பருத்தி

பருத்தியின் இலைச்சுருள் வைரஸ் நோய்

CLCuV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • பருத்தியின் இலைச்சுருள் வைரஸ் நோய் வெள்ளை ஈக்களால் பரவுகிறது, இலை ஓரங்கள் மேற்புறமாக சுருண்டு கொள்ளுதல் மற்றும் இலைகளின் அடிப்புறத்தில் இலைவடிவில் வெளிப்புற வளர்ச்சி காணப்படுதல் போன்றவற்றின் மூலம் இந்த நோய் வகைப்படுத்தப் படுகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பருத்தி இலைச்சுருள் வைரஸ் நோயின் முதன்மை அறிகுறிகளானது இலைகள் மேல்புறமாக சுருண்டு கொள்வதாகும். கூடுதலாக, இலை நரம்புகள் தடிமனாகி, அடர்நிறமாகும். மேலும் இலைகளின் அடிப்புறத்தில், வழக்கமாக இலை வடிவில் வெளிப்புற வளர்ச்சிகள் காணப்படும். மலர்கள் மலராமல், மூடியே இருந்து, பின்பு காய்களுடன் உதிர்ந்துவிடும். பருவத்தின் ஆரம்பத்தில் தாவரங்கள் பாதிக்கப்பட்டால், அவற்றின் வளர்ச்சிக் குன்றி, விளைச்சலானது கணிசமாக பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைப் பொதுவாக இயற்கை எதிரிகளின் (எ.கா. கண்ணாடி இறக்கை வண்டுகள், பெரிய கண் வண்டுகள், சிறிய கொள்ளை வண்டுகள்) மூலம் கட்டுப்படுத்தலாம், ஆதலால் இரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகப்படியாகத் தெளித்து அவற்றை அழித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும். வேப்ப எண்ணெய் அல்லது பெட்ரோலிய அடிப்படையிலான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இவற்றைத் தாவரங்கள் முழுவதும் தடவ வேண்டும், குறிப்பாக இலைகளின் அடிப்புறத்தில் தடவ வேண்டும். இந்த வைரஸ் ஏற்படுவதைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறையாக, பயனுள்ள தனிப்பட்ட பாக்டீரியா திரிபுகள் (பேசில்லஸ், சூடோமோனாஸ் மற்றும் பர்க்ஹோல்டெரியா) போன்ற உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறை சமீப ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பருத்தியின் இலைச்சுருள் வைரஸ் நோயைத் தடுக்கவும் அல்லது குறைக்கவும் எந்தவொரு முறைகளும் அறியப்படவில்லை. வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இமடாகுளோபிரிட் அல்லது டைனோடெஃபுரான் போன்ற பூச்சிக்கொல்லிகள் வடிவில் இரசாயனக் கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பூச்சிக்கொல்லிகளை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும், ஏனெனில் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால், வெள்ளை ஈக்கள் அவற்றுக்கான எதிர்ப்புத் திறனை உருவாக்கக்கூடும். இவை ஏற்படாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கு, பூச்சிக்கொல்லிகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது பருத்தி இலைச்சுருள் வைரஸால் ஏற்படுகிறது, இது வெள்ளை ஈக்களின் மூலம் முக்கியமாக பரவுகிறது. இந்த நோய் பரவுவது ஓரளவு காற்றினாலும் தீர்மானிக்கப்படுகிறது, இது வெள்ளை ஈக்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் குறிக்கும். பருவத்தின் நடுப்பகுதி முதல் இறுதி வரை வெள்ளை ஈக்கள் மிகவும் சிக்கலானவை. இந்த நோய் மரங்கள் போன்ற இருப்பிடத்துடனும் தொடர்புடையது. இந்த நோய் விதை மூலம் பரவாது என்பதால், இந்த வைரஸ் மாற்றுப் புரவலன்கள் (புகையிலை மற்றும் தக்காளிச் செடிகள் போன்றவை) மற்றும் களைகள் வழியாக நிலத்தில் வாழும். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மழைப்பொழிவு, பாதிக்கப்பட்ட நாற்றுகள் மற்றும் களைகளின் இருப்பு ஆகியவை நோயின் வளர்ச்சியை ஆதரிக்கும் பிற கூடுதல் காரணிகளாகும். 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழ் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. நாற்றுப்பண்ணைகளில், நாற்று மற்றும் வளர்ச்சி நிலைகளின்போது பருத்தித் தாவரங்கள் நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட நோய்கள் இல்லாத விதைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் நடவு செய்பவை ஆரோக்கியமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் மற்றும் குறிப்பாக நாற்றுகளை அவற்றிலிருந்து பாதுகாக்கவும்.
  • வயலிலும் மற்றும் சுற்றுப்பகுதியிலும் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • மாற்றுப் புரவலன்களுக்கு அருகே பருத்தியை நடவு செய்வதைத் தவிர்த்துக்கொண்டு பயிர்ச் சுழற்சியை நடைமுறைப் படுத்தவும்.
  • அறுவடைக்குப்பின் தாவரக் கழிவுகள் அனைத்தையும் உழுது புதைத்து விடவும் அல்லது எரித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க