தக்காளி

இலைப் பூசண நோய்

Mycovellosiella fulva

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறச் சிதைந்த புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • ஆலிவ் பச்சை முதல் சாம்பல் ஊதா நிறம் வரையிலான திட்டுக்கள் இலைகளின் அடிப்புறத்தில் காணப்படும்.
  • இலைகள் உலர்ந்து சுருண்டுக்கொள்ளும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

இலைகளின் இருபுறங்களிலும் அறிகுறிகள் காணப்படும் மற்றும் சிலவேளைகளில் கனிகளிலும் காணப்படும். முதிர்ந்த இலைகள் முதலில் பாதிக்கப்படுகின்றன மற்றும் பின்னர் மெதுவாக இவை இளம் இலைகளைப் பாதிக்கின்றன. இலையின் மேற்புறத்தில் சிறிய, சிதைவுகள், வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வரையறுக்கமுடியாத ஓரங்களைக் கொண்டு காணப்படும். இலையின் அடிப்புறத்தில் ஆலிவ் பச்சை முதல் சாம்பல் ஊதா நிறம் மற்றும் பட்டுபோன்ற அடையாளங்கள் இலைப் புள்ளிகளுக்குக் கீழ் உருவாகும். இவை வித்துக்களை உருவாக்கும் அமைப்பாக மற்றும் வித்துக்களின் திரளாக (கோனிடியா) அமையும். பின்னர், இந்த சிதைவுகள் பெரிதாகும், இலையின் நிறம் மஞ்சளில் (பச்சையச் சோகை) இருந்து பழுப்பு நிறமாகும் (திசு அழுகல்) மற்றும் இலைகள் உலர்ந்து, சுருண்ட தோற்றத்தினைப் பெறும். இலைகள் முதிரும் முன்பே உதிரும், மோசமான பாதிப்புகளில் இவை இலை உதிருதலுக்கு ஏதுவாக அமையும். இந்த நோய்க்காரணிகள் பூக்கள் அல்லது கனிகளில் வித்தியாசமான அறிகுறிகளுடன் நோயை ஏற்படுத்துகின்றன. பூக்கள் கருப்பாக மாறும் மற்றும் கனிகள் உருவாகும் முன்னரே இறந்துவிடும். பச்சை நிறம் மற்றும் கனிகளின் உரிதல் மிருதுவான கருப்பு நிற ஒழுங்கற்றப் பகுதிகளை தண்டுகளின் முடிவில் ஏற்படுத்துகின்றன. நோய் வளரும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகள் குழிந்த தோற்றம் பெறும், உலர்ந்துபோகும் மற்றும் முரட்டுத் தோல் தோற்றம் பெறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைச் சிகிச்சைகளை சூடான நீரில் (122 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 50 டிகிரி செல்சியஸ், 25 நிமிடங்களுக்கு) செய்து நோய்க்காரணிகள் விதைகளில் பரவாமல் தடுக்கலாம். அஸ்ரேமோனியம் ஸ்டிரிக்டம், டைசைமா புல்வினாடா, டிரைகோடெர்மா ஹார்சியனம் அல்லது டிரைகோடெர்மா விரிட் மற்றும் டிரைகோதெசியம் ரோசியம் போன்ற பூஞ்சைகள் மைகோவெல்லோசியெல்லா ஃபுல்வா நோய் பூஞ்சைகளுக்கு எதிரானவை மற்றும் இவை பரவுவதை குறைக்கவல்லவை. பசுமை வீடுகளில் அஸ்ரேமோனியம் ஸ்டிரிக்டம், டிரைகோடெர்மா விரிட் ஸ்டரைன் 3 மற்றும் டிரைகோதெசியம் ரோசியம் போன்றவை முறையே 53, 66 மற்றும் 84% இருக்கும் கலவையானது மைகோவெல்லோசியெல்லா ஃபுல்வா பூஞ்சைகளைத் தடுக்கவல்லவை. சிறிய கருவிகள், ஆப்பிள்-சாறு, பூண்டு அல்லது பால் தெளிப்புகள் மற்றும் வினிகர் கலவையினை பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்குச் சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் சேர்த்துக் கையாளவும். சுற்றுச்சூழல் நிலைமைகள் நோய் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது பயன்பாடுகள் நோய்த்தொற்றுக்கு முன்னர் செய்யப்பட வேண்டும். குளோரோதலோனில், மானெப், மான்கோசெப் மற்றும் காப்பர் கலவைகள் கொண்ட கலவைகளைப் பயன்படுத்தலாம். பசுமை வீடுகளுக்கு, டைஃபெனோகோனாஸோல், மான்டிப்ரோபமிட், சைமோக்ஃஸனில், ஃபாமோஃக்ஸடோன் மற்றும் சைப்ரோடினில் போன்றவற்றினைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மைகோவெல்லோசியெல்லா ஃபுல்வா எனும் பூஞ்சைகளால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இந்த பூஞ்சைகளின் வித்துக்கள் எவ்வித புரவலன் பயிர் வகைகளின் துணையில்லாமலே சுமார் 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை அறை வெப்பநிலையில் உயிர்வாழக் கூடியவை. நீண்ட காலமாக இலையின் ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சித் தன்மை 85% இருப்பது வித்துக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெப்பநிலை 4-34 டிகிரி செல்சியஸாக இருப்பது, முக்கியமாக 24-26 டிகிரி செல்சியஸாக இருப்பது வித்துக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். உலர்ந்த நிலைகள் மற்றும் இலைகளின் நீரற்ற நிலை போன்றவை வித்துக்களின் வளர்ச்சியினைத் தடுக்கும். இலை கூர்முனைப்பகுதிகளின் இருபுறங்களிலும் சிதைவுகள் தொடங்கிய பிறகு, அடுத்த 10 நாட்களில் நோய் அறிகுறிகள் தென்படும். இலையின் அடிப்பகுதியில் வித்துக்களை உருவாக்கும் அமைப்புகள் எண்ணற்ற அளவில் இருக்கும், இவை ஒரு பயிரிலிருந்து பிற பயிருக்கு காற்று மற்றும் நீர் தெளித்தல் மூலம் எளிதில் பரவுகின்றன, இவை தவிர கருவிகள், பணிபுரிபவர்களின் துணிகள் மற்றும் பூச்சிகள் மூலமும் பரவுகின்றன. அதிக ஈரப்பதமான சூழல்களில், ஸ்டோமடா எனும் இலைகளின் மேல் தோல் துளைகளின் வழியே, நோய்க்காரணிகள் உள் நுழைகின்றன.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட, நோய்தொற்று இல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்புவகை அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்கள் உங்கள் பகுதிகளில் கிடைத்தால் அவற்றினைப் பயிரிடவும்.
  • குறித்த காலத்திற்கு முன்னரே பயிரிட்டு நோயின் வீரியத்தினைக் குறைக்கவும்.
  • வரிசையாகப் பயிரிடும்போது, அவற்றிற்கு இடைப்பட்ட இடைவெளியினைச் சரியான வகையில் அமைத்து பயிரின் மேற்பகுதிக்குக் குறைவாக ஈரப்பதமும், காற்றோட்டம் சரியான வகையிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
  • களத்தினைக் கண்காணித்து நோயால் தாக்கப்பட்ட மற்றும் முரட்டுத் தன்மையான தோற்றம் கொண்ட பயிர்களைக் கண்டறியவும்.
  • அதிகப்படியாக நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • பசுமை வீடுகளில் காற்றோட்டத்திற்கு வழிவகை செய்யவும்.
  • ஒப்பு ஈரப்பதத்தினை 85 சதவீதத்திற்குக் கீழும் மற்றும் இரவு நேர வெப்பநிலையினை வெளிப்புற வெப்பநிலையினை விட அதிகமாகவும் வைத்திருக்கவும் (பசுமை வீடுகளுக்குப் பொருந்தும்).
  • சொட்டு நீர்ப் பாசனத்தை உபயோகித்தல் மற்றும் நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்.
  • குச்சிகள், கயிறுகள் அல்லது கிளைகளை நறுக்கி திருத்தம் செய்தல் ஆகியவற்றின் மூலம் பயிரினை நேராக நிற்க வைக்க முயற்சி செய்யவும் மற்றும் இதன் மூலம் காற்றோட்டத்தினை உள்புறம் மற்றும் சுற்றி அதிகரிக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களை நீக்கவும் மற்றும் அழிக்கவும் (எரித்துவிடவும்).
  • பயிர்களுக்கு இடைப்பட்ட பசுமை வீடுகளைச் சுத்தத்துடனும், சுகாதாரத்துடனும் பேணவும், கருவிகள் மற்றும் கருவிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான உயர்ந்த சுகாதார தரத்தைப் பராமரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க