காபி

பழுப்பு நிற கண் புள்ளி நோய்

Mycosphaerella coffeicola

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் பழுப்பு நிற புள்ளிகள், பெர்ரிகளில் இது சிறியளவில் இருக்கும்.
  • கடுமையான தொற்றுகள் காரணமாக இலைகள் சீக்கிரம் உதிர்ந்துவிடும், தண்டுகள் நுனியிலிருந்து கருகி இறந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
காபி

காபி

அறிகுறிகள்

அகலமான அடர் பழுப்பு நிற வளையம் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்ட சுமார் 15 மிமீ அகலம் கொண்ட வெளிர்-பழுப்பு/சாம்பல் நிற மையப்பகுதிகள் இலைகளில் தோன்றும். இந்தப் புள்ளிகள் பெரும்பாலும் நரம்புகளுக்கு இடையிலும் ஓரங்களிலும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் புள்ளிகள் பெரிய கொப்புளங்களாக வளரும், மேலும் இலை கருகல் ஏற்படும். 600 மீ உயரத்திற்கு மேல் குளிர்ந்த, ஈரமான பகுதிகளில் பொதுவாக இவ்வாறு நடைபெறும். பெர்ரிகளில் தொற்று பொதுவாக சிறியதாக இருக்கும், சுமார் 5 மிமீ அகலத்தில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் அவை முழு பெர்ரியையும் மூடிவிடும். பொதுவாக, இவை இலைகளை விட ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும், அதுவும் முக்கியமாக சூரிய ஒளியில் படும் பக்கத்தில் இவ்வாறு இருக்கும். கடுமையான தொற்றுகளில், முன்கூட்டியே இலை உதிர்ந்து விடுவது மற்றும் தண்டு நுனியிலிருந்து கருகி இறந்து விடுவது போன்றவை ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றைய நிலவரப்படி, இந்த நோய்க்கு எதிராக உயிரியல் ரீதியான கட்டுப்பாட்டுத் தீர்வு கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், தாமிரம் அல்லது ட்ரையசோல்கள் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். பூக்கத் தொடங்கிய மூன்று மாதங்களுக்கு தாமிர தெளிப்பான்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பு, தாமிர பூஞ்சைக் கொல்லிகள் நன்மை பயக்கும் பூச்சிகளைக் கொல்லக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

மைக்கோஸ்பேரெல்லா காஃபிகோலா என்ற பூஞ்சையால் இந்தப் புள்ளிகள் ஏற்படுகின்றன. அதிகமான ஈரப்பதம், அதிகமான மழை, சூடான வெப்பநிலை மற்றும் வறட்சியினால் ஏற்படும் அழுத்தம் ஆகிய சூழல், குறிப்பாக பூக்கும் நிலைக்குப் பிறகு இதற்கு சாதகமாக இருக்கும். இலை குப்பைகளில் நோய்க்கிருமி உயிர்வாழும். வித்துக்கள் காற்று மற்றும் மழை சாரல்கள் மூலம் பரவுகின்றன, மேலும் வயல்களில் மனித நடமாட்டம் மூலம், குறிப்பாக தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது மற்றும் முளைக்க தண்ணீர் தேவைப்படும்போது இந்நோய் பரவுகின்றன. இளம் மற்றும் நிழல் இல்லாத மரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.


தடுப்பு முறைகள்

  • சுமார் 35-65% நிழலுடன் போதுமான இடைவெளி மற்றும் காற்றோட்டத்துடன் நாற்றுப்பண்ணையைத் தயார் செய்யவும்.
  • போதுமான ஊட்டச்சத்து, குறிப்பாக நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் என்னும் ஊட்டச்சத்துக்களை வழங்கவும்.
  • வடிகால் அமைப்பை செயல்படுத்தவும்.
  • தோட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் போதுமான வடிகால் வழங்குவதன் மூலம் தாவரத்திற்கு ஏற்படக்கூடிய அழுத்தத்தைக் குறைப்பதை உறுதி செய்யவும்.
  • விதானம் காற்றோட்டமாக இருக்கத் தாவரங்களைக் கத்தரித்துச் சீர்திருத்தம் செய்யவும்.
  • மீண்டும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய சாத்தியத்தைத் தடுக்க வயலில் வெட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க