புகையிலை

இலக்குப் புள்ளி நோய்

Rhizoctonia solani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிதைவுகள் சிறிய, தெளிவான புள்ளிகளாகத் தொடங்கும், அதில் இலேசான மஞ்சள் நிறமாற்றம் தென்படும் (பச்சைய சோகை) அல்லது மஞ்சள் நிறமாற்றம் ஏதும் இருக்காது.
  • சிதைவுகள் பஞ்சு பந்து அளவுக்கு அல்லது அதற்கும் பெரியதாக விரிவடையும், மேலும் அவற்றை செறிவுடைய வளைய அமைப்பாக வகைப்படுத்தப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
புகையிலை

புகையிலை

அறிகுறிகள்

2-3 மிமீ வரையில் சிறிய அளவிலான வெள்ளை அல்லது பழுப்பு நிற முதன்மை சிதைவுகள் மண்ணுக்கு மிக அருகில் இருக்கும் இலைத்திரள்களின் மேற்பரப்பில் தோன்றும். நோய் அதிகரிக்கையில் அது வெளிப்புறமாக பரவும். முதன்மை சிதைவுகளைச் சுற்றி சிதைந்த வளையங்கள் உருவாகும். வயலில், இலக்குப் புள்ளி முதலில் தாவரத்தில் மிகவும் கீழே இருக்கும், முதிர்ந்த இலைகளில் ஏற்படும், பின்னர் காலப்போக்கில் இவை மேல் பக்கத்தில் இருக்கும் இலைகளுக்குப் பரவும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைக்கோடெர்மா இனங்களைப் பயன்படுத்தி ஆர். சோலனியில் உயிரியல் ரீதியான எதிர்ப்பு செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. டி. ஹார்சியானத்தின் ஐசோலேட்கள் ஆர். சோலானியின் வளர்ச்சியைக் குறைத்து, புகையிலை செடிகளில் நோய்க் கட்டுப்பாட்டை மேம்படுத்தும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். மான்கோசெப் மற்றும் அசோக்ஸிஸ்ட்ரோபின் ஆகியவற்றின் இலைத்திரள் பயன்பாடுகள் இலைகளில் பூஞ்சை இலைப் புள்ளிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மண்ணில் பரவும் நோய்க்கிருமியான ஆர்.சோலானியால் இந்நோயின் சேதம் ஏற்படுகிறது. பூஞ்சை முதன்மையாக மண்ணுக்குள் பூசண இழைகள் (ஹைஃபா) அல்லது பூஞ்சை இழை முடிச்சுகளாக (ஸ்க்லெரோடியாவாக) இருக்கும். பிறகு இந்த நோய் பசுமை இல்லங்களில் நோய் அறிகுறிகளுடன் இருக்கும் நாற்றங்கால்களுக்கு பரவலாம் அல்லது வயல்களிலும் அதைச் சுற்றியும் இயற்கையாக இருக்கும் இலக்கு புள்ளி பூஞ்சையால் தாவரங்கள் பாதிக்கப்படலாம். மிதமான வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் நீண்ட கால இலை ஈரம் ஆகியவை இந்நோய் பரவலுக்கு சாதகமான சூழல் ஆகும். போதுமான அளவு நிர்வகிக்கப்படாதபோது விளைச்சலைக் கடுமையாகக் குறைக்கும் திறனையும் இந்நோய் கொண்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • பயிர் சுழற்சி மற்றும் பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் நோயைத் தடுக்கலாம்.
  • குறைந்த பட்சம் இரண்டு பருவங்களுக்கு புகையிலையை பயிர் செய்யாமல் பயிர் சுழற்சி செய்து, அப்பயிர் சுழற்சியின்போது சோயா மொச்சை பயிரைத் தவிர்ப்பதன் மூலம் இலக்குப் புள்ளி நோய் ஏற்படுவதைக் குறைக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க