காபி

காபியின் துரு நோய்

Hemileia vastatrix

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் கீழ் பக்கத்தில் சிறிய அளவில், மஞ்சள் நிறத்தில், கொப்புளம் போன்ற புள்ளிகளும், மேல் பக்கத்தில் தொடர்புடைய வெளிறிய நிற திட்டுகளும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
காபி

காபி

அறிகுறிகள்

காபி செடியின் இலைகளில் 2-3 மிமீ விட்டம் கொண்ட மஞ்சள் நிற புள்ளியின் வளர்ச்சி இந்நோயின் ஆரம்ப அறிகுறியாகும். புள்ளிகள் பெரிய வட்டமான புள்ளிகளாக விரிவடைந்து, பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாகவும் இறுதியாக மஞ்சள் நிற ஓரத்துடன் பழுப்பு நிறமாகவும் மாறும். இலையின் கீழ் பக்கத்தில், தொடர்புடைய புள்ளிகள் ஆரஞ்சு முதல் பழுப்பு நிறம் வரை தூள் போன்ற தோற்றமளிக்கும் வித்துக்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இலைகள் இறுதியில் மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். இலைகள் இல்லாததால், ஒளிச்சேர்க்கை நடைபெறாது, மேலும் தாவரங்களில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் காபி விளைச்சல் கணிசமாகக் குறைந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வணிகரீதியாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயிர்க்கட்டுப்பாட்டு உத்திகள் அதிகம் இல்லை. தடுப்பு நடவடிக்கையை எடுத்துக்கொள்வது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்க்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள் ஏற்படுவதற்கு முன்பும், இந்தக் காலகட்டம் முடிந்த பிறகும் போர்டோக்ஸ் கலவை அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50% WG ஆகியவற்றைத் தடுப்பு மருந்தாக தெளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

ஹெமிலியா வாஸ்டாட்ரிக்ஸ் என்ற பூஞ்சையால் இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. காபி பயிரின் துரு நோய் மிக விரைவாக பரவக்கூடியது, சுற்றுச்சூழல் காரணிகள் பூஞ்சை பரவுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. காற்று அல்லது நீர் மூலம் இவை முக்கியமாக பரவுகின்றன. தூசி மற்றும் பூஞ்சை வித்துக்கள் வயல் முழுவதும் சென்று மற்றொரு வயலை பாதிக்கும்போது அல்லது அவை மழை பெய்யும்போது நிலத்தில் விழுந்து அடுத்த செடியின் மீது தெறிக்கும் போது இவை பரவுகின்றன. ஈரப்பதமான சூழலில் காபி துரு செழித்து வளரும், மேலும் இலைகளில் மழைநீர் தெளிப்பது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு வித்துக்கள் பரவுவதற்கு பங்களிக்கிறது. பாதிக்கப்பட்ட மரங்களில் காய்க்கும் காபி கொட்டைகள் மோசமாக உருவாகலாம் மற்றும் கனம் கம்மியாக இருபப்தைப் போன்று உணரலாம். காபி பயிரின் துரு நோய் பரவல் கடுமையாக இருக்கும் இடங்களில், அவை 75% க்கும் அதிகமான விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • ஒன்றுக்கும் மேற்பட்ட காபி வகைகளை பயிரிடவும் மற்றும் ஒற்றைப்பயிர்களை பயிர் செய்வதைத் தவிர்க்கவும்.
  • நீண்ட கால ஈரப்பதத்தைத் தடுக்கவும், மரத்தின் மேல்தளத்தில் தெளிக்கப்படும் பூஞ்சைக் கொல்லிகளின் ஊடுருவலை அதிகரிக்கவும் அதிக இடைவெளி மற்றும் பொருத்தமான சீர்திருத்த முறையை பயிற்சி செய்யவும்.
  • நோய் பரவுவதற்கு இயற்கையான தடையாக செயல்படும் தாவரங்களையும் புதர்களையும் அதிகம் பயன்படுத்தவும்.
  • காபி பயிரில் ஏற்படும் துரு நோயை திறம்பட எதிர்க்க ஆரோக்கியமான காபி மரங்களுக்கு முறையான ஊட்டச்சத்தை உறுதி செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க