மற்றவை

வெள்ளரி இனங்களின் இலை கருகல் நோய்

Alternaria cucumerina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய, வட்ட வடிவ, வெள்ளை நடுப்பகுதியுடன் வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும், பின்னர் அவை பெரிதாகி, இளம் பழுப்பு நிற செறிவான புள்ளிகளாக மாறும்.
  • பழங்களின் மேற்பரப்பில் கருமையான ஆலிவ் அல்லது கருப்பு நிறத் துகள்கள் பாய் போன்று படிந்து இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

அறிகுறிகள் முதன்முதலில் தாவரங்களின் நடுப்புற மற்றும் மேல் பகுதியில் உள்ள சிறிய இலைகளில் சிறிய, வட்ட வடிவில், வெள்ளை நடுப்பகுதியுடன் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இந்தப் புள்ளிகள் பெரிதாகி, வெளிர் பழுப்பு நிறமாகி மற்றும் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த புள்ளிகளினுள் உள்ள சிறிய இலை நரம்புகள் கருத்து, வலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில், இலைகளின் மேற்பரப்புகளில் மட்டும் காணும் வகையில் செறிவான வளையங்கள் உருவாகும், இதனால் அந்த புள்ளிகள் இலக்கு போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. இந்த வட்ட புள்ளிகள் இறுதியில் முழு இலைகளையும் பாதித்து மற்றும் இலை உதிர்வை ஏற்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பழங்கள் மீது வட்ட வடிவில், பழுப்பு நிற நீர் தோய்த்த காயங்கள் காணப்படும், இது பிறகு கருப்பு ஆலிவ் முதல் கருப்பு நிறத் துகள்கள் பாய் போன்று அந்தக் காயங்களை மூடிக்கொள்ளும். அறுவடை செய்யும் போது கண்டறியப்படாத பழத் தொற்று சேமிப்பு அல்லது போக்குவரத்தின் போது ஏற்படும் இழப்புகளுக்கு காரணமாகலாம். தாவரங்களின் மற்ற பகுதிகளில் நேரடியாக பாதிப்பு ஏற்படாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நடவு செய்த பிறகு வைக்கோல் தழைக்கூளங்களை உடனடியாகப் பயன்படுத்துதல், மண்ணிலிருந்து இலைகளின் கீழ்ப்பகுதிகளுக்கு ஏ.குக்குமெரினா வித்துக்கள் பரவுவதை திறன்படக் குறைக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அஜாக்சிஸ்டுரோபின், பாஸ்கலிட், குளோரோதலோனில், செப்பு ஹைட்ராக்சைடு, மான்கோசெப், மானெப் அல்லது பொட்டாசியம் பைகார்போநெட் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். எனினும், குளோரோதாலோனில் கொண்ட தயாரிப்புகள் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவற்றின் பயன்பாட்டு அட்டவணை மற்றும் உபயோகிக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றின் உள்ளடக்கங்கள் வேறுபடுகின்றன. அதற்கு முன்பாக, அந்தந்த பயன்பாட்டு வழிமுறைகளைப் படித்துப் பாருங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

முலாம்பழம் மற்றும் அதன் தொடர்புடைய வெள்ளரி இனங்களில் ஏற்படும் நோய்தொற்றுக்கான அறிகுறிகள் ஆல்டர்னேரியா குக்குமெரினா என்னும் மண்வழிப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது மண் அல்லது களைகளில் உள்ள பயிர் கழிவுகள் மற்றும் பிற வெள்ளரி புரவலன்களில் வாழ்கிறது. மழைப்பொழிவு, அதிகப்படியான நீர்ப்பாசனம், காற்று, சாகுபடி, உபகரணங்கள் மற்றும் வயல் தொழிலாளர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. சூடான வெப்பநிலை மற்றும் பனியிலிருந்து ஈரப்பதம், மழை அல்லது மேல்நிலைப்பாசனம் ஆகியவற்றின் ஈரப்பதம் இந்த நோய்க்குச் சாதகமாக உள்ளது. இரண்டு முதல் எட்டு மணி நேரம் இலை ஈரப்பதத்துடன் இருக்கும்போது இந்த நோய்த்தொற்று ஆரம்பிக்கக்கூடும், ஆனால் இலையின் ஈரப்பத நேரம் அதிகரிக்கும் போது, நோய்த்தொற்றின் நிலை அதிகரிக்கிறது. மழைப்பொழிவின் அளவை விட, மழைப்பொழிவு எத்தனை முறை ஏற்படுகிறது மற்றும் பனிக் காலங்களின் அளவு நோய் வளர்ச்சியில் பெரும்பங்கினை வகிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய்க்கான எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் எதுவும் இல்லை.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • 1-2 ஆண்டுகளுக்கு வெள்ளரி இனங்களைத் தவிர்த்து பிற பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளவும்.
  • பயிர் அழுத்தத்தை குறைந்தபட்சமாக ஆக்குங்கள் எ.கா.
  • சமநிலையான ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் குறைக்கலாம்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களில் உயர்ந்த தரமான சுகாதாரத்தைப் பராமரிக்கவும்.
  • முடிந்தால் மேல்நிலை தெளிப்பான்களுக்கு பதிலாக சொட்டு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தவும்.
  • ஈரமாக இருக்கும் போது தாவரங்களில் வேலை செய்யக் கூடாது.
  • பருவ காலத்தின் இறுதியில் தாவரக் குப்பைகளை அகற்றவும்.
  • கழிவுகளை வயலில் ஆழமாக தோண்டி புதைப்பதன் மூலமாகவோ அல்லது தூரமாகச் சென்று எரிப்பதன் மூலமாகவோ அழிக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க