி சேதம் அல்லது நீர் பற்றாக்குறை போன்ற பிற காரணிகளுடனும் தொடர்புபடுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அசுவினி கூட்டத்தின் கட்டுப்பாடு அவசியம். அசுவினி ஏதேனும் தென்படுகிறதா என இலைகளின் அடிப்புறத்தை கண்காணிக்கவும், அவ்வாறு அசுவினி காணப்பட்டால், உடனடியாக பூச்சிக்கொல்லி சோப்பு, வேப்ப எண்ணெய் அல்லது பைரெத்ராய்டு சார்ந்த கரிம பொருட்களை கொண்டு சிகிச்சையளிக்கவும். அசுவினிகளை உண்ணும் இறைப்பிடித்துண்ணிகளையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாலதியான் @ 0.1% அல்லது டைமெக்ரான் @ 0.2% பயன்படுத்துவதன் மூலம் பூச்சி காரணிகளால் ஏற்படும் இரண்டாம் நிலை பரிமாற்றத்தை நீங்கள் தடுக்கலாம். மாலதியோனின் இரண்டு பயன்பாடுகள் @ 1.5 கிலோ / ஹெக்டேர் என்பவற்றை உலர்ந்த இலைகளை அகற்றிய பின்னர் மாத இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். கார்போபுரான் @ 2 கிலோ / ஹெக்டேர் என்பவற்றை மண் பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது கரும்பின் மஞ்சள் இலை வைரஸ் மூலம் ஏற்படுகிறது, பிறகு அசுவினி (மெலனாபிஸ் சச்சாரி மற்றும் ரோபாலோசிபம் மைடிஸ்) மூலம் இரண்டாம் நிலை பரிமாற்றம் நடைபெறுகிறது. மேலும் அறிகுறிகளானது கரும்பின் மஞ்சள் இலை பைட்டோபிளாஸ்மா (எஸ்சிவொய்எல்பி) என்பவற்றாலும் ஏற்படுகிறது, பிறகு இலைதத்துப்பூச்சிகள் மூலம் இவற்றின் இரண்டாம் நிலை பரிமாற்றம் நடைபெறுகிறது. இது முதன்மையாக பாதிக்கப்பட்ட விதை கரும்புகள் வழியாக பரவுகிறது, இயந்திர செயல்முறையால் பரவாது. கோதுமை, பார்லி, சோளம் மற்றும் ஓட்ஸ் போன்ற பிற பயிர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் அருகிலேயே கரும்பு பயிரிடப்படும் போது மட்டுமே அவை பாதிக்கப்படுகின்றன. அறுவடை முடிவடையும் வரை வறண்ட வானிலை சூழல்களில் முதிர்ந்த கரும்புகளில் இந்த நோய் மிகவும் கவனிக்கப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் இல்லாத விதை பொருள் மற்றும் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • முதலில் உங்கள் விதைகளை ஒரு நாற்றுப்பண்ணையில் நடவு செய்வதன் மூலமும் பின்னர் அவற்றை உங்கள் வயலில் நடவு செய்வதன் மூலமும் நோயைத் தடுக்கலாம்.
  • அசுவினி நோய் காரணியின் கட்டுப்பாட்டிற்காக மஞ்சள்நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • முதிர்ந்த இலைகளை தவறாமல் அகற்றவும், ஏனெனில் அதில்தான் அசுவினிகள் பெரும்பாலும் குடியேற விரும்புகின்றன.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க