மாதுளை

மாதுளையின் தேமல் நோய்

Elsinoë punicae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பூக்கள் மற்றும் பழங்களில் காய்ந்த மற்றும் கடினமான திட்டுகள் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாதுளை

அறிகுறிகள்

அறிகுறிகள் ஆரம்பத்தில் பழங்களில் துருப்பிடித்தது போன்ற புள்ளிகளாகத் தோன்றும், பின்னர் இவை உப்பிய தேமல் காயங்களாக மாறும். பின்பு காயங்கள் பெரிதாகி, ஒன்றிணைந்து சிரங்கு போன்ற மற்றும் தக்கை போன்ற அறிகுறிகள் பூக்கள் மற்றும் பழங்களில் தோன்றும் (முதிர்ச்சியடையாத மற்றும் முதிர்ந்தவைகளில் தோன்றும்). இந்த நோய் சிதைந்த இளம் பழங்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும். தேமல் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பழ உட்புறத்தில் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இலைகள் மற்றும் கிளைகள்/சிறுகிளைகளில் பழுப்பு நிறக் காயங்கள் காணப்படலாம் ஆனால் அது நோயின் சிறப்பியல்பு அல்ல.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை பயனுள்ள மற்றும் பொருந்தக்கூடிய உயிரியல் கட்டுப்பாடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயன மேலாண்மை பற்றிய தகவல் இல்லாதபோதிலும், சில பூஞ்சைக்கொல்லி தெளிப்புகள் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக கார்பென்டாசிம் (0.1%), தியோபனேட் மெத்தில் (0.1%), பிடர்டனோல் (0.1%), குளோரோதலோனில் (0.2%) ஆகியவற்றை பூக்கள் தொடங்கும் நிலையிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது நோயைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும் போது எப்போதும் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, தயாரிப்பு லேபிளில் உள்ள வழிமுறைகளான மருந்தளவு, பயன்படுத்தும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தைய இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றவும். எப்போதும், பூச்சி மேலாண்மை குறித்த பிராந்திய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவும்.

இது எதனால் ஏற்படுகிறது

எல்சினோவின் இனங்கள் பல தாவரங்களில் தேமல்களை உண்டாக்கும் தாவர நோய்ப்பூச்சிகள் ஆகும், இதில் பொருளாதார ரீதியாக முக்கியமான சில பயிர்களான வெண்ணெய், சிட்ரஸ், திராட்சை, அலங்காரப் பயிர்கள், வயல் பயிர்கள் மற்றும் மரத்தாலான புரவலன்கள் ஆகியவை அடங்கும். இந்த நோயின் தொற்றை களைவதற்கும் வணிக உற்பத்தியில் சரியான பொருளாதார தாக்கத்தை தீர்மானிக்கவும் கூடுதல் ஆய்வுகள் தேவை. தொற்று நோய் பற்றிய நுண்ணறிவு இல்லாமை, பாதிக்கப்பட்ட வயல்களில் சேகரிக்கப்பட்ட எல்சினோ மாதிரிகளின் வளமான கட்டமைப்புகள் இல்லாததன் காரணமாகும். தேமல் போன்ற அறிகுறிகள் பயிர் சந்தைப்படுத்தலைக் குறைக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே கூடுதல் ஆராய்ச்சி தேவை. மழையுடன் கூடிய காலநிலை நோய் பரவுவதற்கான விகிதத்தை தூண்டுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள், பழங்கள் அனைத்தையும் சேகரித்து எரிக்க வேண்டும்.
  • நோய்த்தொற்றின் ஆதாரத்தைக் குறைக்க நோயுற்ற கிளைகள் / சிறுகிளைகளை சீர்திருத்தம் செய்வது முக்கியம்.
  • இந்தக் குறிப்பிட்ட காரணியின் கொள்ளை நோயியல் பற்றிய கூடுதல் ஆராய்ச்சி மூலம், மாதுளையின் மிகவும் திறன்மிக்க தடுப்பு நடவடிக்கைகள் கிடைக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க