விதையவரை

புகையிலை கீற்று வைரஸ்

TSV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் பெரிய, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத் திட்டுகள் அடர் பச்சை நிற திசுக்களோடு ஒரு மொசைக் வடிவம் போல உருவாக்கும்.
  • தாவரங்கள் வளர்ச்சி குன்றி, பூக்கள் குறைந்து, காய்கள் உதிர்ந்து உச்சியில் குறைந்த அடர்த்தியோடு காணப்படும்.
  • இலை நரம்புகள், மஞ்சள் நிறத்தில், தடித்து, உருச்சிதைந்து காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


விதையவரை

அறிகுறிகள்

ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட தாவரங்களின், இலைகளில் 2-5 மி.மீ அளவு சிறிய, ஒழுங்கற்ற சோகையுற்ற பகுதிகளும், நிறமாற்றமும் தோன்றும் . காலப்போக்கில், அவை 5-15 மிமீ அளவு விட்டம் கொண்ட பெரிய கோண வடிவ சோகையாகவோ, சிதைந்த திட்டுகளாகவோ (மஞ்சளிலிருந்து பழுப்பு வரையான நிறத்தில்) மாறும். இது இலைகளின் மீது ஒரு ஒழுங்கற்ற மொசைக் வடிவமாகத் தோன்றும். இலைகள் சிதைந்து, முன்கூட்டியே உதிர்ந்துவிடுவதால், உச்சியில் அடர்த்தி குறைந்து, பயிர்களின் வளர்ச்சி குன்றும். பூக்கள் குறைந்து, காய்களும் முன்கூட்டியே கொட்டிவிடுவதால், விளைச்சல் குறைகிறது. நோயுற்ற இலைகளின் நரம்புகள், மஞ்சள் நிறத்தில், தடித்து, உருச்சிதைவு ஏற்படும். அறிகுறிகள் பெரும்பாலும் இளம் இலைகளில் காணப்படும், இந்த இலைகள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றிய நுனிகளைக் கொண்டு, ஆரோக்கியமானவற்றை விட வெளிறிய நிறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட வயல் பகுதி பொதுவாக வெளிறிய தோற்றம் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

புகையிலை கீற்று வைரஸ்-க்கு எதிராக நேரடியான உயிரியல் சிகிச்சை ஏதுவும் இல்லை. இருப்பினும், அதன் நோய் பரப்பும் உயிரிகளான, அசுவினிகள் மற்றும் செடிப் பேன்களைக் (திரிப்ட்ஸ், அஃபிட்ஸ்) கட்டுப்படுத்துவது குறித்து ஏராளமான தெரிவுகள் உள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் அசுவினிகள், செடிப் பேன்கள் (திரிப்ஸ், அஃபிட்ஸ்) மற்றும் பிற உறிஞ்சும் பூச்சிகள் போன்ற நோய் பரப்பும் உயிரிகளை ஓர் அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். மேலும் தகவல்களுக்கு, அசுவினிகள் மற்றும் செடிப் பேன்களுக்கு (திரிப்ட்ஸ், அஃபிட்ஸ்) எதிரான இரசாயன சிகிச்சைகளை தரவுத்தளங்களில் பார்க்கவும். உதாரணமாக, ஃபிப்ரோனில் (2 மில்லி/லி) அல்லது தியாமீதோக்சாம் (0.2 கிராம்/லி).

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயின் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் வைரஸ், புகையிலை (இதனாலேயே பொதுப் பெயர் ஏற்பட்டது), அஸ்பாரகஸ், ஸ்ட்ராபெரி, சோயாபீன், சூரியகாந்தி போன்ற பல மூலப் பயிர்களையும் கொண்டுள்ளது. இந்த வைரஸ் விதைகளால் பரவக் கூடியது, அதனால் பாதிக்கப்பட்ட விதைகளே நோய் பரவுவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடும். ஒரு தாவரத்திலிருந்து மற்றொன்றுக்குப் பரவும் இரண்டாம் நிலை பரிமாற்றம், நோய் பரப்பும் உயிரிகளான பூச்சிகளால் (அசுவினி, செடி பேன்கள் என்னும் அஃபிட்கள் அல்லது த்ரிப்ஸ்) அல்லது வயல் வேலை செய்யும் போது தாவரங்களுக்கு ஏற்படும் இயந்திர சிதைவுகளால் நேர்கிறது. நோய் அறிகுறிகளும் விளைச்சலில் ஏற்படும் பாதிப்பும், பயிர் வகை, சுற்றுச்சூழல் நிலைமைகள் (வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்) மற்றும் பாதிப்படைந்த போது பயிரின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. செடிப் பேன்களால் தாமதமாக ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக விதை மூலம் பரவும் தொற்றை விடக் கடுமையானவை


தடுப்பு முறைகள்

  • நம்பகமான இடங்களில் இருந்து ஆரோக்கியமான நடவு பொருட்களைப் பெற்று பயன்படுத்தவும்.
  • பருத்தி சாகுபடியில் உபயோகப்படுத்தும் அனைத்துக் கருவிகளிலும், கண்டிப்பான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • வயலிலும் பயிர்களிலும் நோயின் அறிகுறியோ, நோய் பரப்பும் உயிரிகளான அசுவினிகளோ (அஃபிட்) அல்லது செடி பேன்களோ (த்ரிப்) இல்லை என்பதைச் சரிபார்க்கவும்.
  • வயல்களில் பாதிக்கப்பட்ட தாவரங்களையும், குப்பைகளையும் அகற்றி, அவற்றைப் புதைத்தோ எரித்தோ அழித்துவிடவும்.
  • வயல்களுக்கு நடுவில் உறிஞ்சிகளைப் பரப்ப வேண்டாம்.
  • புகையிலை கீற்று வைரஸ்க்கு மாற்று மூலப் பயிர்களை, உதாரணமாக அஸ்பாரகஸ், ஸ்டிராபெர்ரி, சோயாபீன், சூரியகாந்தி, கீரை, புகையிலை போன்றவற்றை பருத்திக்கு அருகில் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க