நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

பச்சை மட்டும் ஊதா பூசணம்

Penicillium spp.

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களின் தோலில் மென்மையான, நீர்த் தோய்த்தப் பகுதி காணப்படும், இதனைத் தொடர்ந்து வெள்ளைப் பூசணம் வளரும்.
  • ஊதா அல்லது பச்சை நிறப் பூசண வளர்ச்சியானது இவற்றுக்கு தனித்துவமான நிறத்தை ஏற்படுத்துகிறது.
  • காயங்கள் பரவி, பழம் இறுதியில் அழுகி மற்றும் சிதைந்து போகும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகளானது பழங்களின் தோலில் காணப்படும் மென்மையான, நீர்த் தோய்த்த பகுதிகளின் வளர்ச்சியாகும். ஒரு சில நாட்களுக்கு பிறகு, அசல் காயங்களின் மீது, பெரும்பாலும் பல சென்டிமீட்டர்கள் விட்டத்தினை கொண்டிருக்கும் காயங்கள் மீது வெள்ளை நிறத்தில் வட்ட வடிவில் மேம்போக்கான புள்ளிகள் வளரும். காலப்போக்கில், இந்தப் புள்ளிகள் தோல்கள் முழுவதும் பரவும், மையப்பகுதியில் இருக்கும் பழைய பகுதிகள் ஊதா அல்லது பச்சை நிறமாக மாறும். மேலும் அதனை சுற்றியுள்ள திசுக்கள் பரந்த வெள்ளை நிறப் பூஞ்சையினால் மென்மையானதாக, மற்றும் நீர்த்தோய்த்த அல்லது காலனித்துவப்படுத்தப்பட்டதாக மாறும். பழங்கள் விரைவாக அழிந்து, சிதையும், அல்லது குறைந்த ஈரப்பதத்தில் சுருங்கி, சிதைந்து போகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூடோமோனாஸ் சிரிங்கே திரிபு இஎஸ்சி-10 அடிப்படையிலான உருவாக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் பூஞ்சையின் உயிரியல் கட்டுப்பாட்டை அடைய முடியும். அகேரேட்டம் கான்ஜியாய்ட்ஸ் தாவரச் சாறுகள் பூசணத்திற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. மூலிகை தைமஸ் கேபிடேட்டஸ் மற்றும் வேப்ப எண்ணெய் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் 'அத்தியாவசிய எண்ணெய்' இதே போன்ற விளைவைக் கொண்டிருக்கிறது. தேநீர் சாபோனின் பாதுகாப்பான கலவை என்று கருதப்படுகிறது, மேலும் அறுவடைக்குப் பின்னால் நாரத்தைப் பழங்களின் சிதைவை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அறுவடை செய்யப்பட்டப் பழங்களை 40-50 டிகிரி செல்சியஸில் சோப்பு அல்லது பலவீனமான கார கரைசல் மூலம், பொதுவாக சிலப் பூசணக் கொல்லிகளுடன், கழுவுவதனால் பழச் சிதைவு குறைகிறது. பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சை கொல்லி கலவைகளானது இமாஜலீல், தைபெண்டாஜோல் மற்றும் பைபெனில் ஆகும்.

இது எதனால் ஏற்படுகிறது

பென்சிலியம் இனத்தைச் சேர்ந்த இரண்டு வகையான பூஞ்சைகள் இந்த நாரத்தைப் பழங்களை அழுகச் செய்து அழிக்கிறது. பி.இடாலிகம் மற்றும் பி.டிஜிடேட்டம் ஆகியவை பழத்தின் தோலில் முறையே ஊதா மற்றும் பச்சை நிறப் பூஞ்சையாக வளர்கிறது. முதலாவது குறிப்பிடப்பட்டுள்ள பூஞ்சையால் ஏற்படும் காயங்கள் இரண்டாவதை விட மெதுவாக பரவும். இவற்றின் வளர்ச்சி மையப்பகுதியில் இருக்கும் பழைய வளர்ச்சியைச் சுற்றி வளரும் இளம் வெள்ளைப் பூசணப் பட்டைகளின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இந்தப் பூஞ்சைகள் சந்தர்ப்பவாதி இனத்தை சார்ந்தவை, மேலும் இவை தனது வாழ்கை சுழற்சியை துவங்கப் பழ தோலில் இருக்கும் காயங்களை பயன்படுத்திக்கொள்கிறது. காயங்கள் ஏற்பட்ட இடத்தின் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலம் வித்துக்கள் முளைக்கிறது. 24 ° செல்சியஸ் உகந்த வெப்பநிலையில், 48 மணி நேரத்திற்குள் தொற்று ஏற்படுகிறது மற்றும் ஆரம்ப அறிகுறிகள் 3 நாட்களுக்குள் தோன்றும். இயந்திர ரீதியாக அல்லது நீர் வழியாக அல்லது காற்று வீசும் போது இந்த வித்துக்கள் பரவக்கூடும். இந்த வித்துக்கள் பெரும்பாலும் மண்ணில் வாழும், ஆனால் அசுத்தமான சேமிப்பு இடங்களின் காற்றிலும் காணப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • பழங்களைக் கையாளும் போது அவற்றுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதில் கவனமாக இருங்கள்.
  • தோட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டப் பழங்களை அகற்றி விடுங்கள்.
  • நிராகரிக்கப்பட்டப் பழங்கள் பேக்கிங் பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
  • நோய் வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக சேமித்து வைக்கும் போது பழங்களை குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
  • அதிக ஈரப்பதம் / குறைந்த வெப்பநிலையில் பழங்களை சேமித்து வைக்கவும்.
  • பேக்கிங் மற்றும் சேமிபின் போது உபகரணங்களை சுத்தம் செய்ய கிருமிநாசினிகளை பயன்படுத்தவும்.
  • மழை பொழியும் போது அல்லது மழை காலத்தை தொடர்ந்து அறுவடை செய்யாதீர்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க