சோயாமொச்சை

சோயாபீன் மொசைக் வைரஸ்

SMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலேசான மற்றும் அடர் பச்சை நிற அடையாளங்கள் இலைகளில் உருவாகும்.
  • சுருக்கமான இலைகள் கீழ்ப்புறமாக சுருண்ட அமைப்பினைப் பெறும்.
  • இலை உதிர்தல், வளர்ச்சி குன்றுதல் மற்றும் கனிகளின் எண்ணிக்கை மற்றும் அளவு குறைதல் போன்றவை ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

பயிர்கள் எந்தவேளையிலும் பாதிக்கப்படலாம். தடுப்புவகைப் பயிர்களில் எவ்வித அறிகுறிகளும் தோன்றுவதில்லை. பாதிக்கும் வகையிலான பயிர்களில், இளம் மற்றும் வேகமாக வளரும் இலைகளில் இலேசான மற்றும் அடர் பச்சை நிற அடையாளங்கள் இலைகளில் உருவாகும், இதன் மூலம் நோய் பாதிப்பு ஆரம்பித்ததை அறிந்துகொள்ளலாம். பின்னர் இவை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பின் நரம்புகளில் தொடர்ச்சியாக சுருக்கங்கள் ஏற்படும் மற்றும் கீழ்ப்புறம் சுருண்டிருக்கும். இலை உதிர்தல், வளர்ச்சிக் குன்றுதல் மற்றும் கனிகளின் எண்ணிக்கை மற்றும் அளவு குறைதல் போன்றவை ஏற்படும். குளிர்ந்த வானிலையில் இந்த அறிகுறிகள் அதிகம் ஏற்படும், மற்றும் 32 டிகிரி செல்சியஸ்க்கு மேலே வெப்பநிலையாக இருக்கும்போது அறிகுறிகளைக் கண்டறிய முடியாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், சோயாபீன் மொசைக் வைரஸ்க்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்கு சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைத்துக் கையாளவும். வைரஸ் நோய்களுக்கு வேதியியல் சிகிச்சை முறைகள் சரியான விளைவுகளைக் கொடுப்பதில்லை. அசுவினி ரக உயிரிகளை அழிக்கவும், வைரஸ் பரவுதலைக் குறைக்கவும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் சரியான பலனைத் தராது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ்க்கு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் பிற களைகள் என அதிக அளவிலான பயிர்கள் ஓம்புயிரிகளாக இருக்கும். நோய்க்காரணிகள் சிறிய அசுவினி ரக உயிரிகள், பாதிக்கப்பட்ட விதைகள் ஆகியவற்றின் மூலம் பரவுகின்றன மற்றும் அருகிலுள்ள ஓம்புயிரி பயிர்களிலும் வாழ்கின்றன. பயிர்கள் வளரும் காலத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மகசூலில் இழப்பு, விதைத் தரத்தில் பாதிப்பு மற்றும் விதை முளைக்கும் திறனில் பாதிப்பு மற்றும் வேர்முண்டு உருவாதல் போன்றவை ஏற்படுகின்றன. பருவ காலத்திற்குப் பின்பு ஏற்படும் நோய் தொற்றுக்கள் குறைந்தளவு வீரியம் கொண்டவை. சரியான உரமளிக்கப்பட்ட நிலத்தில் அதிக மகசூல் ஆற்றல் மற்றும் அதிக அசுவினி ரக உயிரிகள் அடர்த்தி போன்றவற்றில் வைரஸ் பரவுதல் விரைவாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட, வைரஸால் பாதிக்கப்படாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்புவகை அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • முடிந்தவரை, முன்னரே பயிரிடும் முறைகளை கையாளவும்.
  • சோயாபீன் பயிர்களை வைரஸால் பாதிக்கப்படும் பிற பயிர்களுடன் பயிர்சுழற்சி செய்ய வேண்டாம்.
  • நிலத்திற்குள் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • பயிர்களின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் அதிகப்படியான உரமளித்தலைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க