வெள்ளரிக்காய்

தர்பூசணி தேமல் வைரஸ்

WMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் முறைப்படுத்தப்பட்ட தேமல் அல்லது பன்னிற புள்ளியமைவு மற்றும் எப்போதாவது இலை உருமாற்றம் ஏற்படும்.
  • தர்பூசணியில் கரும்பச்சை திட்டுக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்

வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

நோய்க்கான அறிகுறிகள் பயிர்களின் வகை, நோய்த்தாக்கம் ஏற்படும் காலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். மேலும், இந்த நோய்த்தொற்றானது பெரும்பாலும் வெள்ளரிக்காய் தேமல் வைரஸ் மற்றும் சீமை சுரைக்காய் மஞ்சள் தேமல் வைரஸ் போன்ற பிற நோய்த்தொற்றுக்களுடன் சேர்ந்து ஏற்படுகின்றன, இது அறிகுறிகளை மறைக்க அல்லது மாற்றக்கூடும். மொத்தத்தில் இந்த நோய் இலைகளின் மீது முறைப்படுத்தப்பட்ட தேமல் அல்லது திசுக்களில் மருக்கள் மற்றும் பல்வேறு விகிதத்தில் இலை உருக்குலைவு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும். பழங்களின் நிற மாற்றம் இதன் மற்றொரு முக்கிய அறிகுறியாகும். உதாரணமாக, முலாம்பழத்தில், பழங்களின் வைக்கோல் நிற மேற்பரப்பில் கரும் பச்சை நிற திட்டுக்கள் அல்லது வடிவமற்ற புள்ளிகள் காணப்படும். பட்டாணியில், இலைகளின் மீதான பன்னிற புள்ளியமைவு சிதைந்த காயங்களாக பெரும்பாலும் மாறும். இலை சேதம் காரணமாக, இந்த வைரஸ் தொற்று குன்றிய வளர்ச்சி மற்றும் விளைச்சலை ஏற்படுத்துகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கனிம எண்ணெய் தெளிப்பான்கள் வைரஸ் பரவுதலில் குறுக்கிடுவதோடு, சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இலைப்பேன்களை உண்ணும் உயிரினங்கள் பல உள்ளன, அவற்றை சிறந்த வயல் நடைமுறைகள் மூலம் ஊக்குவிக்க வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ்களுக்கு நேரடியாக இரசாயன சிகிச்சை அளிக்க முடியாவிட்டாலும், அதன் நோய்பரப்பிகளை, முக்கியமாக இலைப்பேன்கள், குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தலாம். எனினும், பல சூழலில், இலைப்பேன்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லிகள் குறைவாகவே இருக்கின்றன. இலைப்பேன்களின் தகவல் மற்றும் அவற்றின் சாத்தியமான இரசாயன கட்டுப்பாட்டைச் சரிபார்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான பல்வேறு அறிகுறிகளை தர்பூசணி தேமல் வைரஸால் ஏற்படுகிறது. இது ஏந்துயிரி (முக்கியமாக இலைப்பேன்கள்) அல்லது நபர் அல்லது கருவி மூலம் ஏற்படும் நேரடி தொடர்பு என பல்வேறு வகையில் பரவுகிறது. இது விதைகள் மூலம் பரவாது. இலைப்பேன்கள் மரச்சாறுகளை உறிஞ்சுவதன் மூலம் இந்த நோய்க்கிருமியை பெற்று, பின்னர் அதனை பெற்ற சில மணி நேரங்கள் வரை அவற்றை பரப்பும். வெள்ளரி இனங்களைத் தவிர்த்து, பிற முக்கிய மாற்று புரவலன்கள் பட்டாணி மற்றும் மணல் புல் வகையாகும். இதன் பரிமாற்றம் தொடர்ச்சியாக இல்லாத காரணத்தினால், பூச்சிக்கொல்லிகளை இலைப்பேன்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தடுப்பு முறையாக பயன்படுத்தவில்லையெனில், இந்த பூச்சிக்கொல்லிகள் வைரஸை சிறந்த முறையில் கட்டுப்படுத்தாது. வைரஸை வயல்களில் கண்ட பிறகு, பூச்சிக்கொல்லிகள் அவற்றை அகற்றுவதற்கு முன்னர், புதிய புரவலன்களுக்கு இலைப்பேன்கள் அதை பரப்பக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சில பயிர்களுக்கு, எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
  • நோய்க்கான அறிகுறிகள் அல்லது இலைப்பேன்கள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வைரஸ்களை தவிர்க்க புரவலன் அல்லாத தாவர வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • முன்பு பயிர்செய்தவையின் கழிவுகளை அகற்றவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லி உபயோகத்தை கட்டுப்படுத்தவும்.
  • இலைப்பேன்களை பாதுகாக்கும் எறும்பு கூட்டங்களை ஒட்டும் பட்டைகள் கொண்டு கட்டுப்படுத்தவும்.
  • வயல்களில் மற்றும் அதற்கு வெளியில் இருக்கும் களைகள் மற்றும் மணல் புல் வகைகளை அகற்றவும்.
  • நோய் காரணமாக ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்கு, இலைப்பேன்களை எதிர்க்கும் பிளாஸ்டிக் தழைக்கூளங்களை பயன்படுத்தவும்.
  • தாவரங்களை அடையாத வகையில் இலைப்பேன்களை தடுப்பதற்கு வரிசை அட்டையைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க