பப்பாளி

பப்பாளி தேமல் நோய்

PapMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் தேமல் போன்ற தோற்றம்.
  • லேசாக உருக்குலைந்த இலைகள்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

நோய் தொற்றின் அறிகுறிகள் இளம் இலைகளில் மிகுதியாக காணப்படும். இலைகளில் லேசான தேமல் அமைப்பு மற்றும் சிறிய உருமாற்றம் முதலியனவும் இவற்றில் அடங்கும். கரும் பச்சை கொப்புளங்களை போன்ற திட்டுக்கள் அல்லது மஞ்சள் -பச்சை நிற இலைக்காம்புகள் தென்படும். நோய்தாக்கம் அதிகரித்த நிலையில், இலை நரம்புகள் அகற்றப்படும் அறிகுறிகள் தென்படும், இலைக்காம்புகள் ஓரளவு சிறியதாகி, இலைகள் கீழ்நோக்கி சுருண்டு, மேல்நோக்கிய நிலையில் நட்டுவைத்தாற்போல் காணப்படும். பிற தாவர பாகங்கள் (தண்டுகள், பூக்கள்) பாதிக்கப்படுவதில்லை. ஆரோக்கியமான தாவரங்களோடு ஒப்பிடும்போது, வெளிப்படையாக தெரியும் ஒரே விஷயம் தாவரங்கள் மிதமான குன்றிய வளர்ச்சியை கொண்டிருப்பதேயாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பணி மேற்கொள்ளும் கருவிகளை தொற்று நீக்கவும் அல்லது 150° செல்சியசில் ஓவனில் ஒரு மணிநேரத்திற்கு கொதிக்க வைக்கவும். இதனால் நோய் ஏற்படுத்தும் வைரஸ் கொல்லப்படும். பணி கருவிகள் அல்லது கையுறைகளை 0.525% சோடியம் ஹைபோக்ளோரைட்டில் ஊற வைத்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். வெர்டிசீலியம் லிகானி அடிப்படையிலான உயிரியல்-பூஞ்சைக் கொல்லிகள், செடிப் பேன்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும். நோய்தொற்றின் ஆரம்ப நிலையில் பூச்சிக்கொல்லி சோப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த வைரஸ் நோய் தொற்றுக்கு இரசாயன சிகிச்சைகள் எதுவும் இல்லை. சைபர்மெட்ரின், குளோர்பைரிபொஸ் அல்லது பிரிமிகார்ப் போன்ற பல்வேறு ரசாயன பொருட்கள் மூலம் செடிப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ் பப்பாளி மரங்களை மட்டுமின்றி பிற பயிர்களையும் தாக்குகிறது. உதாரணமாக சுரைக்காய் இனத்தையும் இந்த நோய் பாதிக்கிறது. இந்த நோய் செடி பேன்கள் அல்லது இயந்திர சேதங்கள் போன்றவற்றால் மரங்களுக்கிடையே பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாவர பொருட்களை ஒட்டுதல் அல்லது இயந்திர தாவர சேதங்கள் போன்றவை இந்த நோய் பரவுவதற்கான பிற வழிகள் ஆகும். இது பெரும்பாலும் பிற வைரஸ் நோய்களுடன் தொடர்புடையது மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் இந்த அறிகுறிகள் சற்று வேறுபடலாம். பப்பாளியை பொறுத்தவரை இந்த வைரஸ் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல, ஆனால் நோய் பரவுவதற்கு தகுந்த சூழ்நிலை ஏற்பட்டால், இது விளைச்சல் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து விதைகள் அல்லது நாற்றுக்களை நடவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை சுழற்சிக்கு பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட மண் அல்லது தாவர மூலப்பொருட்களை பாதிக்கப்படாத வயல்களுக்கு எடுத்துச் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களை கண்டுபிடித்து, அதனை அகற்றி, அழித்துவிடவும்.
  • வெப்பம் அல்லது பிற முறைகள் மூலம் உங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்களை தொற்று நீக்கவும்.
  • கைகள் மற்றும் உடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் கையுறைகள் அணியவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க