புகையிலை

மஞ்சள் நிற குட்டை நோய்

Fusarium/Pythium/Rhizoctonia complex

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மஞ்சள் நிறமாகும்.
  • நிலத்திற்கு மேல் காற்றில் உலாவும் பாகங்கள் வாடிப்போகும்.
  • வேர்கள் அடர் நிறமாகும்.
  • மண் கோட்டிற்கு நேரடியாக மேலே உள்ள தண்டின் திசுக்கள் அழுகிப்போகும்.
  • தாவரம் பட்டுப்போகும்.
  • இலைகளில் குவிந்த வளைய வடிவத்துடன் சிதைந்த காயங்கள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
புகையிலை

புகையிலை

அறிகுறிகள்

தாவரத்தின் காற்றில் உலாவும் பாகம் வாடத் தொடங்கும் போது நோயின் ஆரம்ப அறிகுறி தோன்றும், அதைத் தொடர்ந்து மஞ்சள் நிறமாகும் செயல்முறை மற்றும் திசு அழுகல் போன்றவை ஏற்படும், இதனால் தாவரம் பட்டுப்போகும். மஞ்சள் நிற குட்டை நோய் அல்லது "மஞ்சள் நோய் கலவையானது" வேர் மண்டலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதன் காரணமாக தூண்டப்படுகிறது, இதன் விளைவாக வேர்களுக்கு காற்றோட்டம் இல்லாமல் போகும். இந்தச் சூழலில், புகையிலை வேர்களின் உருக்குலைவு ஊடுருவலைச் சாதகமாக்கும் அல்லது மஞ்சள் நிற குட்டை நோயுடன் தொடர்புடைய நோய்க்கிருமிகளின் படையெடுப்பை நோக்கிய தாவர உணர்திறனை மாற்றும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மண்ணில் வாழும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

மஞ்சள் நிற குட்டை நோயை வேதியியல் ரீதியாக கட்டுப்படுத்த முடியாது, மோசமான நீர் மேலாண்மை மற்றும் மண் செறிவூட்டல் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

புகையிலைப் பயிரானது ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றுக்கு குறைவான சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. அதிகப்படியான ஈரப்பதம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவற்றின் கலவையானது வேர் மண்டலத்தை சீர்குலைக்கக்கூடும். மஞ்சள் நிற உருக்குலைவு நோயுடன் தொடர்புடைய புகையிலை வேர்களின் உருக்குலைவானது ஃபுசாரியம் இனங்கள், ரைசோக்டோனியா சோலானி, பைத்தியம் இனங்கள் போன்றவை நோய்க்கிருமிகளின் ஊடுருவலுக்கு சாதகமாக உள்ளது. இதன் விளைவுகள் வளர்ச்சி கட்டங்கள், சுற்றுச்சூழல் நிலைமைகள், காலம் மற்றும் பாதிக்கப்பட்ட வேர்களின் சதவீதம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • நாற்றுப்பண்ணையில், விதைகள் நெருக்கமாக விதைக்கப்படுவதைத் தவிர்க்க, உகந்த விதை விகிதத்தைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்யும் போது அதிக அடர்த்தி கொண்ட பயிர்களை நடுவதைத் தவிர்க்கவும்.
  • நிறை ஈர மண் ஆவதற்கு வழிவகுக்கக்கூடிய அதிகப்படியாக பாய்ச்சும் நீரின் அளவைக் குறைப்பதன் மூலம் பாசன நீர் மேலாண்மையைப் பயிற்சி செய்யவும்.
  • இறுக்கமான மண் அடுக்குகளை குறைப்பதற்கு அடிமண் இடுவதன் மூலம் மண் நெருக்கத்தைத் தவிர்க்கவும்.
  • முகடின் மேல் நடுவதன் மூலம் உயர் முகடமைக்கும் அமைப்புகளை செயல்படுத்தவும்.
  • நிலவளங்காப்புப் பயிர்களை விதைப்பதன் மூலம் மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தலாம்.
  • மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகளுக்கு அதிக சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க