மஞ்சள்

மஞ்சளின் இலை கொப்புள நோய்

Taphrina maculans

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் இரண்டு மேற்பரப்புகளிலும் பல சிறிய, நீள்வட்ட, ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும்.
  • புள்ளிகள் ஒன்றிணைந்து ஒழுங்கற்ற காயங்களை உருவாக்கும்.
  • தாவரங்கள் கருகிய தோற்றத்துடன் காணப்படும் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்கின் விளைச்சல் குறையும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மஞ்சள்

மஞ்சள்

அறிகுறிகள்

இந்த நோய் பொதுவாக இலைகளின் கீழ் பக்கங்களில் தோன்றும். தனித்தனி புள்ளிகள் 1 - 2 மிமீ அகலத்தில் சிறியதாகவும் பெரும்பாலும் செவ்வக வடிவமாகவும் இருக்கும். புள்ளிகள் நரம்புகள் நெடுகிலும் வரிசையாக அமைக்கப்பட்டு, ஒழுங்கற்ற காயங்களை உருவாக்க சுதந்திரமாக ஒன்றிணையும். முதலில், இவை வெளிர் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் அழுக்கு மஞ்சள் நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் சிதைந்து செம்பழுப்பு நிறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். தீவிரமான சூழல்களில், தாவரங்கள் கருகிய தோற்றத்துடன் காணப்படும், வேர்த்தண்டுக்கிழங்கின் விளைச்சல் குறையும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூடோமோனாஸ் ஃப்ளோரெசென்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா ஹார்சியானம் கொண்ட தயாரிப்புகள் நோய் அழுத்தம் குறைவாக இருக்கும் போது தொற்றைக் குறைக்கும். அசோகாவின் இலைச் சாறு (பாலியாந்தியா லாங்கிஃபோலியா) அல்லது வெங்காய குமிழ்களில் இருந்து வீட்டில் தயார் செய்த சாறு ஆகியவையும் தாக்குதலைக் குறைக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். விதைப் பொருளை ஒரு லிட்டருக்கு 3 கிராம் மான்கோசெப் என்ற அளவில் அல்லது ஒரு லிட்டருக்கு 1 கிராம் கார்பென்டாசிம் என்ற அளவில் எடுத்து, 30 நிமிடங்களுக்கு நேர்த்தி செய்து, விதைப்பதற்கு முன் நிழலில் காய வைக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பூஞ்சை முக்கியமாக காற்று மூலம் பரவுகிறது, மேலும் முதன்மைத் தொற்று கீழ்ப்பக்க இலைகளில் ஏற்படும். வயலில் எஞ்சியிருக்கும் புரவலன்களின் காய்ந்த இலைகளில் நோயைப் பரப்பும் பொருள் உயிர்வாழும். இரண்டாம் நிலைத் தொற்று பைச்சிதல்களால் ஏற்படும், இவை தொடர்ச்சியாக முதிர்ச்சியடையும் சிதல் பையிலிருந்து பரவி, புதிய இலைகளை பாதிக்கின்றன. கோடையில், நோய்க்கிருமியானது இலைக் குப்பைகள் மற்றும் காய்ந்த பைச்சிதல்கள் மற்றும் பிளாஸ்டோஸ்போர்களின் மீது பைச்சிதல் உற்பத்தி செய்யும் அணுக்கள் மூலம் மண்ணிலும் உதிர்ந்த இலைகளிலும் பரவும். அதிக மண்ணின் ஈரப்பதம், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் இலை ஈரத்தன்மை ஆகியவை இந்நோய்க்கு ஏதுவான சூழல் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • முறையான காற்றோட்டத்தை பயிற்சி செய்யவும்.
  • வயலில் உள்ள நோய் பரப்பும் மூலத்தைக் குறைக்க பாதிக்கப்பட்ட மற்றும் காய்ந்த இலைகளை சேகரித்து எரித்துவிடவும்.
  • நோய் இல்லாத பகுதிகளிலில் உள்ள விதைப் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • முடிந்தவரை பயிர் சுழற்சியை மேற்கொள்ளுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க