வாழைப் பழம்

வாழைப்பழத் தலைக்கொத்து நோய்

Bunchy Top Virus

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைக்காம்புகள், மைய நரம்புகள் மற்றும் இலைகளின் கீழ்ப்புறங்களில் இருக்கும் நரம்புகள் ஆகியவற்றில் கரும்பச்சை நிறக் கோடுகள் தோன்றும்.
  • பின்னர் இலை நரம்புகளுக்கு இணையாக மோர்ஸ் குறியீடு அமைப்புகள் (சிறிய கரும்பச்சை நிற புள்ளிகள் மற்றும் கோடுகள்) தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றி, மெல்லிசாக மற்றும் நிமிர்ந்து காணப்படும் மற்றும் அவை சுருண்ட மற்றும் வெளிறிய விளிம்புகளைக் கொண்டிருக்கும்.
  • மரத்தின் உச்சியில் சிறிய வெளிர் பச்சை நிற இலைகள் குவிந்து, "தலைக் கொத்து" போன்ற அமைப்பை உருவாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

இந்த வைரஸ் அனைத்து தாவர பாகங்களையும் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிக்கிறது. ஆரம்ப அறிகுறிகளானது, இலைக்காம்புகள், மைய நரம்புகள் மற்றும் இலைகளின் கீழ்ப்புறங்களில் இருக்கும் நரம்புகள் ஆகியவற்றில் கரும் பச்சை நிறக்கோடுகள் தோன்றும். பின்னர், நரம்புகள் நெடுகிலும் இந்த சிறிய கரும் பச்சை நிறப் புள்ளிகள் மற்றும் கோடுகளை (மோர்ஸ் குறியீடு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது) இலைக் காம்புகளில் காட்டும். பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றி, மெல்லிசாக மற்றும் நிமிர்ந்து காணப்படும் மற்றும் அவை சுருண்ட மற்றும் வெளிறிய விளிம்புகளைக் கொண்டிருக்கும் மற்றும் இவை சிதைந்து போக நேரிடும். அதிகப்படியான தொற்றுக்களில், புதிய இலைகள் இந்த அறிகுறிகளை மோசமாகக் காட்டுகின்றன. மரத்தின் உச்சியில் சிறிய வெளிர் பச்சை நிற இலைகள் அல்லது மஞ்சள் நிற இலைகள் குவிந்து, "தலைக் கொத்து" போன்ற அமைப்பை உருவாக்கும். ஒட்டுமொத்த வளர்ச்சியும் குன்றி மற்றும் தாவரங்களால் குலைகள் அல்லது பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். அவற்றையும் மீறி அவை உற்பத்தி செய்தால், பழங்கள் சிதைந்து மற்றும் சிறியதாகக் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஆரம்ப கட்டங்களிலேயே நோய் கண்டறியப்பட்டால், சவர்க்கார (சோப்பு) நீர் அல்லது பூச்சிக்கொல்லி சோப்புகளைக் கொண்டு தாவரங்களில் தெளிப்பதன் மூலம் இலைப்பேன்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கு நேரடியான ரசாயன சிகிச்சை இல்லை. சைபர்மெத்ரின், அசிட்டாமிட், குலோர்பைரிபாஸ் அல்லது அதன் தொடர்புடைய பூச்சிகொல்லிகள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை இலைப்பேன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும். வயலில் பிடுங்கி எறிந்த தாவரங்கள் இருந்தால், சக்தி வாய்ந்த மண்ணெண்ணெய் அல்லது பூச்சிகொல்லிகள் மூலம் சிகிச்சை அளித்து இலைப்பேன்களை கொன்று விடவும்.

இது எதனால் ஏற்படுகிறது

வைரஸால் ஏற்படும் இந்த நோய்க்கான அறிகுறிகளானது மரத்திற்கு மரம் அல்லது வயல்களுக்கு இடையே வாழைப்பழ இலைப்பேன் (பெண்டலோனியா நிக்ரோன்நெர்வோசா) என்பவற்றால் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நடவுபொருட்களை ஒரு தோட்டத்திலிருந்து பிறவற்றுக்கு எடுத்து செல்வதன் மூலம் இந்த நோய் நீண்ட தொலைவிற்கு பரவுகிறது. மேலும் இஞ்சி, ஹெலிகோனியா மற்றும் டாரோ போன்றவையும் வைரஸின் புரவலன்கள் ஆகும். வாழைப்பழ வகைகள் நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்களில் மாறுபடுகின்றன, இவை முக்கியமாக அறிகுறிகள் தோன்றுவதற்கு எடுக்கும் காலத்தில் வேறுபடுகிறது. தாவரங்களை நோய் தொற்றிலிருந்து மீட்க முடியாது. பாதிக்கப்பட்ட நாற்றுகள் மூலம் ஏற்படும் ஆரம்பத் தொற்றுக்கள் பொதுவாக இலைப்பேன்கள் மூலம் ஏற்படும் இரண்டாம் நிலைத் தொற்றுக்களை விட மோசமானதாக இருக்கும். வசந்த காலத்தில் அல்லது சூடான, வறண்ட காலநிலையில் இந்த நோய்க்கான அறிகுறிகள் அதிகரிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து ஆரோக்கியமான நடவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் உங்கள் பகுதியில் கிடைக்கபெற்றால், அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை வளர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் ஏதேனும் தென்படுகிறதா எனத் தொடர்ந்து தாவரங்களைக் கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட வாழை மரங்களை அகற்றி, அவற்றை உலர்த்தி மற்றும் புதைத்துவிடவும்.
  • இஞ்சி, ஹெலிகோனியா மற்றும் டாரோ போன்ற தானே வளரும் தாவரங்கள் அல்லது மாற்று புரவலன்களைக் கட்டுப்படுத்தவும்.
  • வெவ்வேறு தோட்டங்களுக்கு இடையில் வாழைமரம்-இல்லாத இடையக மண்டலங்களை உருவாக்குங்கள்.
  • வெவ்வேறு பகுதிகளுக்கு பாதிக்கப்பட்ட வாழை மரங்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க