பிஸ்தா பருப்பு

பிஸ்தாவின் இலைப்புள்ளி நோய்

Pseudocercospora pistacina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிற்றிலைகளின் இருபுறமும் உலர்ந்த பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • இலைப்பரப்புகள் வெளிறிய நிறம் அல்லது பழுப்பு நிறமாகி, படிப்படியாக நடுநரம்பை நோக்கி நீண்டு கொள்ளும்.
  • இலைகள் வாடிப்போகும், முன்கூட்டியே உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பிஸ்தா பருப்பு

பிஸ்தா பருப்பு

அறிகுறிகள்

இந்த நோயானது சிற்றிலைகளின் இரு பக்கங்களிலும் வட்ட வடிவத்திலிருந்து ஒழுங்கற்ற சிதைந்த புள்ளிகளை ஏற்படுத்தும், அப்புள்ளிகள் பழுப்பு முதல் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில், இந்தப் புள்ளிகள் மிகவும் அதிகமாகி 1 முதல் 2 மிமீ விட்டம் வரை அடையலாம். காலப்போக்கில், இலைப் பரப்பு படிப்படியாக வெளிர் பச்சை நிறமாகவும் பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறும், ஓரத்திலிருந்து தொடங்கி நடுநரம்பை நோக்கி நீண்டு கொள்ளும். கடுமையான தாக்குதலால் இலைகள் வாடி, முன்கூட்டியே உதிரும். பழங்களில் மிகச் சிறிய புள்ளிகளும் உருவாகலாம். இந்த நோயின் கடுமையான தொற்றுநோய்கள் முன்கூட்டிய இலையுதிர்வை ஏற்படுத்தும், மரத்தின் வீரியத்தைக் குறைக்கும். தாக்குதலின் ஆரம்பம் பொதுவாக, கடந்த ஆண்டு இலைக் குப்பைகளில் காணப்படும் இனோகுலத்தின் மூலம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

முதல் அறிகுறிகளில், தாமிரம் அல்லது கந்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளைத் தெளிக்கவும். மிகவும் இளம் பழங்களுக்கு தாவரநஞ்சு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, பழங்கள் 1 செமீ அளவை எட்டிய உடனேயே பயன்படுத்திவிட வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். முதல் புள்ளிகள் தோன்றியதிலிருந்து, செயலில் உள்ள தியோபனேட்-மெத்தில் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தி 2 அல்லது 3 முறை தெளிக்கவும். ஜினெப், மான்கோசெப், குளோரோதலோனில் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்ட சிகிச்சை அல்லது செப்பு பூஞ்சைக் கொல்லிகளின் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும், ஆனால் மிகவும் இளம் பழங்களுக்கு தாவரநஞ்சு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க பழங்கள் 1 செமீ அளவை எட்டிய உடனேயே பயன்படுத்திட வேண்டும். எதிர்ப்புத்திறன் ஏற்படுவதைத் தவிர்க்க வெவ்வேறு செயலில் உள்ள பொருட்களை மாற்றி மாற்றி பயன்படுத்தவும். மொட்டு வெடிப்பில் இருந்து செய்யப்படும் தடுப்பு சிகிச்சைகள் நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

மைகோஸ்பேரெல்லா இனத்தைச் சேர்ந்த பல பூஞ்சைகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எம்.பிஸ்டாசினா மூலம் முக்கியமாக ஏற்படுகின்றன. முந்தைய பருவங்களில் மரத்தில் இருக்கும் போது பாதிக்கப்பட்டு மண் குப்பைகள் மீது விழும் இலைகளில் இது குளிர்காலத்தைக் கழிக்கும். முதன்மை மாசுபாடு இந்த இலைகளில் இருந்து பூஞ்சை இனோகுலம் வழியாக ஏற்படும். மழைச் சாரல்கள் வித்துகளின் பரவலுக்கு உதவுகின்றன. இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் பிற வகை வித்துகளால் ஏற்படுகின்றன, இவை பருவத்தின் பிற்பகுதி வரை மழை அல்லது தெளிப்பு நீர் மூலம் பரவுகின்றன. 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பநிலை, ஈரப்பதமான காலநிலை மற்றும் மூடுபனி ஆகியவை நோய்க்கிருமியின் இனப்பெருக்கம் மற்றும் பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலைகளாகும்.


தடுப்பு முறைகள்

  • முதல் புள்ளிகள் ஏதெனும் தென்படுகிறதா என்பதைக் கண்டறிய பழத்தோட்டத்தை தவறாமல் பரிசோதிக்கவும்.
  • உதிர்ந்த இலைகளை சேகரித்து அவற்றை எரிக்கவும்.
  • தாவரங்களின் இயற்கை எதிர்ப்புத்திறனை மேம்படுத்த மரங்களுக்கு உரமிடவும் அல்லது கரிமப் பொருட்கள் மூலம் உங்கள் மண்ணை வளப்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டமான விதானங்களைப் பெறுவதற்கும், நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் செயலற்ற காலத்தின் போது வழக்கமான சீர்திருத்தைத் திட்டமிடுங்கள்.
  • பழத்தோட்டம் மற்றும் சுற்றிலுமுள்ள மாற்றுப் புரவலன் தாவரங்கள் மற்றும் களைகளை சுத்தம் செய்யவும்.
  • நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க ஈரமான வானிலையில் நோயுற்ற தாவரங்களைத் தொடாதீர்கள்.
  • தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • இலையுதிர்காலத்தின் பிற்பகுதியிலும், குளிர்காலத்தின் தொடக்கத்திலும் காய்ந்த இலைகளை ஆழமாக உழுது புதைக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க