சோயாமொச்சை

சோயாமொச்சையின் தண்டு கருகல் நோய்

Diaporthe phaseolorum var. sojae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தண்டுகள், இலைக்காம்புகள் மற்றும் காய்களில் கரும் புள்ளிகளின் நேரியல் வரிசைகள்.
  • விதை தரம் குறைந்துவிடுதல்.
  • விதை மேற்பரப்பில் வெள்ளை நிற சுண்ணாம்பு பூஞ்சை.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

தண்டு கருகல் நோயின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி பைக்னிடியாவின் (வித்துக்களை கொண்ட பூஞ்சை) இருப்பு ஆகும், அவை சிறிய, கருப்பு நிறத்தில் உப்பிய புள்ளிகளாக பருவத்தின் பிற்பகுதியில் பாதிக்கப்பட்ட தண்டுகள், காய்கள் மற்றும் விழுந்த இலைக்காம்புகளில் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் மேற்பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறி இறக்கக்கூடும். தண்டு கருகல் நோயால் பாதிக்கப்பட்ட விதைகள் பெரும்பாலும் விரிசல் அடைந்து, சுருங்கி மந்தமாக மற்றும் சாம்பல் நிற பூஞ்சைகளால் மூடப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட தாவர பாகங்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இறக்கக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு பயனுள்ள உயிரியல் கட்டுப்பாட்டு முறை எதுவும் இல்லை. அறிகுறிகள் தென்படுவதையோ அல்லது அதன் தீவிரத்தை குறைக்கவோ ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கருத்தில் கொள்ளவும். விதை உருவாக்கத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தினால், இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகள் விதைகளின் தரத்தைப் பாதுகாக்கும். காய் உருவாக ஆரம்பித்ததிலிருந்து காய் முதிர்ச்சி அடையும் வரை பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகள் விதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை குறைக்கும். பாதிக்கப்பட்ட விதைகளுக்கு விதைப்பதற்கு முன் (பெனோமில் போன்ற பூசண கொல்லிகளுடன்) சிகிச்சையளிக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

தியாபோர்தே ஃபேஸியோலோரமின் பூஞ்சை இனங்களால் தண்டு கருகல் நோய் ஏற்படுகிறது, இது பெரும்பாலும் ஃபோமோப்சிஸ் சோஜே என்றும் அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் பயிர் எச்சங்கள் இரண்டிலும் பூஞ்சை உயிர்வாழ்கிறது. பாதிக்கப்பட்ட விதைகள் சுருங்கி, விரிசல் அடைந்து வெள்ளை பூஞ்சை இழைகளால் மூடப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட விதை முளைக்காமல் போகலாம். நெற்று வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் போது நீண்ட கால வெப்பமான, ஈரமான வானிலை நோய் காய்களிலிருந்து விதைகளுக்கு பரவுவதை ஆதரிக்கிறது. காய் நிரப்பப்படும் கட்டங்களில் நிலவும் மிகவும் ஈரமான நிலைமைகள் தண்டு நோய்த்தொற்றுகளுக்கு சாதகமாக இருக்கும். நோய்க்கிருமி குறிப்பிடத்தக்க விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் மற்றும் விதையின் தரத்தை குறைக்கும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்வதற்கு உயர் தரமான மற்றும் நோய் இல்லாத விதைகளைப் பயன்படுத்துங்கள்.
  • முன்பு தண்டு கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வயலில் சோயா மொச்சை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • தண்டு கருகல் நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என காய் நிரப்பப்படுவதிலிருந்து அறுவடைக்கான முதிர்ச்சி நிலை அடையும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தாவரங்களை ஆராயுங்கள்.
  • வெல்வெட் இலை மற்றும் பன்றிக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் களைகள் போன்ற மாற்று புரவலன் களைகள் உங்கள் வயலில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • அறுவடையை தாமதப்படுத்துவது தண்டு கருகல் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, ஏனெனில் தாவரங்கள் நோய் வளர்ச்சிக்கு சாதகமான குளிர்ந்த மற்றும் ஈரமான நிலைமைகளுக்கு ஆளாகக்கூடும்.
  • சரியான நேரத்தில் அறுவடை செய்வது மற்றும் சரியான உழவை மேற்கொள்வது காரணிப்பொருளின் அளவைக் குறைக்கும்.
  • சோளம் அல்லது கோதுமை போன்ற புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சியை மேற்கொள்ளுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க