பருத்தி

பருத்தியின் செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

Mycosphaerella gossypina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • ஆரம்பத்தில், இலைகளில் சிவப்புநிற சிதைவுகள் தோன்றி, பின்னர் விரிவடைந்து, சாம்பல் நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை மாறி, ஊதா அல்லது கருமையான விளிம்பைக் கொண்டிருக்கும்.
  • புள்ளிகள் விரிவடையும் போது, அவற்றின் விளிம்புகளில், ஒத்த மையம் கொண்ட மங்கிய வளையங்களும், பிரகாசமான வளையங்களும் மாறி மாறி அமைந்திருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

இந்த நோய் முதிர்ந்த தாவரங்களின் முதிர்ந்த இலைகளைப் பாதிக்கிறது. நோய்த் தொற்றின் ஆரம்ப கட்டங்களில், இலைகளில் சிவப்புநிற சிதைவுகள் தோன்றும். நோய் முன்னேறும் போது, இந்தச் சிதைவுகள் பெரிதாகி, ஊதா, அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற ஓரங்களுடன், மையப்பகுதி வெள்ளையிலிருந்து இளம் பழுப்பு நிறமாகவோ சாம்பல் நிறமாகவோ மாறுகின்றன. சிதைவுகள் வட்ட வடிவத்திலோ, ஒழுங்கற்ற வடிவத்திலோ இருக்கும். நோய் தொற்று ஏற்பட்ட நேரத்தைப் பொறுத்து, அவற்றின் அளவு வேறுபடுகின்றன. புள்ளிகளில், ஒத்த மையம் கொண்ட மங்கிய வளையங்களும், பிரகாசமான வளையங்களும் மாறி மாறி அமைந்திருக்கும் பகுதிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறிய நிறத்தைக் கொண்டு, இறுதியில் உதிர்ந்து விடுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றளவும், உயிரியல் கட்டுப்பாட்டு முறை எதுவுமே அறியப்படவில்லை. நோயின் நிகழ்வையோ வீரியத்தையோ குறைக்க ஏதாவது முறையை நீங்கள் வெற்றிகரமாக முயற்சி செய்து பார்த்து இருந்தால், தயவு செய்து எங்களுக்குத் தெரிய படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். 2 கிலோகிராம் / ஹெக்டேர் அளவில் மான்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு கொண்டிருக்கும் தெளிப்புகளை நோயின் ஆரம்ப நிலையில் பயன்படுத்தவும். 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று தெளிப்புகள் வழங்கப்படலாம். அதே விகிதத்தில், கார்பென்டிஸெம் 3 கிராம் / லிட்டர், கேப்டான் 2 கிராம் / லிட்டர் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளும் நல்ல பலனைக் கொடுக்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள், பருத்தி தாவரங்களைத் தாக்கும் மைக்கோஸ்ஃபோரெல்லா கோஸ்ஸிபீனா என்னும் செர்க்கோஸ்போரா குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூஞ்சையால் ஏற்படுகின்றன. இது சோயா அல்லது மிளகு போன்ற பிற பயிர்களை பாதிக்கும் வகையிலிருந்து மாறுபட்டது. வயலில், இலக்கு புள்ளி (டார்கெட் ஸ்பாட்) போன்ற வேறு இலை நோய்களிலிருந்து செர்க்கோஸ்போரா இலைப் புள்ளியை வேறுபடுத்துவது கடினமானது. எனினும், வறட்சி அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறை (முக்கியமாக பொட்டாசியம்) போன்ற அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகளை அனுபவிக்கும் பருத்தி தாவரங்களில் இது அடிக்கடி காணப்படுவதே இந்த நோயின் குறிப்பிடத்தக்கத் தன்மை ஆகும். முறையான உரமிடும் திட்டத்தினால் தாவர வீரியத்தைப் பராமரிப்பதும், சரியான பாசனத்தினால் வறட்சியின் அழுத்தத்தைத் தடுப்பதும், முதன்மை நோய்த் தாக்கங்களை பெரிதும் தாமதப்படுத்த உதவுகிறது. இது திடீரென பாதிப்புக்கு உள்ளாகும் தீவிரத்தையும் குறைக்கும். 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்த நோய்க்குச் சாதகமாகின்றன. காற்றோட்டத்தினாலும், நீர் தெளிப்பாலும் ஆரோக்கியமான இலைகளில் வித்துகள் பரவுகின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தியும், சகிப்புத் தன்மையும் கொண்ட வகைகள் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களை அகற்றி, வயலுக்குத் தொலைவில் அவற்றை அழித்துவிடவும்.
  • தாவரங்களில் அழுத்தத்தைக் குறைக்க, ஒரு சமநிலையான உரமிடுதலையும் (குறிப்பாக பொட்டாசிய பயன்பாடு) சரியான பாசனத்தையும் பராமரிக்கவும்.
  • அறுவடைக்குப் பின் தாவர மிச்சங்களை, ஆழமான குழிகளில் புதைத்தோ வயலுக்குத் தொலைவில் எரித்தோ அவற்றை அப்புறப்படுத்தி விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க