விதையவரை

உளுந்து பயிரின் இலை சுருக்க நோய்

ULCV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகளின் இலை வழக்கத்தை விட பெரிசாக மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • இலைகள் சுருங்கி, மடங்கிக்கொள்ளும்.
  • கரடுமுரடான மற்றும் தோல்போன்ற நிலைத்தன்மை.
  • குன்றிய வளர்ச்சி.
  • விளைச்சல் இழப்பு.

இதிலும் கூடக் காணப்படும்


விதையவரை

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட விதைகளில் இருந்து வளர்ந்த நாற்றுக்களின் மூன்றாவது முப்பரிமாண இலைகள் வழக்கத்தைவிட பெரியளவில் இருக்கும். இந்த இலைகள் வழக்கத்தை விட இளம் பச்சை நிறத்தில் காணப்படும். இலை காம்புகள் சிறியதாகவும், இலை நரம்புகள் தடிமனாகவும் இருக்கக்கூடும். இவை சிவப்பு நிறமாற்றத்துடன் காணப்படும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, இலைகள் சுருங்க ஆரம்பித்து, கரடுமுரடான, தோல் போன்றாகிவிடும். பிந்தைய வளர்ச்சி நிலையில், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் பொதுவாக இளம் இலைகளில் நோய்க்கான அறிகுறிகளை ஏற்படுத்தும், முதிர்ந்த இலைகள் அறிகுறிகள் இன்றி காணப்படும். இலைகள் தெளிவான பச்சையசோகையுடன் காணப்படும், மேலும் மலர்கள் சிதைந்துவிடும். சிறிய பூ மொட்டுகள் மற்றும் தாவரங்களின் குன்றிய வளர்ச்சியைக் காணலாம். உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான பூக்களில், நிறமாற்றம் மற்றும் பெரிய விதைகள் காணப்படும். மகரந்த கருவுரு திறன் மற்றும் நெற்று உருவாகுதல் பெரிதாக பாதிக்கப்பட்டு, கடுமையான விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு உயிரியல் வழிமுறைகள் உதவுகின்றன.நோய்காரணி எண்ணிக்கையை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃப்ளூரோசன்சன்ஸ் திரிபுகளை மண் அல்லது இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். சுத்தமான வெண்ணெய் பால் மற்றும் பால் புரதங்கள் நோய் பரவுவதை நன்கு தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மிராபிளிஸ் ஜலப்பா, கேதரன்த்ன்ஸ் ரோஷியஸ், டடூரா மெட்டல், போகெயின்வில்லியா ஸ்பெக்டாபிலிஸ், போர்ஹாவியா டிஃப்யூஸா மற்றும் ஆசாதிராச்சா இண்டிகா ஆகியவற்றின் தாவர சாறுகள் வயல்களில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க திறம்பட செயல்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸுக்கு எதிராக எந்த ரசாயன சிகிச்சையும் இல்லை, ஆனால் நோய் காரணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முறையான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இமிடாக்ளோப்ரிட் 70 டபிள்யூஎஸ் @ 5 மில்லி / கிலோ என்பவற்றுடன் விதை சிகிச்சை செய்வது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. டைமீதோயேட் அடிப்படையிலான தயாரிப்புகளை இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். கலவை 2,4-டைக்சோஹெக்சாஹைட்ரொ 1,3,5-டிரையாஜின் (டிஹெச்டி) வைரஸ் பரவுவதைத் தடுக்கிறது மற்றும் அதன் அடைக்காப்பு காலத்தை அதிகரிக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ் பெரும்பாலும் விதைகளால் பரவக்கூடியது. இவற்றால் நாற்றுகளில் முதலாம் நிலை தொற்று ஏற்படும். இரண்டாம் நிலை நோய்த்தொற்று தாவர சாறுகளை உண்ணும் பூச்சிகளினால் தாவரங்களுக்கு இடையே பரவுகிறது. அத்தகைய பூச்சிகளாவது செடிப்பேனின் சில இனங்கள் (உதாரணமாக, அஃபிஸ் க்ராக்கிவோரா மற்றும் ஏ காசிப்பி), வெள்ளை ஈ ((பெமிசியா டபாக்கி) மற்றும் இலை உண்ணும் வண்டு (ஹெனோசீபிலாஸ்னா டோட்காஸ்டிக்மா). வைரஸின் பரவும் தன்மை மற்றும் நோயின் தீவிரம் தாவரங்களின் சகிப்பு தன்மை, வயல்களில் உள்ள நோய்க்காரணி மற்றும் நிலவும் வானிலை சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று நேரத்தை பொறுத்து 35 முதல் 81% வரை தானிய மகசூலை குறைக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட நோய்கிருமி இல்லாத விதைகளை பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் கிடைக்கும் நோயை தாங்கக்கூடிய அல்லது நோயெதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயலை கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி, அவற்றை புதைத்துவிடவும்.
  • உங்கள் வயல்களுக்கு அருகே வளர்ந்திருக்கும் அதிகப்படியான களைகளை (களைகள் மாற்று புரவலனாக செயல்படக்கூடும்) அகற்றவும்.
  • நோய் பரவுவதைக் குறைப்பதற்கு மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு போன்ற கட்டுப்பாட்டு பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • அறுவடைக்கு பின் தாவர கழிவுகளை அகற்றி, அழித்து விடவும்.
  • நோய் தாக்கம் ஏற்படாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க