மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் பழுப்பு நிறப் புள்ளி நோய்

Physoderma maydis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய, மஞ்சள் முதல் பழுப்பு நிறப் புள்ளிகள் இலைகள், தண்டுகள், இலை உறைகள் மற்றும் உமிகளில் காணப்படும்.
  • நோயுற்றத் திசுக்களின் பட்டைகள் இலைகளின் பெரும் பகுதியை மூடிவிடக்கூடும்.
  • முக்கிய நரம்பு நெடுகிலும் அல்லது அவற்றுக்கு அருகில் கரும் பழுப்பு முதல் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

நோய்த் தொற்றானது சிறிய, மஞ்சள் முதல் பழுப்பு நிறப் புள்ளிகள் இலைகள், தண்டுகள், இலை உறைகள் மற்றும் உமிகளில் காணப்படும். நோய் அதிகரிக்கையில், இந்த புள்ளிகள் பெரிதாகி, எண்ணிக்கையில் மிகவும் அதிகரிக்கும். இதன் விளைவாக ஏற்படும் நோயுற்றத் திசுக்களின் பட்டைகள் அல்லது வரிகள் இலைகளின் பெரும்பகுதியை மூடிக்கொள்ளும். அவற்றின் நிறம் வழக்கமாக மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறும், மேலும் அவை சில வகை துரு நோய்களால் ஏற்படும் அறிகுறிகளை நினைவூட்டும். இருப்பினும், துரு நோய்களுக்கு மாறாக, பி.மேடிஸ் என்பவற்றின் காயங்கள் அடிக்கடி இலைகள் முழுவதும், குறிப்பாக அதன் அடிப்புறத்தில் பிரித்தறியக்கூடிய பட்டைகளாக உருவாகும். மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், கவனத்தைக் கவர்கின்ற கரும் பழுப்பு முதல் கருப்புப் புள்ளிகள் முக்கிய நரம்பின் மீதும் அல்லது அவற்றுக்கு மிக அருகிலும் காணப்படும். எளிதில் நோய் ஏற்படக்கூடிய இரகங்களில், நடு நரம்புகள் இந்த காயங்கள் மூலம் மூடப்படக்கூடும் மற்றும் இவை சாக்லேட் நிறத்திலிருந்து செம்பழுப்பு அல்லது கத்தரிப்பு நிறம் வரை மாறுபடக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள்வரை, பி.மேடிஸ் என்பவற்றுக்கு எதிரான உயிரியல் சிகிச்சை எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். இந்த நோய் ஏற்படுவதையும், எதிர்பாராத திடீர் படையெடுப்பையும் தடுப்பதற்கு வேளாண் கட்டுப்பாடு மிகவும் முக்கியமான நடைமுறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய் அவ்வப்போது ஏற்படுவதாலும், விளைச்சலின் மீது குறைந்தப் பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாலும், பி.மேடிஸ் என்பவற்றுக்கு எதிரான இரசாயன சிகிச்சை எதுவும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது பைசோடெர்மா மேடிஸ் என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது, இந்த பூஞ்சையானது பாதிக்கப்பட்ட பயிர்கள் குப்பைகள் அல்லது மண் (சாதகமான சூழ்நிலைகளில் 7 ஆண்டுகள் வரை) ஆகியவற்றில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். இந்த நோயானது தொடர்ச்சியாக சோளம் பயிர் செய்யப்படும் வயல்களிலும் அல்லது உதாரணமாக, குறைவாக நிலத்தை உழும் செயல்முறையை மேற்கொள்ளும் இடங்களில், அதிகப்படியான பயிர்க் குப்பைகள் இருக்கும் வயல்களிலும் பொதுவாக காணப்படும். தொற்று நோயானது பொதுவாக, மழை அல்லது நீர் பாய்ச்சியதற்குப் பிறகு தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய பெருஞ்சுழலில் தொடங்குகிறது. அங்கிருந்து, இரண்டாம் நிலை நோய்த் தொற்றானது காற்று அல்லது நீர்த்துளி மூலம் பிற தாவர வட்ட அடுக்குகளுக்கு (பெருஞ்சுருள்) பரவுகிறது. எனவேதான் அறிகுறிகளானது முதிர்ந்த இலைகளின் அடிப்பகுதியில் மிகவும் கவனத்தை ஈர்க்கின்றவாறு தெரிகிறது. உகந்த நிலைகளான ஒளி மற்றும் வெப்பநிலை போன்றவையும் இவற்றுக்குத் தேவை. மொத்தத்தில், இந்த நோய் தீவிரமானதல்ல மற்றும் இது விளைச்சலில் சிறிய பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூஞ்சையானது பாதிக்கப்பட்ட பயிர்க் கழிவுகள் அல்லது மண்ணில் 2-7 ஆண்டுகளுக்கு வாழக்கூடும் என்பதால், பரந்த அளவிலான பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.
  • ஆழமாக உழுவதன் மூலம் அல்லது வயலுக்கு அப்பால் சென்று எரிப்பதன் மூலம் பயிர்க் கழிவுகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க