வாழைப் பழம்

வாழைப்பழ இலை கோடு வைரஸ்

Banana Streak Virus

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலை மைய நரம்பிலிருந்து ஓரங்கள் வரையிலும் மஞ்சள் நிற கோடுகள்.
  • கோடுகள் பின்னர் பழுப்பு அல்லது கருப்பு நிறமாகி, மஞ்சள் நிற குறுக்கிடப்படும்.
  • ஓரங்களில் இருந்து மைய நரம்பு வரையிலும் இலைகள் இறக்கக்கூடும்.
  • தாவரங்களில் குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


வாழைப் பழம்

அறிகுறிகள்

நோய்க்கான அறிகுறிகள் சம்பந்தப்பட்ட வைரஸின் வகை மற்றும் அளவு, தாவர வகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்து பரவலாக மாறுபடும். மிகவும் பொதுவான அறிகுறிகளானது இலை மைய நரம்பிலிருந்து விளிம்பு வரை ஒரே மாதிரியான அல்லது உடைந்த மஞ்சள் கோடுகள் உருவாகுவதாகும். கோடுகள் பின்னர் கரும்பழுப்பு அல்லது கருப்பு நிறமாகி, மஞ்சள் நிற பட்டைகளாலோ அல்லது கண் வடிவ அமைப்புகளாலோ குறுக்கிடப்படும். இலை விளிம்புகளில் சிதைவுகள் ஏற்படத் தொடங்கி, சில சமயங்களில் மையநரம்பு மற்றும் இலைக் காம்புகளையும் பாதிக்கும். எப்போதாவது, தண்டுகளின் உள் திசுக்களும் சிதைவுகளால் பாதிக்கப்படுகின்றன. பிந்தைய அறிகுறிகளானது குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் குறுகிய கால நிலைமைகளில் காணப்படுகிறது. அனைத்து இலைகளும் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் தாவரங்களின் வளர்ச்சி பொதுவாக குன்றும், அதே நேரத்தில் குலைகள் சிதைந்து, அளவில் சிறியதாக காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணிக் குளவிகள், கண்ணாடி இறக்கை பூச்சி அல்லது மிதவைப் பறவைகள் மற்றும் தம்பலப் பூச்சி போன்ற உயிரி-கட்டுப்பாட்டு முகவர்கள், மாவுப்பூச்சியின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம். எண்ணிக்கை சிறியதாக இருக்கும் போது, இலைகளில் தெளிக்கப்படும் லேசான கனிம எண்ணெய்கள் அல்லது வேப்ப எண்ணெய் சாறு கூட பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான ரசாயன சிகிச்சைகள் இல்லை. மாவுப்பூச்சியின் மெழுகு போன்ற பாதுகாப்பு பூச்சு அவற்றை கொல்வதற்கு கடினமாக்குகிறது. டெல்டாமெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லிகளுடனான சிகிச்சை மாவுப்பூச்சியின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் சிக்கலான வைரஸால் ஏற்படுகிறது. அறிகுறிகளின் தன்மை, தாவரங்களில் உள்ள வைரஸ் துகள்களின் செறிவு மூலம் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக வெப்பநிலை மற்றும் வானிலைகளும், தொற்றுநோயின் விளைவுகளைப் பாதிக்கின்றன. பல வகையான மாவுப்பூச்சிகளின் (சூடோகாக்கிடே) மூலம் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு அல்லது வயல்களுக்கிடையே பரவுகிறது. பாதிக்கப்பட்ட நடவு பொருள் அல்லது விதைகளின் பயன்பாடும் நீண்ட தூரம் பரவலாக்கலின் மற்றொரு வழிமுறையாகும். இது மண்ணால் பரவக்கூடியது அல்ல. வயல் வேலை மூலம் தாவரங்களுக்கு ஏற்படும் இயந்திரக் காயங்கள் மூலம் பரவ வாய்ப்பில்லை. இது வாழைமரம் மற்றும் அதன் தொடர்புடைய இனங்களைத் தாக்கும் உலகளாவிய பிரச்சினை. மேலும் இவை தாவர வளர்ச்சி, பழ விளைச்சல் மற்றும் தரத்தை மோசமாக பாதிக்கலாம். வைரஸ் ஆனது வெட்டும் கருவிகள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம் பரவ வாய்ப்பில்லை..


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து வைரஸ் இல்லாத நடவு பொருட்களை பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் வெட்டப்பட்டு, அழிக்கப்பட வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க